TNPSC Group 4 தேர்வில் வேலை பெறப்போகும் 10,292 பேர்களில், குறைந்தது 3000 பேர் Group 2 தேர்வில் வென்று பணி மாறிவிடுவர்.
இதனால் Group 4 தேர்வையே நம்பியிருந்த 3000 பேர் பாதிக்கப்படுவர்.
எனவே Group 4-தேர்வில் 15,000 பணியிடங்களாக உயர்த்தி நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கு "குரூப் 4 (2022)க்கான காலி பணியிடங்களை 10292 இல் இருந்து குறைந்தபட்சம் 15000 ஆக உயர்த்தி கலந்தாய்வை நடத்த வேண்டுதல்" தொடர்பாக இணையதள வாயிலாக கோரிக்கை வைத்தேன்..!
தேசிய காகிதமில்லா சட்டப்பேரவை திட்டத்தை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தினால் வழங்கிய பாராட்டு சான்றிதழை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற போது!
Tnpsc group 4(2022) காலிப் பணியிடங்களை 10117 இல் இருந்து 15,000 ஆக உயர்த்த வேண்டுமென்ற மாணவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தருகின்றன. அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாகும..
@jeevasagapthan1@paramporul
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல... 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 631 மட்டுமே உயர்த்தப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேவை என்ற யானைப்பசிக்கு இது சோளப்பொறி போன்றது தான். இது போதுமானதல்ல.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித்தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த மார்ச் 25-ஆம் நாள் போட்டித்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 3 மாதங்களாகிவிட்ட நிலையில் இன்று வரை சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து பணியமர்த்தல் ஆணைகள் வழங்கப்படவில்லை. நான்காம் தொகுதி தேர்வு அறிவிக்கப்பட்டு, இதுவரை 15 மாதங்களாகி விட்ட நிலையில், இந்த 15 மாதங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாகியிருக்கக் கூடும். அந்த இடங்களைக் கூட நிரப்பாமல் 10,748 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படும் என்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணியாளர்கள் தான் பெரும்பாலும் மக்களுக்கு நேரடியாக பணி செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகள் பாதிக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் மூன்று முறை மட்டும் தான் நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் இம்முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் மூலம் குறைந்தது 30 ஆயிரம் நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று படித்த இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நான்காம் தொகுதி பணிகள் ஆகும். இந்த காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு 50,000 நான்காம் தொகுதி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் இருண்ட வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்றவேண்டும்.
@CMOTamilnadu
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுடன் மேலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் காலிப் பணியிடங்களையும் சேர்த்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்து அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்த தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
https://t.co/GOLrriJMeF
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் ,
ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
உலகெங்கும் வாழும் எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது வருடம் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் சேர்க்க வேண்டுகிறேன்.
🙏🙏
வேட்டுவகவுண்டர் இன மாமன்னர் வள்ளல் வல்வில் ஓரியை
கொங்கு வேளாளர் என்று சொந்தம் கொண்டாடி எழுதிய கொங்கு பெருமகன் என்ற போலி நூலினை எழுதியவனையும் அந்த போலி நூலினை பற்றியும் வருகின்ற (ஞாயிறு https://t.co/WLVpKtEGQu) அன்று முகநூல் நேரலையில் உரையாட உள்ளேன். அனைவரும் தவறாமல் காணுங்கள்..