இன்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மின்சார வாரியத் தலைவர் அவர்களைச் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கடிதம் அளித்து, பேசினோம். வாரியத் தலைவர் அவர்கள், கோரிக்கைகள் குறித்து உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் அவர்களின் 8- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் அவரது திருஉருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அவரது புகழை போற்றி வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவு வழங்கி வணங்கினோம்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது திரித்துக் கூறி கைது செய்ததை கண்டித்து சென்னை T.நகரில், நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தொமுச பேரவை நிர்வாகிகள் மற்றும் மின்கழகத் தொமுச நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு கடும் கண்டனத்தைத் தெரிவித்தோம்
தமிழகத்தின் உரிமையைக் காக்க வேண்டிய நேரத்தில், மக்களின் குரலை ஒடுக்க நினைத்து பொய்யான வழக்கு பதிவு செய்து மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் எங்களின் இளம் தலைவர் அவர்களை கைது செய்த தவெக அரசுக்கு தமிழ்நாடு மின்கழகத் தொமுச சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாடு மின்கழகத் தொமுச சங்கத்தின் விழுப்புரம் மின்திட்ட முன்னாள் பொருளாளர் சகோதரர் திரு எஸ்.பன்னீர். மறைந்த என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், மின்கழகத் தொமுச சொந்தங்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
இன்று தமிழ்நாடு மின்கழகத் தொமுச-வின் மறைந்த நமது முன்னாள் பொதுச்செயலாளர் அண்ணன் திரு சிங்கார ரத்தினசபாபதி. அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சொந்தங்களுடன் தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி தொழிலாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.
தொழிற்சங்க மாமேதை எனது தொழிற்சங்க முன்னோடி தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மறைந்த நமது முன்னாள் பொதுச்செயலாளர் அண்ணன் #திரு_சிங்காரரத்தினசபாபதி. அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.
இன்று தமிழினத்தின் தலைமகன் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளையொட்டி மின்வாரிய தலைமை அலுவலக வாயலில் சங்க கொடியினை ஏற்றி அவரது திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி,மின்கழகத் தொமுச சொந்தங்களுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
நமது கழக தலைவர் அன்பு தளபதி அவர்களை மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நமது கழக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதன் விளக்க கடிதத்தினை கழக தலைவர் அவர்களிடம் வழங்கிய இனிய தருணம்.
இன்று பிறந்தநாள் காணும் 140 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் எனது பாசத்திற்குறிய நண்பர் #வழக்கறிஞர் Manoharan Sridharan அவர்களை நேரில் சென்று வாழ்த்து கூறி மகிழ்ந்தேன்.