இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்��ள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக���கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
ந��ளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர் கார்த்தி என்ற நபரும் அவரது நண்பரும்.
ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு போர்வையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடானது. திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம், திமுகவில் பதவி வகிக்கும் இது போன்ற சமூக விரோதிகள்தான். முற்றிலும் மனிதத்தன்மையற்ற அளவுக்கு திமுகவினரின் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
சமூகத்தின் அமைதிக்கும், நமது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக ��ருக்கும் திமுக எனும் தீய சக்தியை, மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது.
இந்த சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
சேலம் அருகே அரியானூரில், அரசுப் பேருந்து வி���த்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புனித நாளில், அனைவரிடமும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும், அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்திருக்கவும் இறைவனை வேண்டிக் கொள்கிற��ன்.
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
கோவையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் திடீரென காரில் இருந்து இறங்கி பைக்கில் சென்ற அண்ணாமலை..!
#Coimbatore | #Annamalai | #BJP | #PolimerNews
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது.
கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜன��க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர்கள், கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாமல், முதல் உதவி கூட கிடைக்காமல், சிறுவன் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்���ட்டிருக்கிறது.
அரசுப் பணி நியமனம், பணி மாற்றம் என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவே அரசுப் பணிகள் என்பதை விட்டுவிட்டு, அரசுப் பணி நியமனங்களில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற போக்கில் திமுக அமைச்சர்கள் செயல்படுவதன் விளைவு, சுகாதாரத் துறையில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள். கடந்த 5 ஆண்டுகளில், தாங்கள் பணம் சம்பாதிக்க, தமிழக ச���காதார கட்டமைப்பையே சீரழித்திருக்கிறது திமுக அரசு.
உயிரிழந்த சிறுவன் பிரஜன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தாய்மார்களின் கண்ணீரையும், இளைஞர்களின் சீரழிவ��யும் கண்டும் காணாமல் இருக்கும் கையாலாகாத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி நடத்தும் மாபெரும் அறப்போராட்டம்!
#SaveWomenFromDMK