தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தவும் சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி நிறைவுறையாற்றிய போது.!
#CasteCensus #PMK
மாவீரன் ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார்; அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம்!
எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
PMK - சாதி கட்சி?
VCK - சமூக நீதி கட்சி?
BJP - மதவாத கட்சி?
IUML - மதசார்பற்ற கட்சி?
---
ஆனால் நிச்சயம்
திமுக - அயோக்கியர்களின் கட்சி/
அரசியல் என்பதும் ஒரு வித சித்துவிளையாட்டு நல்லவர்கள் அல்லாதவர்கள் சிக்கும்போது!
Krishnagiri #DYFI district secretary K Ilavarasan secured by Samalpatti police in wee hours of Tuesday related to pipeline connection issue in Thideerkuppam village. Opposite faction allegedly led by former K Ettipatti panchayat president Sasikala's husband Perumal damaged pipe.
எதார்த்தமாக வரையப்படும் சில கார்ட்டூன்கள் சிலருக்கு டிரேட் மார்க் லோகோ போல் அமைந்துவிடும்..
அப்படி திருமாவுக்கு காலத்திற்கும் பொருத்தமான கார்ட்டூனாக இது அமைந்துவிட்டது.. ;)
மத்திய உள்துறை முன்னாள் அமைச்சரும், எனது அமைச்சரவை சகாவுமான சிவராஜ் பாட்டீல் அவர்கள் முதுமை காரணமாக அவரது சொந்த ஊரான லத்தூரில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய காலத்தில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கு துணை நின்றார். நாட்டில் எச்.ஐ.வி பரவலைத் தடுக்கும் நோக்குடன் ஓரினச் சேர்க்கையை குற்றமற்ற செயலாக மாற்ற வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து எதிர்ப்பு எழுந்த போதிலும், தார்மீக அடிப்படையில் அவர் எனக்கு துணை நின்றார்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 24&ஆம் தேதி அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தேன். அதனடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மன்மோகன்சிங் அரசு ஒப்புக்கொண்டது. அதன் பின் சமூகநீதிக்கு எதிரான சிலரால் அந்த வாக்குறுதி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டது.
இப்படியாக சமூகநீதி, சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் எனது முயற்சிகளுக்கு துணை நின்ற சிவராஜ் பாட்டீல் அவர்களின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமை மீட்க… தலைமுறை காக்க" பயணத்தில், தருமபுரி - சேலம், தொப்பூர் கணவாய் பகுதியில் அதிகமாக விபத்து நடப்பதால், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி அவர்களை பலமுறை நேரில் சந்தித்து, தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறுவதை நேரில் ஆய்வு செய்தபோது.!
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? கண்ணியம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடியல் விடுதியின் எட்டாம் பிளாக்கில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாள்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்கு பணியாற்றும் பெண்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை பாதுகாக்க அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடியல் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் தான் இந்த விடுதி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதனால் இந்த விடுதி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்களின் தனியுரிமை, கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடைபெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதால ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பெண் தொழிலாளர்கள் தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தால், அவற்றை முடக்க வேண்டும். விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண் தொழிலாளர்களின் தனியுரிமையை உறுதி செய்வதுடன், அவர்கள் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் எந்த தீங்கும் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
மகளிர் கிரிக்கெட்: முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள்!
நவி மும்பையில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. இதன் மூலம் முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா 87 ரன்கள் சேர்த்ததும், தீப்தி சர்மா 58 ரன்கள் சேர்த்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றன. அந்த வீராங்கனைகளுக்கு சிறப்பு வாழ்த்துகள். இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு எண்ணற்ற புதிய கதவுகளைத் திறக்கும்.
லீக் சுற்றுப் போட்டிகளின் போது 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு தகுதி பெற முடியுமா? என்ற மோசமான நிலையில் இருந்த இந்திய அணி, அதன்பின் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பறியிருப்பது விடா முயற்சிக்கான சான்று. சாதனை படைத்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகள்.
#CWC25 #ICCWomensWorldCup2025
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் இன்று 61-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து தேசப் பணியைத் தொடர வாழ்த்துகள்!
@AmitShah
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழவும், அவரது பொதுவாழ்க்கை சிறக்கவும் வாழ்த்துகிறேன்.
@NainarBJP