என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
வெற்றித் தலைவர் அவர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த ஆட்சியின்போது, Party Fund உள்ளிட்ட பிரச்சனைகளால் தொழில் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது தொழில் முதலீடுகளுக்கு சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்ற நிலையை உருவாகி உள்ளார் மக்கள் விரும்பும் முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்.
அதன் வெளிப்பாடுதான், மத்திய தொழில் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் என்ற தரவு.
வெற்றித் தலைவர் அவர்களின் ஆட்சியில் வெற்றிப் பாதையில் தொழில் வளர்ச்சி, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடம், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தனிக் கவனம், அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை நோக்கி வெற்றிப் பயணம், வெற்றித் தமிழகம் நோக்கியப் பயணம்