இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, ம.பி.ன் உஜ்ஜைனில் ஷாஹி மசூதியின் மினாரா வியாழக்கிழமையன்று
இடிக்கப்பட்டது. இதில் மசூதியின் குவிமாடம் மற்றும் முதல் தளத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே இந்தச் சேதத்திற்குக் காரணம் என்றும், இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்று என்றும் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது!
நாடு முழுக்க வாழும் இஸ்லாமியர்கள், தங்களின் வழிபாட்டு உரிமை சட்டரீதியாகவே அழிக்கப்படுகிறதே என வேதனை கொண்டிருக்கும் வேலையில், பள்ளிவாசலின் பகுதிகளை அரசு இடித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உ.பி.யை சேர்ந்த கவுரவ் என்பவரை திருட்டு குற்றத்திற்காக சந்தேகப்பட்டு கைது செய்ய இரவு 11:45 மணிக்கு அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர்.
கைது செய்யும் போது கர்ப்பினியான அவரது மனைவி அஞ்சலி, கணவரை அழைத்து செல்ல வேண்டாமென கெஞ்சிய போது, அவரை உதவி ஆய்வாளரான தர்மபால் சிங் எட்டி உதைத்ததில்
கடுமையாக பாதிக்கப்பட்ட அஞ்சலி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பின் இறந்துள்ளார்.
இதன் பின் மக்கள் வெகுண்டெழுந்ததன் விளைவு, 6 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த அஞ்சலியின் மரணம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து காவலர்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/dxMJgOqjhG
மேற்கு வங்கத்தில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை, 9 முஸ்லிம் ஆண்கள் மற்றும் 2 சிறுவர்கள் பங்களாதேஷியர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு அகதி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைக்கெல்லாம் அவர்களை உட்படுத்தாமல், நேரடியாக அகதி முகாமில் அடைக்கும் வேலைகளும் நடக்கிறது.
ஹிந்துக்களை எங்களின் இதயங்களில் வைப்போம்; முஸ்லிம்களை எங்களது கால்களுக்கு அடியில் வைப்போம். எதிர்காலத்தில் ஹிந்துக்கள் பங்களாதேஷிலிருந்து வந்தாலும், அவர்களை இந்தியர்களாக ஆக்கிவிடுவோம் என வெளிப்படையாக காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முஸ்லிம்களின் வீட்டாரிடம் பேசுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சப்தமில்லாமல் CAAவை செயல்படுத்தும் பாஜகவின் மதவெறி அரசியல் நிறுத்தப்பட வேண்டும்.
https://t.co/LEKGvDQhxw
அரசு அதிகாரி ஒருவர் திட்டமிட்டே தன் மதத்தின் வழிபாட்டு அம்சங்களை, அரசு வேலைகளில் ஈடுபடும் போது வெளிப்படுத்துவது தவறான செயலாகும்.
ஆனால், ஒருவரின் இயல்பான பேச்சில் வெளிப்படும் அவரின் மத நம்பிக்கை சார்ந்த வார்த்தைகள் ஒன்றும் குற்றச்செயல் அல்ல. இஸ்லாமியர் என்பதற்காகவே IPS அதிகாரி புஷ்ரா பானு பேசிய இஸ்லாமிய வார்த்தைகளை அரசியலாக்கி, அவரை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு கண்டனத்திற்குரியது!
https://t.co/2kk05tHUko
மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறாமல் இயங்கும் 252 மதரசாக்களை மூடுவதற்கான உத்தரவை பாஜக அரசு வழங்கியுள்ளது. மேலும் 100 மதரசாக்களுக்கும் விளக்கம் கேட்டு ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை, போதுமான மாணவர்கள் இல்லாதது, மாநில கல்வி பாடத்திட்டத்துடன் ஒத்துப்போகாத கல்விமுறை போன்ற காரணத்தால் மதரசாக்களை மூடப்போகிறோம் என பாஜக அரசு கூறியுள்ளது!
குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை செய்யாமல், கல்வி கூடங்களை மூடுவது இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடாகவே தெரிகிறது!
https://t.co/hYwsz0rWZ6
பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 பேரை, சத்தீஸ்கர் மாநில காவல்துறை செப்டம்பர் 4 ஆம் தேதி தடுப்புக் காவலில் வைத்தது. பிழைப்பிற்காக சத்தீஸ்கருக்கு சென்ற சிறுபான்மை சமூக மக்களை, அரசு ஆவணங்கள் இருந்த போதும் அவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பின், அதில் 19 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 நபர்களின் பெயர்கள் SIRல் நீக்கப்பட்டுள்ளதால் அவர்களை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்!
இந்தியாவில் முஸ்லிம்களையும், இதர சிறுபான்மை சமூக மக்களையும் சிறைப்படுத்த, அவர்கள் குற்றவாளிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகமே அரசு நிர்வாகத்திற்கு போதுமான ஆதாரமாக உள்ளது!
வாக்குரிமையை உறுதிப்படுத்தும் முறை என்று சொல்லி கொண்டுவரப்பட்ட SIR, ஒருவரை இந்தியரா வெளிநாட்டவரா என தீர்மானிக்கும் முறையாக மாறியுள்ளது வேதனைக்குரிய விஷயம். இது அனைத்து மக்களையும் ஏமாற்றும் செயல்!
https://t.co/US3VZBiTaf
ம.பி.ல் ஓரிறை கொள்கையில் வாழும் இஸ்லாமியர் ஒருவரை மிரட்டி, மாட்டை வணங்க வைத்துள்ளது பஜ்ரங்தல் கும்பல்! தன் மதம் தான் உயர்ந்தது என கூறி,அப்பாவி முஸ்லிம்களை கொடுமைப்படுத்தும் ஹிந்துத்துவா குண்டர்களின் செயல் நிறுத்தப்பட வேண்டும். இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
உ.பி.யை சேர்ந்த 2 பெண்கள்(மேஜர்)
இஸ்லாத்தை உளமாற ஏற்றுக்கொண்டதை
அவர்களது குடும்பத்தார் எதிர்த்து, அவர்களது காட்டுப்பாட்டிலேயே சுமார் 5 ஆண்டுகள் அப்பெண்களை
அடைத்து வைத்துள்ளனர்.
அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், விசாரணை முடிந்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
ஒருவர் தாமாக விரும்பி வேறொரு மார்க்கத்தை தழுவுவதை சட்டம் அனுமதிப்பதால், அப்பெண்களை விடுவிக்க வேண்டுமென்றும், பெற்றோர்களும் மாநில அரசும் இணைந்து அப்பெண்களுக்கு ₹25 இலட்சம் அபராதம் வழங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்று அதன்படி வாழ்வதற்கும் பல சட்டப்பபோராட்டங்களை சந்திக்கும் சூழலில் தான் முஸ்லிம்களின் நிலை உள்ளது.
https://t.co/NJxoPI1aA0
#NewsUpdate | சிறுபான்மையினர் நீக்கம் - SIR நடவடிக்கை குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டு ஐநா நோட்டிஸ்
தேர்தல் ஆணையம் SIR விவகாரத்தில் இந்திய குடிமக்களிடம் வெளிப்படையாக செயல்படுமா?
#SunNews | #SIR | #UN
கடந்த ஆண்டு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
நடைபெற்ற SIR பணியின் முடிவாக 5 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். அதில் மே.வங்கத்தில் மட்டும் நீக்கப்பட்டவர்களில் 27 இலட்சம் பேர் தீர்ப்பாய முடிவு கிடைக்காமல் வாக்காளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
முஸ்லிம் சமூகத்தை வைத்து ஒரு கட்சியை அளவுக்கு மீறிப் புகழ்வதை விடுங்கள்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெற்றுத் தர முடியுமா?
உ.பி.ல் மூன்று இஸ்லாமிய பெண்களை (ஷாமா பர்வீன், ஷாய்ஸ்தா, ஃபாத்திமா) மாட்டுக்கறி சமைத்தார்கள் என கூறி கைது செய்துள்ளது காவல்துறை! கைப்பட்டப்பற்ற கறியை தடயவியல் ஆய்விற்கு அனுப்பியுள்ளார்களாம்!
மேற்கு வங்கத்தில் ஜூன் 21 அன்று, மோடி பங்குபெறும் சர்வதேச யோகா தின நிகழ்விற்காக கொல்கத்தாவின் ரெட் ரோடு பகுதி 7 நாட்களுக்கு மக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்படுவதாக அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரெட் ரோடு பகுதியில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த ஒரு மணி நேரம் கூட அனுமதி வழங்கப்படவில்லை! ஆனால், யோகாவிற்காக ஒரு வாரம் சாலையை மூட பாஜக அரசு அனுமதிக்கிறது என TMC கட்சியை சேர்ந்த MP மஹுவா மோயித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்!
தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக எவ்வித பாரபட்சமான செயலையும் பாஜக அரசு செய்யும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது!
https://t.co/xJUDoO6Cep
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, மே 11 - 29, 2026 வரை முஸ்லிம்களுக்கு எதிராக 46 வன்முறை சம்பவங்களை சங்பரிவார கூட்டம் நடத்தியுள்ளதாக, The Association for Protection of Civil Rights (APCR) அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இசைவோடு சங்பரிவார கூட்டம் ஆடும் மதவெறியாட்டத்திற்கு, அரசுத்துறைகளும் அமைதி காத்து ஆதரவாக நிற்பது கண்டிக்கத்தக்கது.
https://t.co/VwgRzY8kmF
தென்னிந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடத்தில், $15 பில்லியன் மதிப்பில் Data Centerஐ, Google நிறுவனம் கொண்டுவர உள்ளது.
தங்களது நிலத்தை விற்க சொல்லி நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தலித் மக்கள் குமுறுகின்றனர். இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் குறைவான அளவே நிலம் வைத்துள்ள நிலையில் அதையும் பிடுங்குவதற்கு அரசுகள் அனுமதி வழங்குவது மனிதநேயமற்ற செயலாகும்.
https://t.co/rngjJ0oGt7
அமெரிக்கா, ஈரான் போர் துவங்கப்பட்ட நாளான மார்ச் 1, 2026 முதல் மே 12 வரை, 12 மாநிலங்களில் 53 ஊர்களுக்கு சென்று 81 கூட்டங்களில் மோடி பங்கெடுத்துள்ளார்!
இவற்றில் வெறும் 13 கூட்டங்கள் மட்டுமே அரசு சார்ந்த நிகழ்வாகும். மற்ற அனைத்தும் கட்சி சார்ந்த கூட்டங்கள். அதிலும் பெருபாலானாவை 5 மாநில தேர்தல் பரப்புரைக்காக நடத்தப்பட்டவை தான்.
எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி மக்களுக்கு உரையாற்றியவர், பல இலட்சங்களை அரசியல் நிகழ்வுகளுக்காக செலவழித்துள்ளது தற்போது அம்பலமாக்கியுள்ளது. மோடி நாட்டு நலனில் துளியும் அக்கறை இல்லாதவர் என்பதையே இது வெளிக்காட்டுகிறது!
https://t.co/coNkgwpc36
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுமார் 20 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவினர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக RSS மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள், அக்குடும்பத்தினருக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.
தண்ணீர் உரிமை மறுப்பு, அரசு திட்டத்தின் மூலம் வேலை பெறுவதற்கான அனுமதி மறுப்பு, இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு, அவர்களின் விவசாய பயிர்களை நாசப்படுத்துவது, கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாறச் சொல்லி அடித்து துன்புறுத்துவது என ஹிந்துத்துவ குண்டர்கள் பல கொடுமைகளை செய்துள்ளனர்.
இவர்கள் மீது வழக்கு போடுவதற்கே பெரும் சிரமத்தை பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்துள்ளனர். வழக்கு போடப்பட்டவர்களும் பிணையில் வெளியில் வந்துள்ளனர். ஹிந்துத்துவ குண்டர்களின் நெருக்கடியால் 10 குடும்பத்தார் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளனர். பலர் கிராமத்தை விட்டே வெளியேறியுள்ளனர்.
ஹிந்துத்துவ குண்டர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்!
https://t.co/pHwtabDfLl
உ.பி.ல் காஸியாபாத் எனும் நகரில் சைக்கிளில் மூட்டையை எடுத்துச் சென்ற முஸ்லிம் சிறுவர்களை, மாட்டிறச்சி எடுத்துச் செல்கிறார்கள் என்றும் அதை ஹிந்தான் ஆற்றில் வீசப்போகிறார்கள் எனக் கூறி, காவல்துறையினரிடம் அவர்களை கைது செய்யும் படி கட்டாயப்படுத்தும் பாஜக மேயர் சுனிதா தயால்!
அப்பாவி சிறுவர்களை சுற்றி நின்று கொண்டு, ஏதோ குற்றவாளிகளை போல வீடியோ எடுத்துள்ளது அக்கூட்டம். அப்பாவி சிறுவர்களை கொடுமைப்படுத்திய மேயர் மீது சட்ட நடவடிக்கை பாய வேண்டும்.
https://t.co/Ak1LnSpxOl
எல்லா மதரஸாக்களிலும் இனி வந்தே மாதரம் பாடப்பட வேண்டுமென மேற்குவங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதை, மத வெறுப்பின் வெளிப்பாடாகாவே பார்க்க வேண்டியுள்ளது.
ஒருவரின் மத உரிமைக்கு எதிரான செயலை செய்யச் சொல்லி நிர்பந்தப்படுத்துவது சட்டவிரோதமானது!... (1/2)
ம.பி.ல் போஜ்ஷாலா கமால் மவுலானா பள்ளிவாசல் இடத்தை கோயில் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள சூழலில், உடனடியாக அங்கு பூஜைகள் நடத்த, வழிபாடுகள் செய்வதற்கான வேலைகள் நடந்து முடிந்துள்ளது... (1/2)