தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
பாலன் இல்லத்துக்கு ஆதரவு (!) தெரிவிக்க வந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக மெரீனாவைத் திறந்துவிடக் கோரி இளைஞர் கூட்டத்தினர் முழக்கமிட்டிருக்கின்றனர்.
எந்தப் பதிலும் சொல்லாது, சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டு நடையைக் கட்டியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
தமிழ்நாட்டின் முத��பெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள் என்றென்றும் தமிழ் மக்களால் போ��்றப்படும்!
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமுடனும் மனமகிழ்வுடனும் வாழ்ந்து, இனிவரும் தலைமுறை பிள்ளைகளுக்கும் வழிகாட்டவும், தொடர்ந்து அரசியல் தெளிவூட்டவும் வேண்டுமென அன்புடன் கோருகிறேன்.
அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட, சமூகநீதி போராட்டக் களத்தின் நாயகர் மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெ��ிவித்துக்கொள்கிறேன்.
அன்று மெரினாவில் Kerchief-ஐ கட்டிக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.. ஆனால் இப்போது எதற்காக நீட் போராட்டத்தை ஒடுக்குகிறார் மு��ல்வர் விஜய்? நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்
#IdumbavanamKarthik | #NTK | #NeetProtest | #Chennai
செங்கல்பட்டு மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி லஞ்சம் வாங்கும் தூய காட்சி !
தூயசக்தி முதல்வர் கண்ணில் பட்டால் வி��வே மாட்டார் .
தொடவும் மாட்டேன்
தொடவும் விட மாட்டேன்
தொட்டவனையும் விடமாட்டேன் .
என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நாங்க பாக்கனும் மு தல்வரே …
@TVKVijayHQ
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலா��ும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைக���் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூ�� கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அர���ுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
A4 Paperயில் எழுதிக் கொடுத்தால்தான் பரப்புரைக் கூட்டம் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்வரை எல்லாவற்றிலும் வாய்திறக்க முடியும் எனும் கையாலாகா நிலையிலிருக்கும் ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு, அரசுப்பள்ளிக் குழந்தையைக் கேள்வி கேட்டு, கூனிக் குறுக வைக்கும் அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாடு பச்சை அயோக்கியத்தனம்!