PhD-ing in Sociology at SAU |❤️💙🖤
Social Justice is the only way !
Working on Home-Based Work, Garments Industry, Marxist Feminism, Feminist Political Economy
Forget about "amenities", start with the basics. PF maybe? When NGT directed factory owners also to compensate workers who are killed in the process, the lobby refused and appealed the order. What are you going to do about them? What pride do you feel in exploitation?
இதைவிட கோழைத்தனமான செயல் வேறெதுவுமில்லை. தவெக அரசிடம் கொள்கைத்தெளிவும், மாநில நலனும் சார்ந்த பார்வையென எதுவுமில்லை என்பதை இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
திராவிடம், தமிழ்த்தேசியம் என்பது எமது கொள்கைகள் எனச் சொன்ன முதல்வர் விஜய், இந்த இரு கொள்கைகளின் அடித்தளத்தை தகர்க்கிறவகையில், ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறல்களுக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவை ஏன் ரத்து செய்கிறார்?
இதைவிட மேலதிகமாக ஆய்வு செய்யும் குழுவை நியமணம் செய்யப் போகிறாரா அல்லது பாஜக-மோடி அரசு விரும்புகிறதை போல ஒன்றிய அரசுக்கு அடிபணிந்து அடிமையாய் தமிழ்நாடு இருப்பதை விரும்புகிறாரா? எது உங்கள் கட்சியின் இலக்கு? எது உங்கள் ஆட்சியின் நோக்கம்?
மாநில-ஒன்றிய உறவுகள் சமமற்றவையாக, மாநிலத்தை வஞ்சிப்பவையாக இருப்பதாலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி முடக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் அடித்தளம். ஒன்றிய அரசு அராஜகமாக மாநிலங்களின் உரிமைகளை ஆக்கிரமித்துள்ளது. இதனாலேயே கச்சத்தீவு இழப்பு, இந்தி திணிப்பு, கல்வி தலையீடு, கனிம சுரண்டல், வரி சுரண்டல் என பலவற்றை இந்திய ஒன்றியம் தமிழர்களை வஞ்சிக்கிறது. இந்த சிக்கல்களுக்கு முடிவு கட்டவேண்டுமெனில், ஒன்றிய அரசிடம் குவிக்கப்படும் அதிகாரங்களின் பட்டியலை குறித்து ஆய்வு செய்து அம்பலப்படுத்த வேண்டும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பிற மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதரவை திரட்ட வேண்டும். இந்நிலை மாறுவதற்கான அரசியல் சாசன மாற்றங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும். இதன் மூலமாக, மாவட்டங்களை போன்ற அதிகாரமற்றவைகளாக மாநிலங்களை மாற்றும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை எதிர்கொள்ள இயலும்.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கொண்டுவந்த இந்த ஆய்வுக்குழு, இந்தியாவிலேயே முதன்மையனதாக, அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டுதல் தரக்கூடியதாக அமைக்கப்பட்ட சிந்தனையாளர்களை கொண்ட குழுவே ' மாநில-ஒன்றிய' அரசுகளுக்கிடையேயான உறவு குறித்து ஆய்வு செய்யும் நீதியரசர் 'குரியன் ஜோசப்' ஆய்வுக்குழு. இக்குழுவில் அங்கம் பெற்றுள்ளவர்கள் புகழ்பெற்ற துறைசார்ந்த வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்கள். இதுபோன்ற ஒரு குழுவை இந்தியாவின் எந்த மாநிலமும் உருவாக்கியதில்லை.
தனித்துவமான இக்குழுவை பாஜக-ஆர்.எஸ்.எஸ் விருப்பப்படி கலைத்துள்ளதாகவே தவெக அரசின் மீது நாம் குற்றச்சாட்டை வைக்க இயலும். ஏனெனில், இக்குழுவை கடுமையாக எதிர்த்த ஒரே கூட்டம் 'இந்துத்துவ தீவிரவாதிகள்' கூட்டம் மட்டுமே. இக்குழுவை கலைப்பதற்கான எவ்விதமான யோக்கியமான விளக்கத்தையும் தவெக அரசு கொடுத்துவிட இயலாது.
'மாநில உரிமைகள்' குறித்த அரிச்சுவடி அறியாதவர்களே இக்குழுவை கலைக்க ஒத்துக்கொள்வார்கள். தவெக அரசு செய்த மிகப்பெரும் அரசியல் தவறுகளில் இது மிகமோசமானது, ஒட்டுமொத்த தமிழினமும் கண்டிக்க முன்வர வேண்டும். ஏனெனில் இக்குழு என்பது 'தமிழ்நாட்டின் அடையாளம், தமிழர்களின் சுயமரியாதை'. இந்திய சனநாயகத்திற்கு தமிழ்நாடும், திராவிடமும் அளித்த சிந்தனைக் கொடை ' மாநில உரிமை' எனும் முழக்கம். இந்த முழக்கத்தை முடக்கி இருக்கிறது தவெக அரசு. இதை எவ்வகையிலும் நாம் ஏற்க இயலாது. தவெக அரசின் இந்த முடிவை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இம்முடிவை கைவிட்டு உடனடியாக இக்குழுவை மீண்டும் நியமனம் செய்திடவேண்டும். இல்லையெனில், இம்முடிவு என்பது, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலுக்கு அஞ்சி எடுக்கப்பட்ட முடிவாகவே வரலாறு பதிவு செய்யும்.
"ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று பாரதியாரால் குதூகலத்துடன் வரவேற்கப்பட்ட ரஷ்ய புரட்சி தினம் இன்று.
(நவம்பர் 7) உலகில் ஒரு புதிய சகாப்தம் துவங்கிய நாள். மார்க்சியத்தை முதன் முதலில் நடைமுறை சாத்தியமாக்கி காட்டியவர் தோழர் லெனின். லெனினும், அக்டோபர் புரட்சியும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும்.
சோவியத் புரட்சியும், அதன் சாதனைகளும் உலக உழைப்பாளி மக்களுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியது. அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். நாம் வெல்வோம்.
சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசன் அவர்கள் இன்று விடியற்காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சீருடை அணியாத காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
நள்ளிரவு கைது, விடியற்காலை கைது என்பதெல்லாம் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. புகார் இருந்தால் முறையாக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது.
கோவையில் கே.கே.நாயுடு அரசு உதவி பள்ளியில் நடந்த சாதிய ஒதுக்குதல், வன்முறை காரணமாக மாணவர் அகிலன் தற்கொ*லை செய்துள்ளார். தனக்கு இதுபோல நடக்கும் சாதிய வேறுபாடு, கொடுமை குறித்து பெற்றோர் வாயிலாக தலைமை ஆசிரியருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். எவ்வித நடவடிக்கை இல்லாத நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற போது, பாதியில் வீட்டிற்கு திரும்பியவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறார். வன்கொடுமை சட்டம் பதிவு செய்யபப்ட்டபின்னரும், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், சாதிய உணர்வோடு அவமானப்படுத்திய மாணவர்கள் என எவரும் சிறைப்படுத்தப்படவில்லை. ஆசிரியர் ஒருவர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கே.கே.நாயுடு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. இப்பள்ளியின் அனுமதியை தவெக அரசு ரத்து செய்து, இப்பள்ளியை அரசுடமையாக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பின்னர், பள்ளி நடத்தும் தகுதி அந்த பள்ளியின் நிர்வாகத்திற்கு கிடையாது. அதேபோல தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், குற்றமிழைத்த மாணவர்கள் உடனடியாக சிறைப்படுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் காவல்நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தை சனநாயக அமைப்புகளின் தோழர்கள் அனைவரும் நடத்தி வருகிறோம்.
தவெக அரசு உடனடியாக பள்ளிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக இயங்குகிறது.
இந்த சிக்கல் குறித்து அனைத்து தர்ப்பினரின் ஆதரவை கோருகிறோம்.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களது தொழிலில் சுமக்கும் சுமைகளை, நிச்சயமற்ற அவர்களின் எதிர்காலத்தை, சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த ஆவண படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் உணரும் வகையில், சிறப்பாக "எதிர்நீச்சல்" சேனல் வெளியிட்டுள்ளது. பாராட்டுக்கள்.
நமது வீட்டிற்கு வந்து சேரும் ஒவ்வொரு பொருளின் பின்னாலும் இவர்களின் உழைப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவசியம் அனைவரும் பாருங்கள்.
https://t.co/PCPGeWZhCQ
Neha has been detained alone and taken to an unknown location!
They don't have their phone!
Delhi Police must answer: where is Neha?
Once again an abduction, not detention!
மதம் மாறியதைக் காரணம் காட்டி சமூகநீதி உரிமைகளைப் பறிப்பதா?
இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பாதுகாக்கதமிழ்நாடு அரசு உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டுவர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !!
மாணவன் பாரதிதாசன் இந்நிலைக்கு தள்ளிய அரசின் செயல் படுமோசமானது @CMOTamilnadu உடனடியாக விடுவிக்க வேண்டிய நிதியை விடுவித்து மாணவனின் கல்வியை பாதுகாக்க வேண்டும், தவறும் மாணவர்கள் பட்சத்தில் போராட்டத்தை அரசு எதிர்கொள்ள வேண்டி இருக்கும்
UK Visas and Immigration விதிமுறை மாற்றங்களால் தமிழ்நாடு அரசின் நிதியுதவி ஏற்கப்படாத நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2025–26ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைந்திடக் கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்க, இங்கிலாந்து அரசுடன் உடனடியாக பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் திரு. V.ராஜேந்திர ராஜ் அவர்களின் மகள் திருமிகு. R. ஜீனா - திரு. E. பரத் இணையருக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில், இன்று மணமக்களை அவர்களது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
பாஜக எங்கே இருக்கிறதென மாண்புமிகு அமைச்சர் கேட்கிறார்?
பாஜக எங்கும் இருக்கிறது.
நீதிபதிகளாக இருக்கிறது.
அதிகாரிகளாக இருக்கிறது.
ஆளுநராக இருக்கிறது.
காவல்துறையாக இருக்கிறது.
திருப்பரங்குன்ற தீபத்தூணாக இருக்கிறது.
நீட் தேர்வாக இருக்கிறது.
மேகேதாட்டு அணையாக இருக்கிறது.
தனியார்மயமாக இருக்கிறது.
திருப்பதிக்கு பட்ஜெட்டை எடுத்துபோவதில் இருக்கிறது.
ஜெபமாலையை பட்ஜெட்டோடு சேர்த்து தூக்கிவருவதில் இருக்கிறது.
இந்த பட்டியல் நீளமானது..
பாஜக என்பது வெறும்கட்சியாக இல்லை, பாசிசமாக, அனைத்து துறைகளிலும் பாயாசமாக அமர்ந்திருக்கிறது.
கவனமாக செயல்படவில்லையெனில்,
பாஜக பயங்கரவாதம் தலைவிரித்தாடும். திருப்பரங்குன்றத்தில் உறுதியாக இல்லையெனில் 'பாய்சன் பாயாசம்' பந்திக்கு வரும்.
Why do we assume intellectuals come only from elite institutions or privileged backgrounds?
My column in the Indian Express @IndianExpress argues that we’ve overlooked a long tradition of worker-intellectuals—people whose ideas emerge from lived experience and labour.
Column 👇
Nine years ago, S Anitha became the first victim of NEET in Tamil Nadu, and one of the most prominent faces of Tamil Nadu’s fight against NEET.
In 2017, the 17-year-old from Ariyalur had scored 1,176 out of 1,200 marks in her Class 12 Tamil Nadu State Board exams. Her medical cut-off score was 196.75 out of 200 — marks that would have placed her among medical aspirants under Tamil Nadu’s earlier admission system.
But that year, NEET became mandatory for medical admissions. Anitha, who had prepared through the state-board syllabus, could not secure a medical seat through the national entrance exam. She became one of the earliest voices opposing NEET in Tamil Nadu, arguing that a common entrance test would disadvantage students from rural areas, government schools and marginalised communities.
Anitha’s brother S. Manirathnam, who has now joined the Cockroach Janata Party (CJP) protest in Delhi, says her fight was deeply personal.
He says Anitha was raised by their father, a daily wage labourer, after their mother died when she was seven. He recalls that Anitha wanted to become a doctor because their mother’s death due to an illness had shaped her dream of entering medicine.
“She wanted to become a doctor because she had seen the suffering caused by the lack of medical care,” Manirathnam said, recalling his sister’s journey.
Anitha joined the legal battle against NEET and became one of the petitioners before the Supreme Court, seeking relief for Tamil Nadu students. The Court did not grant the exemption sought by the state, and days later, on 1 September 2017, Anitha died by suicide at her home in Ariyalur.
Speaking about the impact of NEET on his family, Manirathnam said, “NEET has destroyed my family.”
Years later, he has joined the CJP protest, saying Tamil Nadu’s opposition to NEET began with students like Anitha, who questioned whether a single national entrance exam could account for the inequalities faced by students across the country.
@hey_eshwar reports.