"கரூர் சம்பவத்துக்கு திமுக தான் முழு காரணம்" என்று என்னுடன் வேலை பார்க்கும் இலங்கை தமிழ் நண்பர் ஒருவர் சொன்னார்.
"ஆதாரத்தை கொடுங்கள், நானும் நம்புகிறேன்" என்று சொன்னேன். "ஆதாரம் தானே? இதோ என்னிடம் இருக்கிறது" என்று சொன்னார்; நாளை தருவதாகவும் சொன்னார். அவர் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் கொடுக்கவில்லை. தினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்; அவர் "விரைவில் அனுப்புகிறேன்" என்று சொல்லி கடந்து விடுவார்.
"தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் மிகவும் தரமான உணவு வழங்கப்படுவதாகவும், விஜய் முதல்வராக வந்ததும்தான் இந்த உத்தரவு வந்திருப்பதாகவும்" உடன் வேலை பார்க்கும் மலையாளி ஒருவர் சொன்னார். வழக்கம் போல ஆதாரம் கேட்டேன். "அரசு உத்தரவு பிறப்பித்ததாக ஏதாவது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி இருக்கிறதா?" என்று கேட்டேன். "இல்லை, ரீல்ஸ்களில் வந்தது" என்று சொன்னார்; ஆனால் "உண்மையாகத்தான் இருக்கும்" என்று அடித்து சொன்னார். ஒரு மாதமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன், ஆதாரம் கொடுத்த பாடில்லை.
அதேபோல, இன்று காலையில் "மோடி அரசாங்கம் தொகுதி மறுமுறையை திரும்பக் கொண்டு வரப் போகிறது; அதற்கு திமுகவும் உடன்படுகிறது" என்று ஒரு செய்தி வந்ததாக சொன்னார். அதற்கு ஆதாரம் கேட்டேன், வழக்கம் போல. "நீங்கள் என்ன எதற்கு எடுத்தாலும் ஆதாரம் கேட்கிறீர்கள்? இதுதான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வருகிறது அல்லவா? அதைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியாதா?" என்று என்னிடம் கோபப்படுகிறார்.
எம்.எல்.எம் (MLM) நிறுவனம் என்ற பெயரில் சதுரங்க வேட்டை மோசடிகள் தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்; நாம் பார்த்திருப்போம். எதையும் ஆராயாமல் நம்பி விடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஒவ்வொரு முறையும் மக்களுக்கு தெரிய வந்தாலும், தெளிந்தாலும், திரும்பவும் ஏதாவது ஒரு வகையில் வேறு ஏதோ ஒரு கம்பெனியில் பணத்தைக் கட்டி மாட்டிக் கொள்வார்கள் அப்பாவி மக்கள். எனவே, எம்.எல்.எம் போன்ற ஏமாற்று கம்பெனிகள் இங்கு கடைவிரித்து, பல்லாயிரம் ரூபாய்களை சுருட்டி விட்டு, பல கோடி மக்களை ஏமாற்றி விட்டு செல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது.
பகிர்வு
அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிட்டு மாணவியை அவமதித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைக் கண்டித்து கழக மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளர் மரு.யாழினி அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு
அமைச்சர் கீர்த்தனா செய்தது Emotional Abuse & Harassment. சமூக புரிதலில்லாமல் குழந்தைகளிடம் அராஜகம் Victim card பிளே பண்ணாதீங்க, அந்த இடத்தில் அந்தக் குழந்தை தான் Victim
தவெக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களின் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்தி பெற்றோர்களைப் பிளாக் மெயில் செய்து வாக்களிக்க வைத்தனர். தற்போதும் தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க குழந்தைகளைக் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் அவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது போல ஒரு வீடியோ வெளியானது எதிர்ப்பு கிளம்பியதும் உடனடியாக அவரது குழந்தையை கேடயமாக்கி அதில் இருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். நிறைய தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக குழந்தைகளை இது போன்று எமோஷனலா அப்யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நேற்று அமைச்சர் கீர்த்தனா அவர்கள் செய்ததும் அந்த மாதிரியான ஒரு ஹராஸ்மெண்ட்தான். அவங்க அரசு பள்ளிக்கு சென்று அவர்களின் கருத்தை நிரூபிப்பதற்காக எல்லோர் முன்பும் ஒரு மாணவியை அவமானப்படுத்தி இருக்காங்க. இது அமைச்சர் கீர்த்தனாவிற்கு அசிங்கமான செயலா இல்லையா.? அது தப்பாவே தெரியலையா அவங்களுக்கு.?
நீங்க அந்த வீடியோ பார்த்தாலே தெரியும் அவங்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற முன் முடிவுடன் அங்கு சென்றிருக்கிறார். அவர் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் அர்த்தம் கேட்கிறார் . அதற்கு அந்த குழந்தைகள் பதில் அளிக்கும் முன்பே மாணவர்களுக்கு தெரியவில்லை பார்த்தீங்களா என பேசுகிறார். ஆசிரியர் தெளிவாக மாணவர்களிடம் கேட்கும் போது அதற்கு சரியான தமிழ் அர்த்தம் கூறுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவி எழுந்து எவர்லாஸ்டிங்னா கடைசி வரைக்கும் என பதில் அளிக்கிறார். மாணவி பதில் அளித்ததும், நாம் கூறியதை மாணவிகள் பொய்யாக்கி விட்டனர் என அமைச்சர் பதறுகிறார். ஒரு நல்ல அமைச்சராக இருந்தால் மாணவி பதில் அளித்ததை ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மாணவி பதில் அளித்ததை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதி உங்க அப்பா என்ன செய்கிறார் என அடுத்த கேள்வியைக் கேட்கிறார். ஒரு சமூக புரிதல் உள்ள யாரும் எந்த மாணவர்களிடமும் உடனடியாக அப்பா பற்றி கேட்க மாட்டார்கள். எத்தனையோ குழந்தைகள் அப்பா இன்றி பள்ளியில் படிக்கின்றனர். அப்பாவின் பணியை வெளியே சொல்ல அசௌகரியமாக நினைக்கும் குழந்தைகள் உள்ளனர். இப்படி கேள்வி கேட்பது அவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும். சமூக புரிதல் இன்றி இப்படி கேள்வி கேட்பது அபத்தமான ஒன்று.
இன்னொன்று அமைச்சரிடம் ஆரம்பத்தில் அந்த மாணவி நார்மலாக நின்று மிக தைரியமாக பேசிக்கொண்டு இருக்கிறார் . ஆனால் அமைச்சரின் நடவடிக்கையால் அந்த குழந்தை பயந்து போய் கை கட்டி பேச ஆரம்பிக்கிறது. நம்ம திராவிட இயக்கத்தில் யார் முன்னாடியும் கை கட்டி நிக்க கூடாது என சொல்லிக் கொடுத்துள்ளோம். இவர்கள் பெரியாரை பெயரளவிற்கு கொள்கைத் தலைவராக வச்சிருக்காங்க ஆனா அந்த விவரம் எதுவுமே அவங்களுக்கு தெரியாது. அந்த குழந்தை பயந்து போய் நிற்கும் போது குழந்தையின் பயத்தை போக்கி இயல்பாக்க கூட அவர் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் மறுபடியும் மறுபடியும் உனக்கு தெரியாது உனக்கு தெரியாது என்று மட்டம் தட்டும் எண்ணத்தோடு நடந்து கொண்டுள்ளார். இந்த சமூகத்தில் உனக்கு படிப்பு வராது படிப்பதற்கு தகுதி உனக்கு இல்லைன்னு சொல்லி படிக்க விடாம இருந்த இந்த சமூகத்துல படிப்பு எல்லாருக்குமானது என்ற கொள்கையை எடுத்து அதற்காக நூற்றாண்டு காலம் போராடி கல்வியை எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்திருக்கோம். அப்படி இருக்கிற ஒரு சமூகத்தில் எந்தவிதமான வரலாறும் தெரியாது, என்னென்ன போராட்டங்கள் நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பள்ளிக்கு போய் குழந்தைகளை எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டி பேசுறீங்க அப்படின்னா உங்களோட நோக்கம் என்ன.?
நல்லா படிச்ச மேதாவிகளுக்கே நிறைய பேர் இருக்கிற இடத்துல பயம் ஏற்பட்டு சில வார்த்தைகள் அவங்களுக்கு மிஸ் ஆகதான் செய்யும் அதுக்குன்னு உடனே அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல முடியாது இல்லையா.? அந்த குழந்தைக்கும் அப்படி தான் ஆசிரியர் கேட்டவுடன் சரியான பதில் அளிக்கிறார். அதற்கு முன்பு வரை தைரியமாக பதில் அளித்து வந்தவர் உங்க அப்பா என்ன செய்யறாங்க என கேட்டவுடன் அதற்கு கூலித்தொழிலாளர் என சொல்லும் போது அவரது குரல் தளர்கிறது. அந்த இடத்தில அந்த குழந்தையை சைக்கலாஜிக்கலா அமைச்சர் எப்படி ட்ரமடைஸ் பண்ணி இருக்காங்க என்று இப்ப வரை அவர்களுக்கு புரியவில்லை.
இன்றுமே அவங்கள தற்காத்துக்க தான் பேசுறாங்க, அவங்களோட தற்பெருமையை மட்டும் தான் பேசுறாங்களே தவிர்த்து அந்த குழந்தை மேல அவங்க உருவாக்கின பாதிப்பு என்ன என அவங்க கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் இரண்டு கேள்விக்கு குழந்தை பதில் சொல்லிய உடன் அமைச்சர் தனக்கு இன்சல்ட் ஆனதாக நினைத்து ‘இதே கேள்வியை கடைசி பெஞ்ச் மாணவர்களிடம் கேட்டால் தெரியாது’ என கூறுகிறார். கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு அது தெரியாது என இவர்களுக்கு எப்படி தெரியும்.? முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச் என்ற பாகுபாடு எல்லாம் இருக்க கூடாது என கற்பித்தல் முறையிலேயே மாற்றம் கொண்டு வந்து இப்போது அனைவரும் நன்றாக படிக்கும் சூழலை உண்டாக்கி வருகிறோம். இப்போது வந்து கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு தெரியாது அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பது போல பேசி மாணவர்களை மட்டம் தட்டுகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது மாதிரி ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது அங்கு மாணவர்கள் மத்தியில் பேச தயங்கிய மாணவனை ஊக்கப்படுத்தி அவரது பயத்தை போக்கி பேசவைத்தார். அதன பிறகு அந்த மாணவனும் அழகா பேசுவார்.
உனக்கு படிப்பு வராது நீ முட்டாள் உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றது இந்த தவெக அரசு. உன்னால முடியும் நாங்க இருக்கோம் என தட்டிக்கொடுத்து படிக்க வைத்தது திராவிட மாடல் அரசு.
ரீல்ஸ் மோகம் ரீல்ஸ் ஆட்சினு சொன்னா மட்டும் அவங்களுக்கு கோபம் வருது ஆனா ரீல்ஸ்னால தான் நேற்று மருத்துவர்கள் , செவிலியர்கள் போராட்டம் செஞ்சு இருக்காங்க. தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்வதால் எங்க வேலையைப் பார்க்க முடியவில்லை என கூறி இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை நிறுத்த சொல்லி போராட்டம் செஞ்சிருக்காங்க.
தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக ஹாஸ்பிடல்ஸ், ஸ்கூல்ஸ் என்று அனைத்து இடங்களிலும் போய் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு தைரியம் இருந்தால் கமிஷ்னர் ஆபீஸ்ல , கலெக்டர் ஆபீஸ்ல போய் ஆய்வு செய்து ரீல்ஸ் போடுங்களேன் பார்ப்போம். பள்ளிகள் , மருத்துவ மனைகளில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.
இப்போது அமைச்சர் கீர்த்தனா விக்டிம் கார்ட் பிளே பண்றாங்க இது எந்த விதமான மனநிலை அந்த இடத்தில் விக்டிம் அந்த குழந்தை தான். அந்த வீடியோவ அந்த குழந்தையின் பெற்றோர்கள் , நண்பர்கள் , உறவினர்கள் பார்த்து என்ன பேசுவாங்க நாளைக்கு அந்த குழந்தைக்கு என்ன கான்ஃபிடன்ஸ் இருக்கும். இந்த அரசால குழந்தைகளுக்கு கான்ஃபிடன்ஸ் பில்ட் பண்ண முடியலனா கூட பரவாயில்லை ஆனால் நாங்க கஷ்டப்பட்டு பில்ட் பண்ணி வச்சிருக்க அந்த கான்பிடன்ஸ தயவு செஞ்சு உடைக்காதீங்க.
திமுக ஆட்சியின் போது பள்ளிக்குழந்தைகளை பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தினோம். எண்ணும் எழுத்தும் , இல்லம் தேடி கல்வி, மாடல் ஸ்கூல்ஸ்னு அத்தனை திட்டங்கள் கொண்டு வந்து மாணவர்களின் லிட்ரசிய இம்ப்ரூவ் பண்ணி இருக்கோம். அவங்களை என்கரேஜ் செய்யனும் என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற ஒரு விழாவை எடுத்து அவங்களைப் பெருமைப்படுத்தினோம். ஜாப்பனீஸ், பிரெஞ்சு, கொரியன் எல்லா லாங்குவேஜ்லயும் பேச வச்சிருக்கோம். அவர்களை கல்வி சுற்றுலாவிற்காக வெளிநாடு அழைத்து சென்றோம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின அந்த குழந்தைகளோட கான்ஃபிடன்ஸ தயவு செஞ்சு உடைச்சிராதீங்க. உங்க துறையில கவனம் செலுத்துங்க. ஆட்சிக்கு வந்து 50 நாள் ஆயிடுச்சு. இதுவரை என்ன இன்வெஸ்ட்மென்ட் இங்க கொண்டு வந்திருக்காங்க எனற தகவல் இல்லை.
கடந்த ஆட்சியில் தொழில் தொடங்க பணம் கேட்கபட்டது என புகார் சொன்னதற்கு ஆதராம் எங்கே என கேட்டபோது என் ட்வீட்ல ஒருத்தர் கூறினார் அதை ரீ டிவிட் செய்துள்ளேன் பாருங்க என சொல்லும் அளவு நாலேஜ் வச்சிருக்க மினிஸ்டர் எப்படி எங்க ஸ்டூடண்ட்ஸ பார்த்து இந்த மாதிரியான கேள்வி கேட்கலாம். குழந்தைகளை பார்த்து கேட்கறது ஹீரோயிசம்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அது ஹீரோயிசம் கிடையாது. 2000 கோடி கல்வி நிதி கொடுக்கலனாலும் எங்க குழந்தைகளோட கல்வியை நாங்க பார்த்துப்போம். அவங்களுக்கான திட்டங்களை நாங்க கொண்டு வருவோம்னு சொல்லி குழந்தைகளுக்காக தொடர்ச்சியான திட்டங்களைக் கொண்டு வந்து ஒன்றிய அரசை எதிர்த்து போராடுனார் எங்க கழக தலைவர் அவர்தான் ஹீரோ. ஹீரோயிசம் ரீல்ஸ்ல இல்ல. நிஜமா நீங்க இறங்கி மக்கள் சேவை பண்ணுறது தான் ஹீரோயிசம். சூட்டிங் எல்லாம் பிறகு பார்த்துக்கலாம். குழந்தைகளை தயவு செய்து இந்த மாதிரி ரீல்ஸ்களில் இருந்து கீப் தெம் அவுட்.
***
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
Birthday greetings to Captain Cool Thiru. @msdhoni.
Whether on the field or away from it, your composure, leadership and enduring charisma continue to inspire millions. The anticipation of watching you in action again remains as strong as ever.
Wishing you good health, happiness and many more years of success.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
Madam Keerthana, @Keerthana4VNR
"I always you know passionate about working...."
Is this the right way to say it grammatically???, just curious since you questioned a small child before the camera and didn't even bother to blue her face.
நமது ஆங்கில புலமையை, மேட்டிமைத்தன்மையை குழந்தைகளிடம் காட்டித்தான், நம் பொறுப்பை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீங்கள் எவ்வளவு அறிவில் சிறந்தவர் என்பதை குழந்தைகளிடம் பழகும் பாங்கில்தான் வெளிப்படுத்த முடியும்.
பள்ளிக்கு சென்றதும் கைகட்டி நிற்கும் குழந்தைகளை பார்த்தால், முதலில் சொல்ல வேண்டியது, யார் முன்னாலும் கை கட்டி நிற்காதீர்கள் என்பதை தான்.
கேட்பதற்கு கேள்விகள் இல்லையென்றால், எடுத்த எடுப்பில் குழந்தைகளின் பெற்றோர் குறித்து கேட்காதீர்கள். அப்பா என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு , அப்பா இல்லை என்பது பதிலாக இருந்தால், அதனை சொல்ல அந்த குழந்தை எவ்வளவு தயங்கும் என்பதை புரிந்துக் கொண்டு பள்ளிகளுக்கு செல்லுங்கள்.
உங்களின் நிர்வாகத் திறனை வெளிகாட்ட குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள்.
அமைச்சரின் செயலை கண்டிப்பவர்கள் தயவுகூர்ந்து அக்குழந்தையின் படத்தை பகிராதீர்கள்!
When an Andhra Pradesh minister says he never heard investors complain of bribery during the DMK regime and your rebuttal is “someone commented on my X post”…
You’ve made it impossible to take you seriously @Keerthana4VNR
So this is the “change” that replaced @TRBRajaa , from evidence based policymaking to evidence by X comments? 🤦♀️
#TamilNadu #DMK #TVK #EvidenceMatters
மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா,
தூரம் ஆன காலத்துல வைக்கிற துணியை யாரும் பார்க்க கூடாது,
பார்த்துட்டா வயிறு வலிக்கும்,
தீட்டு நிக்காம போகும் என கற்பிக்கப்பட்ட மூடத்தை விஞ்ஞானம் என நம்பி,
ஓட்டுச் சாரத்திலும் புழக்கடை புதற்றிலும் பதுக்கி வைத்து உபயோகித்த பெண்கள்,
பிறப்புறுப்பில் பூரான், தேள் சமயத்தில் பாம்பு என விசக்கடிகளால் மாண்டு போனவர்கள் ஏராளம்.
அப்படி அறியாமையில் மாண்டு போன ஏதோ ஒரு பெண்ணின் நான்காம் அல்லது ஐந்தாம் தலைமுறை பெண்ணைத் தான் நேற்று நீங்கள் அரசுப்பள்ளியில் சந்தித்து இருக்கிறீர்கள்.
அவர்களை பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக் கொண்டு வரவும்,
வயசுக்கு வந்த பின்பும் சைக்கிள்களில், பொதுப் பேருந்தில் கிராமம் தாண்டி நகரத்திற்கு அழைத்து வரவும் ,
ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து அமர்ந்து படிக்க வைக்கவும்,
இங்கே தமிழ்நாட்டில் நூற்றாண்டு கால போராட்ட வரலாறு இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாழ்ந்த பெரியவர்கள் ; தலைவர்கள் பட்ட பாட்டை ; தீட்டிய திட்டங்களை அந்த வரலாற்றில் தேடிப் படியுங்கள்.
அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படிக்கும் மாணவியிடம் எதற்காக எடுத்தவுடன் ஆங்கிலப் பாடத்தில் கேள்வி எழுப்புகிறீர்?
அமைச்சரிடம் பேசுகிறோம் எனும் பயத்தில், கையைக் கட்டுக்கொண்டு பதில் சொல்ல தயங்கி நிற்கும் அந்த சிறுமியை அரவணைத்து உற்சாகம் தந்து ஊக்குவிக்க வேண்டிய தாங்கள்,
அங்கே அனைவர் முன்னிலையிலும் அவளுடைய இயலாமையை கோடிட்டுக் காட்டி அப்பெண்ணை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளுவது முறையா?
வாட் இஸ் யுவர் பாதர்? என்னும் கேள்விகல்லூரி முடித்தவர்களுக்கு தெரியும். புரியும்.
வாட் இஸ் யுவர் பாதர் ப்ரொஃபசன் ? என்னும் கேள்வி தான் பள்ளி சிறுவர்களுக்கு தெரியும். புரியும்.
பள்ளி மாணவர்களிடத்தில்,
குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களிடத்தில் எப்படிக் கேள்விகளைக் கேட்க வேண்டுமென்பதை முதலில் நீங்கள் படியுங்கள் கீர்த்தனா.
உண்மையில் நீங்கள் தயங்கி நிற்கும் அந்த சிறுமியிடம் அறிவியலில், கணக்குப் பாடத்தில் கேள்வி எழுப்பி,
அப்பெண்ணின் கல்வியறியை ஒரு அமைச்சராக சோதித்து அதை ரீல்ஸ் ஆக வெளியிட்டிருக்க வேண்டும்.
மாறாக,
ஆங்கில மொழி அறிந்தவரே அறிவார்ந்தவர் எனும் மேட்டுக்குடி எண்ணத்தை உங்கள் செயல் வழியே கண்டு திகைத்தோம்.
அதிலும் முதல் வரிசை மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள், பதில் சொல்ல வல்லவர்கள்.
கடைசி வரிசை மாணவர்களால் இயலாது என்பதை ஒரு அமைச்சராக நீங்கள் அந்த ரீலஸ்-ல் வெளிப்படுத்தி இருப்பது முறையா ?
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரமில்லை ; ஆங்கில அறிவு குறைவு என்பதை உலகுக்கு சொல்ல,
தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவரே லீல்ஸ் மூலம் முயல்வது சரியா? என்கிற கேள்வியோடு கூட இன்னொரு கேள்வியும் கேட்கிறேன் .
கீர்த்தனா எனும் தொழில்துறை அமைச்சர் அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆய்வு நடத்தலமா ?
தாரளமாக நடத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதியான அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அங்கீகாரத்தின் கீழ் அவர்பளுக்கு அந்த உரிமை உள்ளது எனில்,
தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளிலும் அதற்கான ஆய்வை நடத்த உரிமை உள்ளது தானே ?
இப்போது வரை நீங்கள் உட்பட எந்தவொரு அமைச்சரோ , சட்டமன்ற உறுப்பினரோ தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யவில்லையே ஏன்?
ஆட்சிக்கு வந்தவுடன் தவெக அரசாங்கம் கொடுத்த 1,000 தனியார் பள்ளிகளுக்கான அனுமதிக்கு அடுத்து,
அந்த தனியார் பள்ளிகளின் அட்மிசனை ஊக்குவிக்கத் தான் ,
தாங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் ரீல்ஸ் வெளியிடுவதாக பொதுமக்கள் பேசத் துவங்கி இருப்பதை அறிந்தீர்களா ?
அரசுப் பள்ளி என்பது அரசாகத்தின் உடைமை.
சொந்த வீட்டின் உடைமையை ரீல்ஸ் வழியே உதாசீனம் செய்யாதீர்கள் பிளீஸ் .
ஒரே ஒரு கேள்வி கடைசியா நமக்கு இருக்கிற ஒரே ஒரு கேள்வி என்னென்னா...
என்ன மயிருக்கு கைகட்டி பதில் சொல்லணும் அப்படிங்கறது தான்.
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh