9%… இதை சாதாரண எண்ணாக பார்க்க முடியாது! 🔥
பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை.
தேசிய அரசியலில் இன்னும் கால் பதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி ஆரம்பித்து 100நாள் தான்.
ஆனால், “Next PM?” என்ற கேள்விக்கு ஏற்கனவே 9% பேர் முதலமைச்சர் விஜய்யை தேர்வு செய்திருக்கிறார்கள்!
மோடி 49%… ராகுல் 27%…
அவர்களுக்கு பல ஆண்டுகால தேசிய அரசியல் அனுபவம் இருக்கிறது.
ஆனால் முதலமைச்சர் விஜய் - 9%!
இன்னும் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை…
தேசிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை…
இந்திய அரசியலில் தனது முழு சக்தியையும் இறக்கவே இல்லை…
இப்போதே 9% என்றால், நாளை பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் எங்கே போய் நிற்கும் இந்த எண்ணிக்கை?
அண்ணன் விஜய்யின் அரசியல் பயணம் இன்னும் தொடக்கத்தில்தான் இருக்கிறது.
ஆனால் தேசிய அரசியல் ஏற்கனவே அவரை கணக்கில் எடுத்துவிட்டது!
@TVKVijayHQ
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!
இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!
#CMJosephVijay
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு.தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
நல்வாழ்த்துகள்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டு, 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை 6.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக சந்தித்து வாழ்த்துப் பெற்றபோது.
#CMJosephVijay #TNAgribudget2026_27
400 கி.மீ சென்னை — தஞ்சாவூர்... சுட்டெரிக்கும் வெயில்ல AC இல்லாமல் ஒரு சாதாரண டெம்போ டிராவலர்ல பயணம்! 🔥
That’s the punishment to Abuser @Udhaystalin by @CMOTamilnadu 😂☠️
அறம் இழந்த எதிர்க்கட்சித் தலைவர்,
நஞ்சை நடைபயிலும் தஞ்சை மண்ணில் போற்றுதலுக்குரிய பெண்ணியத்தின் மதிப்பை, கண்ணியம் இழந்து மனம் மட்டுமல்ல, மண்ணும் அருவருக்கும் வகையில் பேசியிருப்பது, அவரது வளர்ப்பையும் வாழ்வியல் பண்பையும் வெளிப்படுத்துகிறது.
தரம் தாழ்ந்து அவர் வெளிப்படுத்திய இந்தக் கருத்துக்காக, எந்த நிபந்தனையும் இன்றி மக்களிடமும், பெண்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.@Udhaystalin
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.
ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.
இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்!
#CMJosephVijay