உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா வாரியத்தை கலைத்து விட்டு, சிறுபான்மை கல்வி ஆணையத்தோடு இணைத்து முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை பறித்துள்ளது ஆளும் பாஜக அரசு.
இந்த மாற்றத்தின் மூலம் 500 மதரசாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை கல்வி ஆணையம் என்பது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்திஸ்ட்கள், ஜெய்னர்கள், பார்சிகளை உள்ளடக்கியது.
மதரசா வாரியம் என தனியாக ஒன்று இருந்தால், முஸ்லிம் மாணவர்களுக்கு மானியம் கொடுக்க வேண்டுமென்பதற்காக இந்த சூழ்ச்சியை செய்து, இஸ்லாமிய வெறுப்பை பிரதிபலித்துள்ளது ஆளும் பாஜக அரசு.
https://t.co/sayy5koR0B
வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அதை மதிக்காமல் பாஜக ஆளும் ம.பி.ல், 2 ஹித்துக்கள் வக்ஃப் போர்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்!
முஸ்லிம்கள���ன் வழிபாட்டு உரிமைகளை பறிக்க ஹிந்துத்துவ சக்திகளை வக்ஃப் போர்டிற்குள் நுழைக்கும் பாஜகவின் சதித்திட்டத்தத்தை,
உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்.
நீதிமன்றத்தை மதிக்காமல் இந்த வேலையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
பாலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவம் கொத்துக் கொத்தாக மக்களை கொல்லும் போது, தான் பொறுப்பு வகித்த கமால் அத்வான் மருத்துவமனையில் உயிருக்கு போர���டிய மக்களை இஸ்ரேல் அரசின் எதிர்ப்புகளையும் மீறி காப்பாற்றியவர் தான் Dr.ஹுசாம் அபு ஸஃபியா.
இஸ்ரேல் அரசு டிசம்பர் 2024 ஆம் ஆண்டு அவரை கைது செய்தது. இன்றளவும் அவர் வெளியில் வரவில்லை. ஜூலை 2, 2026ல் அவரின் வழக்கறிஞர் அவரை சந்தித்த போது, மிக மோசமான நிலையில் காட்சியளித்த ஹுசாம் கூறுகையில்: இதுவே என்னை நீங்கள் பார்க்கும் கடைசி தருணமாக இருக்கலாம் என பேசியுள்ளார்.
இந்தளவிற்கு அப்பட்டமான மன��த உரிமை மீறலை செய்யும், கொடுங்கோல் இஸ்ரேல் அரசின் அட்டூழியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நிறுத்தப்பட வேண்டும்.
அஸ்ஸாமை சேர்ந்த அமீனுல் ஹக் என்பவர் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தின் மூலம் பிப்ரவரி 28, 2019 ஆம் தேதி வெளிநாட்டவர் என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து, கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தான் இந்தியர் என்பத�� நிரூபிக்க 1951 ஆம் ஆண்டின் NRC உட்பட 15 ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும், வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது உயர்நீதிமன்றம்!
தந்தை, பாட்டனார் ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைக்கெல்லாம் குடியுரிமை மறுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள போதிலும், அவையெல்லாம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்களின் நிலை மிகவும் அவல நிலையில் உள்ளது.
https://t.co/6pMLvx2snR
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்களை கண்டுபிடிக்கவே SIR என்று கூறிய தேர்தல் ஆணையம், இதுவரை ஒரு வெளிநாட்டவரை கூட கண்டுபிடித்தபாடில்லை!
பாஜகவை ஆட்சியில் அமரவைக்க தீட்டப்பட்ட திட்டமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது!
https://t.co/zBp0c8txFz
கடந்த ஆண்டு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
நடைபெற்ற SIR பணியின் முடிவாக 5 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். அதில் மே.வங்கத்தில் ம���்டும் நீக்கப்பட்டவர்களில் 27 இலட்சம் பேர் தீர்ப்பாய முடிவு கிடைக்காமல் வாக்காளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
முஸ்லிம் சமூகத்தை வைத்து ஒரு கட்சியை அளவுக்கு மீறிப் புகழ்வதை விடுங்கள்.
முஸ்லிம் சமூ��த்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்றுத் தர முடியுமா?
அதன் முடிவு வர��ம் முன்பே, பசுவதை தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அப்பெண்கள் மீது வழக்கு பதிந்துவிட்டது காவல்துறை!
காவல்துறையின் இந்த போக்கு கண்டனத்திற்குரியது!
https://t.co/BLOGOSKpqW
உ.பி.ல் மூன்று இஸ்லாமிய பெண்களை (ஷாமா பர்வீன், ஷாய்ஸ்தா, ஃபாத்திமா) மாட்டுக்கறி சமைத்தார்கள் என கூறி கைது செய்துள்ளது காவல்துறை! கைப்பட்டப்பற்ற கறியை தடயவியல் ஆய்விற்கு அனுப்பியுள்ளார்களாம்!
நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!
24.06.26
திருக்குர்ஆன் கூறும் ஏக இறை கொள்கை குறித்தும் இயேசு குறித்தும் அழகிய கலந்துரையாடல்!
நம்மிடம் வாங்கிய கொசுத்தேன் மிகுந்த ஆரோக்கியத்தை அளித்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்
கிரேட் கிங் ஹனீ ஷாப்
மதுரை
9976657577
சுற்றறிக்கை: 91/2026
தேதி: 26.06.2026
இறைவனின் திருப்பெயரால்...
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்��ீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு :தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான (BCM) இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை (G.O. Ms. No.31, 09.03.2024) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி ரத்து செய்துள்ளனர்.
தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ஷமீர் அஹமது என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைத் தாண்டி, ��ட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பாதிக்கும் வகையில் அரசாணையை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதும் வேதனைக்குரியது.
தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, BC, MBC, DNC மற்ற���ம் SC பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை தொடர்ந்து பெறலாம் என்றும், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணை இஸ்லாமியர்களின் பன்னெடுங்கால போராட்டங்கள் மற்றும் தொ��ர் கோரிக்கைகளின் காரணமாக கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முக்கியமான உரிமையாகும்.
ஆனால், தற்போது அந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதை மறைமுகமாகத் தடுக்கும் ஒரு வழிமுறையாக அமைகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகும்.
தீர்ப்பில், இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது இஸ்லாத்தில் உள்ள பெரும்பான்மையினரும், இஸ்லாத்தைத் தழுவுபவர்களும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதும் ���றுக்க முடியாத உண்மையாகும்.
இடஒதுக்கீடு என்பது சாதி உயர்வு தாழ்வை நிலைநிறுத்தும் திட்டமல்ல. மாறாக, சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு சமூகநீதிசார் உரிமையாகும்.
எனவே, இந்த உரிமையை அவசரகதியில் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு கண்டனத்திற்குரியது.
இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து இ��ுவரை ஆளும் தவெக அரசும், இந்த அரசில் நேரடியாகவும் வெளியிலிருந்தும் அங்கம் வகிக்கும் விசிக, IUML மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இவ்வழக்கை அரசு உரிய முறையில் கையாளத் தவறியதால் இஸ்லாமியர்களின் முக்கியமான இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்க���்பட்டது என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, இஸ்லாமியர்களின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து, நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்���ானம் நிலுவையில் உள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடம் இதுபோன்ற மதம் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவது, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் சூழலை உருவாக்கக்கூடும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இத்தகைய வழக்குகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
A. முஜீபுர் ரஹ்மான்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ராஜஸ்தானில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து,
பராடியா கிராமத்தின் தலைவரான சுர்தரம் மெக்வால் என்பவரின் தலைமையில்
ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்!
வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்த்து இதே போன்ற முயற்சியை ஒவ்வொரு மாநிலத்திலுள்ள ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து செய்தால், ஹிந்துத்துவ அரசியல் விரட்டியடிக்கப்படும்.
https://t.co/GNlukyJNbQ
Israel News | "Israeli Forces Killed 20,000+ Gaza Children Since Oct 7, 2023":
UN Commission
சர்வதேச சட்டங்களின்படி, மோதல்களின் போது பொதுமக்களையும், குறிப்பாக குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், தற்போதைய போரில் இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள�� தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 23 பள்ளிவாசல், அடக்கஸ்தலம், தர்கா ஆகியவை சட்டவிரோத கட்டிடங்கள் என்ற பெயரில் இடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளது என அமெரிக்காவை சேர்ந்த Justice For All எனும் மனித உரிமை அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசுத் துறைகள் அனைத்தும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை நசுக்க ஒன்றாக செயல்படுவது ஜனநாயக விரோத செயல்!
https://t.co/s5cxJOnIzR
மேற்கு வங்கத்தில் ஜூன் 21 அன்று, மோடி பங்குபெறும் சர்வதேச யோகா தின நிகழ்விற்காக கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதி 7 நாட்களுக்கு மக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்படுவதாக அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெட் ரோடு பகுதியில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த ஒரு மணி நேரம் கூட அனுமதி வழங்கப்படவில்லை! ஆனால், யோகாவிற்காக ஒரு வாரம் சாலையை மூட ��ாஜக அரசு அனுமதிக்கிறது என TMC கட்சியை சேர்ந்த MP மஹுவா மோயித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்!
தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக எவ்வித பாரபட்சமான செயலையும் பாஜக அரசு செய்யும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது!
https://t.co/xJUDoO6Cep
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 71 வயதான ஷேக் ஷா ஆலம் என்ற இஸ்லாமியரை, ஜூன் 15 அன்று அவரது வீட்டிற்கே சென்று அடித்து கொலை செய்துள்ளனர்.
ஷேக் ஷா ஆலம் TMC கட்சியின் ஆதரவாளர் என்ற விரோதத்தில்,
பாஜக ஆதரவாளர்கள் அவரை கொலை செய்துள்ளனர் என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர் TMC கட்சியில் இல்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே முஸ்லிம்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன.
குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
https://t.co/rLsV0BpQC5