உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (10.06.2026) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் காரம்பாக்கம் கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் அ.ம. துரை வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் NDA கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்!
🏴 #Delimitation செய்து வடமாநிலங்களின் வலிமை அதிகரிக்கப்பட்டால், இனி, தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும், நம் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும்.
🏴 இடஒதுக்கீட்டு உரிமைக்கும், மொழியுரிமைக்கும் போராடி வென்ற நாம், இன்று நம் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறோம்.
🏴 போராட்டம் கூட அல்ல, இது போர்! இப்போரில் தமிழ்நாடு வெல்ல #DravidianModel ஆட்சிதான் தொடர வேண்டும்; தொடரும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK
☀️ DMK: The Driving Force of Chennai’s Development
🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
#ChennaiMetro #MetroRail #CMRL @CMRLOfficial
#VoteForDMK
திராவிட மாடலின் அடுத்த அத்தியாயத்துக்குப் புதுக்கோட்டையும் ஆயத்தமாகி விட்டது!
5 ஆண்டுகளாக #DravidianModel அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வரும் சாதனைத் திட்டங்களைப் புதுகை மக்கள்முன் பட்டியலிட்டு, பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கரங்களும் காவி நிழலும் தமிழ்நாட்டை அண்டவிடாமல் தடுக்க ஆதரவு கோரினேன்.
தேர்தல் நேரத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு எதிரான டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் ஆணவப் பேச்சுகளைத் தடுக்கவோ, அவர்களின் வாயைக் கட்டிப் போடவோ திறனற்ற பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கைகட்டித்தான் நிற்பார்.
தமிழ்நாடு அதை அனுமதிக்காது!
#PudukottaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் க. மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும்-திராவிட இயக்கத்திற்கும் இடையே உள்ள கொள்கை உறவைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க பாசிஸ்டுகளை உறுதியாக வீழ்த்த வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் ஜனநாயகப் போரில் வெல்வோம்! வரலாறு படைப்போம்!
#DMK4TN #VoteForDMK
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவனான என் அன்பு வேண்டுகோள்:
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. செல்லும் இடம் எங்கும் கழக உடன்பிறப்புகளின் எழுச்சியைக் காண்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்குத் தந்திருக்கக் கூடிய பயனும், தொடரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நாம் நிறைவேற்றவிருக்கும் சாதனைத் திட்டங்களின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அனைத்து தொகுதிகளிலும் வெளிப்படுகிறது.
தேர்தல் களத்தில் திமுக தொண்டர்களின் பணி என்பது எதிரிகளாலும் வியந்து பார்க்கக் கூடியது என்பதே நம் வரலாறு. கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் உள்ள 75,000 பாகங்களிலும் கழக உடன்பிறப்புகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வந்திருக்கிறார்கள். மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகளை வழங்கி வாக்குகளைச் சேகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்துவதுடன், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான நானே நிற்கிறேன் என்ற எண்ணத்துடன் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
92 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் கடும் வெயிலிலும் பரப்புரை செய்கிறார். அகவை 80-ஐ தாண்டிய அண்ணன் சிதம்பரமும், அண்ணன் வைகோவும் மூலைமுடுக்கெல்லாம் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதன் அருமையை விளக்கி வருகின்றனர்.
87 வயதான நம் கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் துரைமுருகன் அவர்களும், 28 வயதே ஆன அவிநாசி கழக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியும் பம்பரமாகக் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் பணியாற்றி வருகிறார்கள்.
உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையில் உறுதியுடன் சொல்கிறேன், இந்த தேர்தல் களத்தில் நாம்தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். இதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டு பெண்கள் முகத்தில் வெளிப்படும் மலர்ச்சியும், இளைஞர்களின் மனதில் உள்ள நம்பிக்கையும், சிறுபான்மைச் சமுதாயத்தினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் ஆதரவும் நமது வெற்றிக்கு அடித்தளமாக உள்ளன. வாக்குப்பதிவு நாளில் அதை வெற்றியாகக் கட்டி எழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி என நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார். அதைத்தான் உங்களில் ஒருவனான நானும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியம். 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்பதை உறுதி செய்யும் உழைப்பை உடன்பிறப்புகள் வழங்கினால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிதான். அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
ஒற்றுமையாகவும் ஒருங்கிணைப்புடனும் உடன்பிறப்புகள் ஓயாது உழைக்கிறார்கள் என்ற செய்தி என் காதுக்கு வரும்போது எல்லாம் நான் உற்சாகத்துடன் உங்களை மிஞ்சும் உழைப்பை வழங்கும் ஆற்றலைப் பெறுகிறேன்.
கொளுத்தும் வெயிலையும், கோடை மழையையும் பொருட்படுத்தாமல் களத்தில் பணியாற்றுகின்ற உடன்பிறப்புகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சலிக்காமல் உழைப்பதில் நம் உடன்பிறப்புகளுக்கு நிகர் யாருமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்ற உங்கள் உழைப்பினால், தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து நீங்கள் ஒற்றுமையாக ஆற்றுகின்ற பணியினால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியை உறுதி செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சியை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் அமைத்துக் காட்டினார்கள் என்ற பெருமையை விட உங்களில் ஒருவனான எனக்கு வேறென்ன வேண்டும்!
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 21 அருள்தாஸ்புறம் பகுதியில், திராவிட மாடல் நல்லாட்சி தொடர தேர்தல் பரப்புரை – 11/04/2026
“சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 2
“இந்தப் பகுதியில் நான் 34 சாலைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,
திரு.வி.க. மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,
அருகே உள்ள, விளாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எனது முயற்சியில் காலை உணவுத் திட்டம் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
களத்துப்பொட்டலில், தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,
ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி ஸ்கேன் மையம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம்,
இன்னும் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
எனவே, இவ்வளவு செய்திருந்தபோதிலும் தங்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, மக்களே பதிலளிப்பார்கள்.”
நான் மதுரைக்காரன், நீ யார்?
தரவுகள் (Data PDF): https://t.co/GI00fji8FV
#voteForDmk
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
மன்னை மண்ணின் மைந்தர் அன்புச் சகோதரர் @TRBRajaa அவர்களுக்கு மன்னார்குடியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே, உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில், விண்ணை எட்டும் சாதனைகளுடன் மன்னை ‘மின்னும்’ மன்னையாக உயர, நாம் ஆற்றிய பணிகள் சொல்லி, திராவிட மாடல் 2.0-வில் செயல்படுத்தப்போகும் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு உரையாற்றினோம்.
அடிமைத்தனத்திற்கும் துரோகத்திற்கும் பெயர் பெற்ற #NDA கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, முத்தமிழறிஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலிருந்து சூளுரைத்தோம்.
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்