உனை புரிந்து கொண்ட நிமிடங்களில்
உன் கோபங்களை ஏற்கிறேன்
உனை புரிந்து கொள்ளத் தேவையில்லாத நிமிடங்களில்
உனையள்ளி முத்தமிடுகிறேன்
எனக்கு நீதான் எல்லாம்
உனக்கது புரிந்தாலும் சரி
உனக்கது புரியாமலே போனாலும் சரி
எனக்கு நீதான் எல்லாம் !
சாளரன்
01.06.2026
திரும்பவும் சொல்றேன், கல்யாணம் நீங்க நெனைக்கிற மாதிரி "romantic“லாம் இருக்காது, சம்பாரிக்கணும், வீடு வாங்கணும், புள்ள பெக்கனும், ரெண்டு பக்க வீட்டு ஆளுங்கள சமாளிக்கணும், சமைக்கணும்,கழுவனும், இதெல்லாம் மண்டைல வெச்சா “ரொமான்ஸ்” எங்கடா வரும், BP தான் வரும்.