74,808 வாக்குகள் – 14,511 வாக்குகள் வித்தியாசம்!
இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில்
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு,
வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.
முதல் சுற்றிலிருந்து இறுதி வரை
எனக்கு முன்னிலை தந்து,
74,808 வாக்குகள் பதிவு செய்த
ஒவ்வொரு வாக்காளருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏
இந்த வெற்றி எனக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும்,
உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றவும்,
உங்கள் கனவுகளை நனவாக்கவும்
களத்தில் நின்று என்றென்றும் உழைப்பேன்.
நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் நல்லாட்சி அமைய,
விசில் சின்னத்திற்கு வாக்களித்த
இராசிபுரம் தொகுதி வாக்காளர் பெருமக்களுக்கு
கோடான கோடி நன்றிகள்! ❤️
D. லோகேஷ் தமிழ்ச்செல்வன், MLA
(இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)
தமிழக வெற்றிக் கழகம்
இராசிபுரம் நகரில் 2023 முதல் பொதுமக்கள் எதிர்கொண்டு வந்த போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமங்களை கருத்தில் கொண்டு, நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 08.06.2026 முதல் போக்குவரத்து திசை மாற்றத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கை இராசிபுரம் நகர மக்களுக்கு கணிசமான நிவாரணத்தை அளித்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என நம்புகிறேன்.
அதே நேரத்தில், இராசிபுரம் நகரின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு மேலும் சிறந்த மற்றும் நிரந்தரத் தீர்வுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வேன்.
இந்த முக்கியமான கோரிக்கையை பரிசீலித்து, பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி விரைவாக நடவடிக்கை எடுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு இந்நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனே எங்கள் முன்னுரிமை; இராசிபுரத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எனது பணிகள் தொடரும்.
@collectornmk
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், இன்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் ஆகிய சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @logintvk |
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு, இராசிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அணைப்பாளையம் புதிய பேருந்து நிலையம் தொடர்பாகவும், நகர போக்குவரத்து மாற்றம் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
(1/2)
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தொகுதி பிள்ளாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
(1/2)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், தேரோட்டத்தின் போது கல்லூரி மாணவர் ஹர்ஷவர்த்தன் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வன் நேரில் சென்று, உயிரிழந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தி, மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்...
இராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழையபடி அனைத்து பேருந்துகளும் சிவானந்த சாலை வழியாக பூவாயம்மாள் மண்டபம் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சி சூப்பர் மார்க்கெட் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து சேலம், நாமக்கல், ஈரோடு என அனைத்து பேருந்துகளும் சென்றால் போக்குவரத்து நெரிசல் குறையும் என வணிகர்கள் மற்றும் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் அவர்களிடம் மனு கொடுத்ததால்
மேற்படி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களிடம் அமைச்சர் கருத்து கேட்டார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,
கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் அவர்கள் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள்,
உலக பட்டினி நாளை முன்னிட்டு வெண்ணந்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேந்திரர் தெரு, நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில், இன்று (28.05.2026) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.திலீப்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி எஸ்.விமலா, இ.கா.ப., உட்பட பலர் உள்ளனர்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில், இன்று (28.05.2026) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.