Dear parents, if u have children's under 18 age here a msg for u..
Your child’s Instagram and many adult apps isn’t just scrolling funny pages.. Many dangerous activities around there..
Induvitual Subscriptions, Reels & algorithms are built to grab attention and spoil their future and your money..
Here some ways to Protect them
• Block purchases/subscriptions
• Set time limits & no phones in bedrooms
• Talk openly about what they see
Technology isn’t the enemy.
Unsupervised access to social network is their enemy..
Parents only still the best filter for their children's..
#ProtectOurKids #InstagramSubscribtions
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 19.8.2026 அன்று உலக புகைப்பட நாளை முன்னிட்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கர்நாடக மாநில முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார், மாண்புமிகு கேரளம் மாநில முதலமைச்சர் திரு. வி.டி. சதீசன், மாண்புமிகு அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் திரு.டி.கே. ஜோஷி, மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன், மாண்புமிகு தெலங்கானா மாநில துணை முதலமைச்சர் திரு. மல்லு பட்டி விக்ரமார்க்கா, மாண்புமிகு லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் திரு. பிரஃபுல் படேல், தென் மண்டலக் குழுவினைச் சேர்ந்த மாநிலங்களின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
#CMJosephVijay
ரொம்ப தப்பு இது .
அதே சமயம் - உங்க அல்லக்கைகள் இதை விட கேவலமா பேச கூடியவர்கள் @annamalai_k அண்ணா !
நீங்க மத்தவனை குறை சொல்லும் முன் , உங்க அல்லக்கைகளை சரி பண்ணுங்க .
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில், “மழைநீரை முழுமையாக தேக்க முடியாது என்பதால், நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது” என நீதிபதி கருத்து.
நீர் திறப்பு குறித்த தரவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, 24ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.
சிறப்பு @CMOTamilnadu முதல்வரே!! ❤️
CM Vijay invited both M.K. Stalin and Udhayanidhi Stalin to the Independence Day event, but they boycotted this as well.
So much ego! Earlier, Udhayanidhi boycotted the Delimitation meeting, and now the Independence Day event. They continue to act against the interests of our state and nation. 😷
Leaked film,
A-censored film,
7-month delay,
non-holiday release — yet #JanaNayagan has crossed ₹80+ Cr share in Tamil Nadu alone! 🔥
If the film had released as planned during the Pongal holidays, it could have easily crossed ₹125+ Cr share in TN and created an all-time record! 🔥
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வரலாறு திரும்பியது 🔥
சொந்தமாக கட்சி தொடங்கி…
மக்களை மட்டுமே நம்பி…
முதல் தேர்தலிலேயே வென்று…
தமிழ்நாட்டின் முதலமைச்சராகி…
கோட்டையில் சுதந்திர தினத்தன்று கொடியை ஏற்றியவர்கள் இருவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
நம் வெற்றி தலைவர் தளபதி விஜய்.
வாரிசு அரசியல் இல்லை.
அரசியல் குடும்பத்தின் பின்புலம் இல்லை.
இன்னொருவரின் கட்சியை அபகரிக்கவும் இல்லை,
பல தலைமுறைகளின் அதிகாரக் கட்டமைப்பு இல்லை.
மக்களின் நம்பிக்கையை அரசியல் சக்தியாக மாற்றியவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?
காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.
பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.
திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
15.08.2026
@CMOTamilnadu