#சாதி#நிறம்#பணம்
அனைத்தும்
#நொறுங்கியது#தவெக தலைவர் சகோதரர் #விஜய்க்கு வாழ்த்துகள்.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயலுங்கள்.
When the going gets tough, the tough gets going and i hope you are tough.
நம்பிக்கையை பொய்யாக்கி விடாதீர்கள்.
மருத்துவர் ஐயா, கச்ச தீவை மீட்க கடலில் இறங்கி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்.
1974 ஆம் ஆண்டில் இந்திராகாந்தி அம்மையார் அவர்களால் இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது கச்சத்தீவு.
கட்சி தீவை மீட்டெடுக்க 1995 ஆம் ஆண்டு மற்றும் 1997 ஆம் ஆண்டு ம��ுத்துவர் ஐயா அவர்களுடைய தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பெரும்படை படகுகளில் ஏறி கச்சத்தீவை மீட்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது.
பாமகவின் நிறுவனர் மருத்துவர் ஐயாவுக்கு அன்புமணி அவர்கள் செய்த துரோகம் மக்கள் அனைவரும் அறிந்ததே..
அய்யா மற்றும் சசிகலா அவர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடியார் மற்றும் அன்புமணி அவர்களுக்கு இந்த தேர்தல் தக்க பாடமாக இருக்கும்
எதிரி கூட வாழலாம் ஆனால் துரோகி.?
முடிவு மக்கள் கையில்.
இருளர் வாழ்வுரிமைப் போரும், மருத்துவர் ஐயாவும்.
"வாழவும் வழியில்லை... சாகவும் இடமில்லை..." என்று கண்ணீரோடு நின்ற இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது பாட்டாளி மக்கள் கட்சி!
அரியலூர் மாவட்டத்தின் #ஆண்டிமடம் தொகுதியில் அன்று தொடங்கிய அந்த அறவழிப் பயணம், இன்று "ஐயா நகர்" என கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
முக்கிய வரலாற்றுப் பதிவுகள்:
2001 ஆண்டிமடம்: தேர்தல் பரப்புரைக்கு வந்த மருத்துவர் ஐயா அவர்களிடம் இருளர் மக்கள் வைத்த உருக்கமான கோரிக்கை: "எங்களுக்கு வீடு கட்டவும், மயானம் அமைக்கவும் நிலம் வேண்டும்."
சொன்னதைச் செய்தோம்: தேர்தல் முடிந்த அன்றே (மே 13, 2001), அரசு நிதியுதவியின்றி, பாட்டாளி மக்கள் கட்சியின் சொந்த முயற்சியால் திராவிடநல்லூரில் 20 சென்ட் நிலம் பெறப்பட்டு மயானம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
மாவீரன் ஜெ.கு���ுவின் களம்: #அரியலூர் மாவட்டம், முதுகுளம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 1.5 ஏக்கர் நிலத்தை மீட்டு, 30 இருளர் குடும்பங்களுக்குப் பட்டா பெற்றுத் தந்தது மாவீரன் குருவின் அதிரடி நடவடிக்கை!
#பாப்பாக்குடி விடியல்: அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடியில் வன்னியர் மற்றும் முதலியார் சமுதாயப் பெரியவர்களிடம் இருந்து நிலம் பெற்று, 60 வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டன.
வழக்கமாக அதிகாரிகள் வழ��்கும் பட்டாக்களை, பாமகவின் அயராத உழைப்பைப் பாராட்ட��, "மருத்துவர் ஐயா அவர்களே வழங்க வேண்டும்" என மாவட்ட நிர்வாகமே கேட்டுக் கொண்டது.
இன்று அரியலூர் பாப்பாக்குடியில் "ஐயா நகர்" என்ற பெயரில் அந்த மக்கள் தலைநிமிர்ந்து வாழ்கிறார்கள்! இது வெறும் அரசியல் அல்ல... ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்கான அர்ப்பணிப்பு!
மருத்துவர் ஐயாவின் முடிவே இறுதியானது.
2026 தேர்தலில்,
கூட்டணி வைத்தாலும் சரி
கூட்டணி வைக்காவிட்டாலும் சரி
எவருடன் கூட்டணி வைத்தாலும் சரி
தனித்து நின்றாலும் சரி
தேர்தலை புறக்கணித்தாலும் சரி
மரு���்துவர் ஐயாவோடு நிற்போம்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர்
மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை!
தேர்வு செய்யப்பட்டு பணி வழங்காத 751 மருத்துவர்களின் கோபம் திமுகவை சும்மாவிடாது
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி வெளியிட்டது.
அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு 1,071 பேர் அரசு உதவி மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி 1,071 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்���ட்டதில் 320 பேருக்கு மட்டும் அதாவது 29.87 சதவீதத்தினருக்கு மட்டும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 751 பேருக்கு வருங்காலத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியானால், அப்போது கலந்தாய்வு நடத்தி நியமன ஆணைகள் வழங்கப்பட��ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுள்ளதா என மக்கள் நல்வாழ்வுத்துறை தெளிவுபடுத்த வேண்டும். தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திமுக அரசு திட்டமிட்டு, அத்தியாவசிய பணி என தேர்தல் ஆணையத்தில் சிறப்பு அனுமதி பெற்று, அரசாணை பிறப்பித்து இத்திட்டத்தின் க���ழ் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா காலகட்டத்தின்போது காத்திருப்புப் பட்டியலில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தற்காலிகமாக தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டதை மேற்கோள்காட்டப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
இப்பணியில் சேருவது நிரந்தரப் பணியாகக் கருதப்படவா��்ப்பில்லை. மேலும் இப்பணிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிப் பகிர்வு தேவைப்படுவதால், கூடுதல் பணியிடங்களை உருவாக்க நிதியமைச்சகத்தின் அனுமதியை பெற முயற்சித்து, அமைச்சகம் அனுமதிக்க மறுத்தால் இதை வைத்து மலிவான அரசியல் ��ெய்யவும் திமுக திட்டமிடக்கூடும்.
ஒரே தகுதியுடைய மருத்துவர்களில் சுமார் 70 சதவீதம் பேருக்கு துரோகம் செய்வது ஏழை எளியமக்களுக்கு சேவை செய்ய உள்ள மருத்துவர்களின் கோபம் சும்மாவிடாது. எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு திமுக வந்து இருப்பது அதன் தோல்வி பயத்தையே வெளிப்படுத்துகிறது.