நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அ���ில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளை��ர்கள���க்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தமிழ்நாடு கடன் நிலை - புரிதல்
சிம்பிளா ஒரு விஷயம் சொல்றேன்.
(படிச்சவங்க சுயமா யோசிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!)
🔹அதிமுக ஆட்சி முடியும் போது ₹5 லட்சம் கோடி கடன். அது GSDP ல அப்போ 29% (GSDP 17 லட்சம் கோடி)
🔹திமுக ஆட்சி முடியும்போது ₹10 லட்சம் கோடி கடன். அது GSDP ல 28% (GSDP 36 லட்சம் கோடி)
அதாவது தமிழ்நாட்டின் GSDP உயர்ந்து இருக்கு. ���மிழ்நாடு பொருளாதார ரீதியா ரெண்டு மடங்கு வளர்ந்து இருக்கு. நிறைய உள்கட்டமைப்பு வசதிகள் தொழில் துறை முன்னேற்றம் நடந்து இருக்கு
அதனால் தான் 17 LC ல இருந்து 36 LC யா உயர்ந்து இருக்கு
அதுக்கான திட்டங்கள் செயல்படுத்த கடன் வாங்கப்பட்டு இருக்கு.
அப்படி கடன் வாங்கினாலும் 30% லிமிட்டுக்குள்ள தான் இருக்கு.
10 லட்சம் என்கிற தொகை அதிகமா தெரிஞ்சாலும் அது நம்ம வளர்ச்சிக்கு கணக்கு பண்ணினா குறை��ு தான்.
(உதாரணமா நமக்கு 50,000 சம்பளம் வாங்கும்போது 5,000 கடன் இருப்பது விட 1,00,000 சம்பளம் வாங்கும்போது 7,000 கடன் இருப்பது குறைவு தானே. 5,000 பெரிசா 7,000 பெரிசா என யோசிக்காம மொத்த வருவாயில் ��டன் எவ்வளவு என யோசிங்க)
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பங்கு 8% ல இருந்து 4% ஆ பாதியா குறைச்சிட்டாங்க
தமிழ்நாட்டுக்கான நிதிகளை பெண்டிங் வெச்சாங்க
ஒருவேளை மத்திய அரசு கொடுக்க வேண்டிய தொகையை சரியான நேரத்துக்கு கொடுத்து இருந்தா.. இவ்வளவு கடனே வந்திருக்காது.
அதை எல்லாம் மீறி தான் இந்த வளர்ச்சி நலத்திட்டங்கள் எல்லாம் செய்தது திமுக.
இப்போ யோசிங்க.. நிதி நிர்வாக திறமை என்றால் என்னன்னு புரியும்.
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும��� பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி த��ரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்கள��டுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வா���்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ��தச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்��ிகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட��ல்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோ��ிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும��� சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போரா��ும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு ��திராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகள் நியூயார்க்கில் படிக்கிறாள். ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள் தைவானில் படிக்கிறாள். ஒரு நெசவுத்தொழிலாளியின் மகள் ஜெர்மனியில் படிக்கிறாள். சவரத் தொழிலாளி ஒருவரின் மகள் மலேசியாவில் படிக்கிறாள்.. இவர்களின் அனைத்து செலவினங்களும் தமிழ்நாடு அரசுடையது.. கிராமத்தில் இருந்து வந்த மாணவி ஜப்பான் சென்று திரும்பியுள்ளார். ஜப்பான் மொழியில் பேசக் கற்று மிகச் சிறப்பாக பேசுகிறார்.. ஒரு தாய் தன் மகனுடன் டிப்ளமோ படிக்கிறார்.. கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்.. வாய் பேச முடியாத காதும் கேட்காத தங்கை ஒரு��்தி பேட்மிண்டனில் உலக சாதனை படைத்துள்ளார்.. அவர் தந்தை கண்ணீர் மல்க நிற்கிறார்.. சைக்கிள் கூட என் வீட்டில் கிடையாது நான் ஏவியேஷன் படிக்கிறேன் என்கிறார் ஒரு தம்பி… ஐஐடி தேசிய சட்டப் பல்கலைக் கழகம் , மருத்துவர் என்று கனவு நனவான மகிழ்ச்சியோடு ஏராளமான தம்பி தங்கைகள்… கல்வியில் சிறந்த தமிழ் நாடு நிகழ்ச்சியில் இன்று அரங்கேறிய காட்சிகள் இவை… காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானாவிலும் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துவேன் என்று மேடையில் வாக்குறுதி கொடுத்தார் அம்மாநில முதல்வர்.. இத்தனைக்குப் பிறகும் ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேட்போரை என்னதான் செய்வது… மனம் நிறைந்து சொல்கிறேன் ஐயா @mkstalin நீங்கள் பல்லாண்டு வாழ்க…
வாழ வேண்டும் என்று வெகுவாக ஆசைப்பட்ட ஊர்களில் திருநெல்வேலியும் ஒன்று.
எனக்கு பிடித்த எல்லா விஷயங்களுமே அந்த ஊரில் இருக்கின்றன.
திருநெல்வேலி சைவ சாப்பாடு என்பது எப்போது நினைத்தாலும் நாவில் நீர் ஊற வைக்���ும்.
சொதி குழம்பு
அரைத்துவிட்ட சாம்பார்
திருநெல்வேலி ஸ்டைல் வத்த குழம்பு
பைனாப்பிள் ரசம்
கல்லிடைக்குறிச்சி அப்பளம்
அதற்கு தோதாக வைக்கப்படும் காய்கறிகள்
என மதிய சைவ சாப்பாடு என்றால் அது திருநெல்வேலி மதிய சைவ சாப்பாடு தான்.
அடுத்தபடியாக தாமிரபரணி ஆறு.
காலையில் எழுந்து மிதமான வேகத்தில் மிதமான ஆழத்தில் ஓடும் நதியில் குளிப்பதை விடவா ஒரு பெரும்பேறு இந்த ஜென்மத்தில் வாய்த்து விடப்போகிறது?
மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம் அல்வா, பட்டை மிக்சர்,கை முறுக்கு என..
போலவே காலை டிபனும். திருநெல்வேலி இட்லி, தோசை, பூரி கிழங்கிற்கு தனி சுவை உண்டு.
வண்ணதாசன்,கலாப்ரியா, நாறும் பூ நாதன், சுகா போன்றவர்கள் திருநெல்வேலி குறித்து எழுதிய கட்டுரைகள் எந்த காலத்திலும் மனதை விட்டு அழியாது.
திருநெல்வேலியை ஒட்டி தாமிரபரணி பாயும் சிறு கிராமங்கள் உண்டு. அந்த மாதிரி ஒரு ஊரில், சில காலம் ஆவது தங்கி, தாமிரபரணியில் குளித்து குளித்து தீர்க்க வேண்டும்.
இன்று 18 வயதில் இருந்து 35 வயதில் இருக்கின்ற அரசியல் புரிதல் இல்லாத வர்கள் 👇
இந்த காணொளியை பார்த்து கலைஞரைப் பற்றின அடிப்படை விஷயத்தை தெரிந்து கொள்ளவும்.
அதே சமயம் �� அக்யூஸ்ட�� என்று நீதிமன்றத்தால் தண்டிக்க பட்ட முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வின் ஆரம்ப கால நிலை 👇
நான் முதல்வன் ; மு.க ஸ்டாலினின் உன்னத திட்டம்
எனது நண்பன்...
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வெழுதி IAS தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து, தற்போது முதன்மை தேர்வு எழுதுவதற்கான தயாரிப்பில் இருக்கிறான்.
தகுதித் தேர்வின் போது மாதம் 8000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில், தற்போத��� 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது மட்டும் அல்லாது, பசுமை வழி சாலையில் உள்ள அண்ணா பயிற்சி மையத்தில் 45 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று வேளை, உணவு, தங்கும் இடம், பயிற்சி தேர்வு, ஊக்கத்தொகை என அனைத்தும் தனக்கு நம்பிக்கை அளிப்பதாக உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தான். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதமாக இருப்பதாக கூறிய அவன் தன்னோடு 200க்கும் மேற்��ட்டவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த வருடம் முதன்மை தேர்வு எழுதுவதற்காக அண்ணா பயிற்சி மையத்தில் ஆழ்ந்த தயாரிப்போடு இருப்பதாக தெரிவித்தான். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்காக ��ுதலமைச்சரிடம் இருந்து இன்று வாழ்த்து கடிதம் மற்றும் புத்தகம் ஒன்று பரிசாக வந்ததாக தெரிவித்த நண்பன், சிகரத்தின் உச்சியை கண்டு விட்டேன், விரைவில் தொட்டு விடுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தான்.
@mkstalin