#குர்ஆன் 36:12
நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல் களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகின்றோம். இவை ஒவ்வொன்றையும் “லவ்ஹுல் மஹ்ஃபூளில்” (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கின்றோம்.
10/03/2018
குர்ஆன் 14:51
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.
#குர்ஆன் 4:101
நீங்கள் பூமியில் பயணம் செய்யும் காலத்தில் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் (“கஸர்” தொழுவது அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது.
#குர்ஆன் 5:41
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
Some non Muslim boys are spending their own time to protect some Muslim families day and night in kadugannwa areas
This is humanity
Thank you my brothers