இறைமகன் இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அன்பு வழியை அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவம் பேணி நேயத்துடன் வாழ்ந்திட எனது மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று இரவு கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புயல் மற்றும் கனமழையால் சேதமடைந்த இளமையாக்கினார் திருக்கோவிலின் குளக்கரை சுற்றுச்சுவர் மற்றும் சேதமடைந்த சாலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன் மேலும் உப்பனாற்று வடிகாலில் நடந்து வரும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டேன்.
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண நிதி மற்றும் நிவாரண உதவிகளை நேற்று (08.12.2020) வழங்கினேன்.
சென்னை புறநகர் பகுதியான காரப்பாக்கத்தில் "நிவர்" புயலின் போது பெய்த கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களை இன்று (30.11.2020) பார்வையிட்டு, அப்பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன். #NivarCyclone
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையினால் சென்னை - பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள சதுப்பு நில பகுதிகளை இன்று (30.11.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். #NivarCyclone
மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள்,என்னை இன்று இரவு 9.00 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அச்சமயம், தமிழ்நாட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே "தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.
இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக���கு ஒற்றுமையாக உழைப்போம்!