சிறந்த அறிமுக நடிகை - பாக்யஸ்ரீ போர்ஸ் (காந்தா)
தன்னைத் துளைத்துச் செல்லும் ஒளிக்கதிருக்குப் பல்வேறு நிறங்களைப் பரிசாகக் கொடுக்கும் பனித்துளிபோல, தான் ஏற்றுக்கொண்ட குமாரி கதாபாத்திரத்துக்கு உணர்ச்சிக் குவியல்களால் உருவம் கொடுத்தார் பாக்யஸ்ரீ.
திரையுலகமே அணுகுவதற்கு அஞ்சும் முன்னணி நாயகனின் ஈகோவை வென்றுவிட்ட பெருமிதம் ஒரு நொடி, அதே நாயகனின் அபிமானத்தைத் தாம் சம்பாதித்த பரவசம் மறு நொடி என நீரைப்போல வடிவம் மாறிக்கொண்டே இருக்க முடிந்தது அவரால்!
முதல் பாதியில் விழிகளில் மோகமும் தாபமும் தேக்கி டி.கே.எம் மேல் அவர் பார்வை உரசும்போதெல்லாம் நம்மையும் ஆட்கொண்டது போதை.
இரண்டாம் பாதியில் அதிகாரப் பசிகொண்ட இரு ஆண்களுக்கு இடையில் இந்த அபலை பந்தாடப்பட, அதைப் பார்த்த மனங்களில் பச்சாதாபம் ஏகத்துக்கும் சுரந்தது.
இறுதியில் அதே ஆண்களுக்காகத் தோட்டாவைச் சுமந்துகொண்டு அவர் உதிர்த்த புன்னகை, ஆண் இனத்தின் அற்பத்தனத்தைப் பகடி செய்யும் ஏளனச் சிரிப்பு.
முதல் அடியையே ஆணித்தரமாக வைத்திருக்கும் பாக்யஸ்ரீ, தமிழ் சினிமாவின் நம்பிக்கைக் கீற்று.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #BhagyashriBorse | #Kaantha | #BestDebutActress
சிறந்த இசையமைப்பாளர் - பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் குமார் (வீர தீர சூரன், குட் பேட் அக்லி)
ஓர் அசாதாரணமான இரவு தாங்கி நிற்கும் மர்மங்களுக்கு முன்னோட்டமாய் ஒலித்தது 'வீர தீர சூர’னின் தொடக்கக் காட்சியில் தடதடத்த தந்திக் கம்பிகள்.
குரோதம் கொப்பளிக்க காளி - அருணகிரி - கண்ணன் மூவரும் இருளில் நிகழ்த்திய கொலைவெறித் தாண்டவத்துக்கு ஜி.வி உடுக்கை தட்டி கனமேற்ற, கடைசிவரை நெஞ்சில் கைவைத்தபடியே அமர்ந்திருந்தார்கள் ரசிகர்கள்.
சரி - தப்புக்கெல்லாம் அப்பாற்பட்ட களத்தில் கதை விறுவிறுப்பாகப் பயணிக்க, அதற்கு அவரின் கறுப்பு, வெள்ளை விசைகள் உரிய நீதி வழங்கின.
ஆங்காங்கே கோடிட்ட இடங்களில் அவர் வெறும் காற்றைக்கொண்டு மட்டுமே நிரப்ப, அமைதிக்குள் உறைந்திருக்கும் அமானுஷ்யமே போதுமானதாய் இருந்தது நமக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ள!
இதற்கு அப்படியே நேர்மாறான ஆர்ப்பாட்ட இசைக் கச்சேரி 'குட் பேட் அக்லி.’
யதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகியிருந்த மாஸ் மசாலா படத்தில் எந்தக் கேள்விக்கும் இடம் கொடுக்காமல் நம்மை மின்னல் வேகத்தில் முன்னோக்கி மட்டுமே இழுத்துச் சென்றது அவரின் மேஜிக்.
ரெட் டிராகனுக்குப் பக்கவாத்தியமாக ஜி.வி-யும் தன் பங்குக்குத் திரி கொளுத்த, டெசிபல் தாங்காமல் உற்சாகத்தில் வெடித்துச் சிதறின தியேட்டர்கள்.
கமர்ஷியல் படங்களுக்கான மீட்டரை அடுத்தடுத்த தளங்களுக்கு முனைப்போடு உயர்த்தும் ஜி.வி.பிரகாஷ், தமிழ் இசையின் இளவரசன்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #GVPrakashKumar | #VeeraDheeraSooran | #GoodBadUgly | #BestBackgroundScore
Suriya Na Comeback✅
RJB Intelligent Writing ✅
Sai Music decent 👍
GK Vishnu Visuals 🏆🏆🏆
.
.
Something is missing in d 2nd Half..
Proper Payoff didn't happen in 2nd Half which made it Generic Mass Masala Film with Fantasy Elements 👍
#Karuppu Review
.
ONE TIME WATCHABLE film packed with Great Visuals & decent Music
Good 1st Half 👍
No Logic 2nd Half (filled with Theatrical Moments)
.
Story deviated too much from Core Plot which let us detached from it
Rating 3.25-3.5/5
.
#Suriya@RJ_Balaji