சமூக ஊடக ஆளுமைகளுடன்
நாம் தமிழர் கட்சி
-தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
கலந்துரையாடல்
நாள்: ஆனி 13 சனிக்கிழமை| 27-06-2026 காலை 10 மணிக்கு
இடம்: பென்ஸ் பார்க் (Benz Park) சென்னை, தி.நகர்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள் முன்பதிவு செய்யவும்.
https://t.co/1JHono96do
இடம்:
https://t.co/Kx3ARpdBZ8
ஹுசேன் தம்பி Civil Service'க்கு தொடர் முயற்சி எடுத்து ஏழ்மையால் கைவிட்டார். சிறந்த பேச்சாளர் பலபோராட்டங்களை செய்துள்ளார். இளம்வயது 26.
One of the core pillar of NTK🔥
உங்கள் பேச்சில் வன்மம் மட்டுமே இருக்கு அண்ணா...
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
#ReleaseHussain
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம்
நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026 காலை 09 மணிக்கு
இடம்: பரங்கிப்பேட்டை
(வண்டிக்காரத் தெரு)
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers
அமோனியா வாயு விபத்தால் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டுவதற்கு மறுத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்தார் விஜய் என நேற்றையதினம் செய்தி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அங்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதில் மிக மும்முரமாக வேலைகள் செய்து கொண்டிருக்கின்ற வேளையில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் "யார் காணவில்லை" என்பதை பற்றி பட்டிமன்றம் நடத்தி கொண்டிருப்பது மகத்தான கேவலம்!
தமிழ்த்தேசிய பேராசான் ஐயா மணியரசன் தலைமையில் நடைபெறும் தமிழ்த்தேசிய பேரியக்கம் நடத்தும் காவிரி நதிநீர் உரிமை கோரும், நகல் எரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பெருந்திரளாக பங்கேற்கும்!
அண்ணன் செந்தமிழன் சீமான் பேரறிவிப்பு!
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எச்சரிக்கை
நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தைச் சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும்.
#TVK #CMVijay #MekedatuDam #Karnataka #Tamilnadu #NaamTamilar #Seeman #NTK #CauveryRiverRights #TNAssembly #TnGovt
திருவள்ளூர், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு : தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், தொடர்புடையவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா நச்சுக்காற்று கசிவில் 7 தொழிலாளர்கள் உயிரிப்பு; 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனும் துயரச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பெண்கள் என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது. உயிரிழந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்.
ஏற்கனவே, வடசென்னை பகுதியில் அவ்வப்போது நிகழும் நச்சுக்காற்று கசிவால் அப்பகுதி மக்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த சூன் 2 அன்று துறைமுகம் பகுதியிலிருந்து கசிந்த நச்சுப்புகையால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்தவர்களே மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதும் நிகழ்ந்தேறியது. அதன்பிறகாவது, தவெக அரசு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது திருவள்ளூரில் இத்தகைய கொடும் விபத்து நிகழ்ந்திருக்காது. தொழிற்சாலைகளில் அரசு தொடர்ச்சியாக முறையான ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே இதுபோன்ற கொடும் விபத்துகள் நிகழ்வைத் தவிர்க்க முடியும்.
சூழலியல் சீர்கேடுகளைப் பற்றிக் கவலைப்படாமல், வளர்ச்சி என்ற பெயரில், வேலைவாய்ப்புகளைக் காரணமாகக் காட்டி, பன்னாட்டு, உள்நாட்டு தனியார் தொழிற்சாலைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள், இதுபோன்ற தொழிற்சாலைகள் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றவா? என ஒருநாளும் கண்காணிப்பதுமில்லை; சோதிப்பதுமில்லை. அதன் விளைவாகவே, இதுபோன்ற கோரவிபத்துகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆகவே, தவெக அரசு இனியேனும் தமிழ்நாடு முழுவதுமுள்ள தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், சூழலியல் நலத்தினையும் உறுதி செய்திட வேண்டும். மேலும், இவ்விபத்து நடந்தேறிய கன்னிகைப்பேர் பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வித உடல்நலக்குறைபாடும் ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, உழைக்கும் தொழிலாளர்களின் உயிர்களைப் போக்கிய இக்கோர விபத்துக்கானப் பின்புலமும், பின்னணியும் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#BreakingNews
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பாக இன்று ஆனி 07ஆம் நாள் (21-06-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#TVK #Vijay #Gummidipoondi #StopChildAbuse #StopViolenceAgainstWomen #EnsureWomenSafety #TNGovt #NTKWomenWing #Thiruvallur
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து,
நாம் தமிழர் கட்சி
மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
21.06.2026
காலை 10 மணியளவில்
கும்மிடிப்பூண்டி
(ஆண்டவர் மளிகை கடை எதிரில்)