அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் தமிழ்நாடு பசுமை / புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக சாலைகள் மேம்பாடு செய்ததில், தேசிய அளவில் இரண்டாம் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதைப் பாராட்டி
1/2
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் உஷ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்டில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு வீரர் சாஸ்தா வசந்த் அவர்கள்
1/2
தமிழகம் முழுவதும் மக்கள் பணிகளை உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர் நமது கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்!
இதுவே மக்களுக்கான ஆட்சி; நமது முதலமைச்சர் விஜய் அவர்களின் 'மனசாட்சி' உள்ள மக்களாட்சி!
மாண்புமிகு மின்சார துறை மற்றும் சட்ட துறை அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்களை...
தமிழக வெற்றிக் கழக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் சேவை செம்மல் @leftpandi* அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த தருணங்கள்....
தலைவர் @TVKVijayHQ ❤️ அவர்கள் ஆசியுடன் பொதுச் செயலாளர் @BussyAnand ❤️ ஆசியுடன் கம்பம் தொகுதி "MLA ஜெகன்னாத் மிஸ்ரா" அவர்களும் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @leftpandi ❤️ அவர்களும் தேர்தல் வெற்றிக்காக கம்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்..!! 🙏
மாண்புமிகு கனிமவளத் துறை அமைச்சரும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் திரு. @drtkprabhu_TVK ❤️🙏 அவர்களை...
தமிழக வெற்றிக் கழக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் சேவை செம்மல் @leftpandi ❤️🙏 அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த தருணங்கள்....🙏
நேற்று அருள்மிகு ஶ்ரீ வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோயில் தேரோட்டத்தில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @leftpandi அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் ❤️🙏
"கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் P.L.A. ஜெகநாத் மிஸ்ரா அவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் 'சேவைச் செம்மல்' @leftpandi அவர்கள் வரவேற்ற தருணம்."
நேற்று கம்பம் சட்ட மன்ற உறுப்பினர்
திரு. @JeganathMishra_ அவர்களை....
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் சேவை செம்மல் @leftpandi அவர்கள்
வரவேற்ற தருணம்.....
இருவரும் இணைந்து
சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த
கம்பம் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்
நேற்று கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. P. L. A ஜெகநாத் மிஸ்ரா 🙏 அவர்களை..
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் சேவை செம்மல் @leftpandi அவர்கள் 🙏 வரவேற்ற தருணம்....
பின்பு இருவரும் இணைந்து சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற செய்த கம்பம் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (15.5.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் திரு. பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர்
திரு. சி. தேவராஜன், துணைத் தலைவர் திரு. ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் திரு. எம். பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் திரு. சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர்
1/3
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் எங்கள் அண்ணன் @leftpandi அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது..🔥
@TVKVijayHQ