ஆஸ்கார் நாயகன் ஊழல் செய்த கொள்ளையடித்தவைகளை வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய @sansbarrier 👌🏻
அண்ணா இதுக்கு மேலயும் இவனுங்கள விட்டு வைக்க கூடாது @TVKVijayHQ@CMOTamilnadu 🙏🏻
அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்!
அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy.
ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-ஐ பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle!
இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
@Seeman4TN@CMOTamilnadu ஆதலால் எனதருமை தங்கை உண்டியல் கார்த்திகாவை வெளியில் எடுக்க என் தம்பிகள் அனைவரும் திறள்நிதி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-செபாஸ்டியன் சைமன் (எ) சாமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் புரோக்கர் கட்சி
*மேடை நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைத்த திமுக!!!*
மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைப் பொதுக்கூட்ட மேடையிலேயே அருவருக்கத்தக்க, தரம் தாழ்ந்த சொற்களால் ஒரு பெண் பேச்சாளர் வசைபாடியதும், அதை மேடையில் இருந்தபடியே சென்னை மேயர் சிரித்து ரசித்ததும், எம்பி கனிமொழி தடுக்காமல் கள்ள மௌனம் காத்ததும் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையே தலைகுனிய வைத்துள்ளது!
பொதுவெளியில் நாகரிகம், பெண்ணியம், சமூக நீதி எனப் பாடம் எடுக்கும் திமுகவின் உண்மை முகம் இந்த மேடையில் அம்பலமாகியுள்ளது. மேடைகளில் பெண்களையும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான சாக்கடை அரசியலுக்குப் பழக்கப்படுத்துவதுதான் திமுகவின் ‘முற்போக்கு’ கலாச்சாரமா?
மாநிலத்தின் முதலமைச்சரை இவ்வளவு கொச்சையாகப் பேசும்போது, தடுத்துக் கண்டிக்க வேண்டிய மேயர் அதை வெட்கமின்றி ரசிப்பதும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் லேசான கண்டிப்பை மட்டுமே காட்டுவதும் இவர்கள் அந்த இழிவான அவதூறுக்கு முழு உடந்தை என்பதையே காட்டுகிறது.
4 மாத கால தவெக மக்கள் அரசின் ஊழலற்ற நிர்வாகத்தையும், இடைத்தேர்தல் படுதோல்விகளையும் தாங்கிக்கொள்ள முடியாத அரசியல் விரக்தியே திமுகவை இந்த எல்லைக்குத் தள்ளியுள்ளது. கொள்கை ரீதியாக மோத வக்கற்ற கோழைகள்தான் தனிநபர் வசவுகளைக் கையில் எடுப்பார்கள்.
முதலமைச்சரை அநாகரிகமாகப் பேசியவரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்குவதோடு, அதை மேடையில் ரசித்து வேடிக்கை பார்த்த மேயர் பிரியாவும், எம்பி கனிமொழியும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
பொறுமையைப் பலவீனம் என எண்ணி எல்லை மீறும் திமுகவின் இந்த மலிவான அரசியலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!!
மேலும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை மீறி அவதூறு பரப்புபவர்கள் மீது, சட்டம் தனக்கான பாதையில் பாரபட்சமின்றித் தன் கடமையைச் செய்யும்!!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
"So Called" பாரம்பரியக் கட்சிக்கு எனது வன்மையான கண்டனங்கள்!!
இதுதான் "So Called" பாரம்பரியக் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அரசியல் நாகரிகமா?
முதல்வரை ஒருமையில் பேசுவதை மேடையில் ரசித்துச் சிரிப்பதுதான் பாரம்பரியக் கட்சித் தலைவர்களின் பண்பாடா?
திமுக கூட்டங்களில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பைக்கூடப் பொருட்படுத்தாமல், முதல்வரை ஒருமையில் பேசும் போக்கு திமுகவின் தலைமை மூலம் ஊக்குவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டு மேடையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர்கள் ஆரவாரம் செய்து சிரித்துக் கொண்டாடுவது மிகவும் வேதனைக்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். ஆனால், பொது மேடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை மரியாதையையும் அரசியல் நாகரிகத்தையும் மறந்துவிடலாமா?
திமுகவின் முன்னாள் தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா அவர்களும் இத்தகைய செயல்கள் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறிப்பாக, மேயர் பிரியா அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் முதல்வரைப் பற்றி தொண்டர் ஒருவர் அருவருக்கத்தக்க வகையில் பேசுகையில், அதை ரசித்து நகைப்புக்குள்ளாக்குவதும், இழிவுபடுத்தும் பேச்சைக் கேட்டு சிரிப்பதும்தான் ஒரு மாநகராட்சியின் மேயருக்குரிய அரசியல் மாண்பா?
தமிழ்நாட்டின் முதலமைச்சரை ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அதை மேடையில் கொண்டாடுவதும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய அரசியல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது இந்த திமுக என்னும் So Called (பாரம்பரியக் கட்சி)?
அரசியல் என்பது கருத்துகளால் மக்களைச் சந்திப்பதற்கான களம்; தனிநபர் மரியாதையைச் சிதைப்பதற்கான மேடை அல்ல.
எதிர்க்கட்சியாக உள்ள திமுக இதுபோன்ற மரியாதையற்ற செயலில் ஈடுபட்டால், மக்கள் மனதிலிருந்து ஓரங்கட்டப்படும் நாள் விரைவில் வரும்.
@PriyarajanDMK@KanimozhiDMK
அரசியல் மேடைகள் தந்தை பெரியார் காலத்தில் பகுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிகளாக இருந்தன; அறிஞர் அண்ணா காலத்தில் அரசியல் அறிவை வளர்க்கும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. ஆனால், அண்ணாவிற்குப் பிறகு தி.மு.க., அரசியல் மேடைகள் தனிநபர் தாக்குதல் மேடைகளாக மாறின; அதுவும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் தி.மு.க-வின் தற்போதைய மேடைகள், ஆபாசப் பேச்சுக்கள் - அசிங்கமான வார்த்தைகள் - அவதூறு கருத்துக்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அருவருப்பான மேடைகளாக மாறிவிட்டன.
அதுவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தோற்று வீட்டில் முடங்கி இருக்கும் தி.மு.க., தன் ஆற்றாமையை, காழ்ப்புணர்வை தன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் மேடைகளை தி.மு.க-விற்கு எதிரணியில் இருக்கும் அரசியல் கட்சிகளை, அரசியல் கட்சிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கும் களங்கம் சூழ்ந்த களமாகப் பயன்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர் , தமிழ்நாட்டு மக்களால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களை மிகவும் தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார். அதை மேடையில் இருக்கும் சென்னை மாநகர மேயர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் மேயர் பிரியா அவர்கள் கைகொட்டி சிரித்து ரசித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகவும் உள்ள திருமதி.கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்கள் தலைகுனிந்து மௌனமாக இருக்கிறார். அவர் அந்தப் பேச்சாளரைக் கண்டிக்காதது ஒருபுறம் என்றால், மறுபுறம் சொந்தக் கட்சியினர் பேசும் பேச்சுக்களை கேட்க முடியாமல் திருமதி.கனிமொழி அவர்களே தலைகுனிந்து கூனிக்குறுகும் அளவுக்குத்தான் இன்றைய தி.மு.க மேடைகளின் தராதரம் இருக்கிறது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், உடனடியாக, சட்டப்படியான முறைகளில், தி.மு.க-வின் இதுபோன்ற அநாகரீக செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அப்போதுதான் ஜனநாயகமும் ஆரோக்கியமான அரசியலும் வலுப்பெறும். அதனால், தி.மு.க மேடையில் அநாகரீக முறையில் பேசிய அந்தப் பெண் பேச்சாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
நாகரீக அரசியல், பண்பான அரசியல் என்று வெறும் வார்த்தைகளில் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இவற்றை எல்லாம் கண்டிக்காமல் வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லது "அவரே இதுபோன்ற கொச்சையான பேச்சுக்களை கேட்டு ரசித்து ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாரா?" என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இதுபோன்ற அவதூறுகளால், ஆபாசப் பேச்சுக்களால் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக உருவாகி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி மறைத்துவிட முடியாது. ஆனால், தி.மு.க-வின் இதுபோன்ற ஆபாச நடவடிக்கைளால், அந்தக் கட்சியும் அதன் தலைமையும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இல்லங்களில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் என்பது உறுதி!
ஒரு காலத்தில் அழகிய தமிழின் அடுக்குமொழிகளால் கட்சியை வளர்த்த தி.மு.க-வினர் இன்றைக்கு அசிங்கமான பேச்சுக்கள், ஆபாசமான வாக்கியங்கள், கொச்சையான வார்த்தைகளுக்குள் முடங்கிப்போய் கிடக்கின்றனர். அவர்களை முறைப்படுத்தி கட்சியை வளர்க்கும் வழி தெரியாமல் அந்தக் கட்சியின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதை - சமூகநீதிக் கருத்துக்களையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்கு வகுத்துக் கொடுத்த கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற இலக்கணத்தையும் மறந்துவிட்ட தி.மு.க-வினர்... அவர்களுடைய இதுபோன்ற அவதூறுகளையும் ஆபாசப் பேச்சுக்களையும் கடந்துதான் அண்ணன் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தமிழக மக்களின் மனங்களிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுள்ளார்; இனியும் பெற்றுக் கொண்டே இருக்கப்போகிறார் என்பதையாவது மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கடும் கண்டனம்! திமுக மௌனம் கலைக்க வேண்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக மகளிரணி நிர்வாகி, கவுன்சிலர் சுதா பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு திமுக தலைமை இன்றுவரை பதில் சொல்லாதது ஏன்?
மேடையில் முதலமைச்சர் அவமதிக்கப்படும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் சென்னை மேயர் பிரியா சிரித்துக் கொண்டிருப்பதையும், கனிமொழி எம்.பி. கண்டிக்காமல் அமைதி காப்பதையும் காணொலியில் காண முடிகிறது. இதுதான் திமுகவின் அரசியல் நாகரிகமா?
அரசியல் விமர்சனம் வேறு; தனிமனித அவமதிப்பு வேறு! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இழிவுபடுத்தும் பேச்சை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது.
திமுக @arivalayam தலைமை, @KanimozhiDMK , @PriyarajanDMK ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்!
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் கண்ணியம் எல்லை மீறக் கூடாது!