ஒரு பொழுது கூட
என்னிடம் பேசவேண்டும் என்று
உனக்குத் தோன்றவே செய்யாதா!
நானும் காத்திருக்கிறேன்
நீயாகவே வந்துவிடும்
ஒரு பொழுதுக்கு
நானாகவே வந்தும் விடுகிறேன்
நீ வராமலே போய்விடும் -
பொழுதுக்கு அஞ்சி.
நீயே அங்கீகாரம் தேடி, மதிப்பு தேடி, பணம் தேடி, அன்பு தேடி மற்றவர்களிடம் யாசித்துக் கொண்டிருக்கிறாய்,
உன்னி��ம் என்ன இருக்கிறது? பிறரோடு பகிர்ந்து கொள்ள!
நீயே ஒரு பிச்சைக்காரன்
-ஓஷோ
எனக்கு வீம்பு அதிகம்
என்றுதான்
எல்லோரும் நினைக்கிறார்கள்.
இல்லவே இல்லை.
என்ன செய்வதென்று தெரியாத
என் இயலாமைக்கு
நான் அணியும் முகமூடி அது.
~ மனுஷ்ய புத்திரன் ~
வாழ்க்கை எளிமையானது!
ஒரு தூக்கத்தால உணவால தேநீரால இசையால நகர்ந்துக்கொண்டிருக்கும் காலத்தால மறக்க கூடிய அளவு காயத்தை ஏமாற்றத்தை துரோகத்தை மட்டும் நமக்கானதென ஏற்றுக்கொள்ளனும்…
மறக்க முடியாதவற்றை அது நமக்கானதல்ல என ஒதுங்கி கடந்துபோக பழகிக்கனும்!
பழகிக்கோங்க வாழ்க்கை எளிமையானது!
பேசுறத சந்திக்குறத நிறுத்திக்கலாம்!
போன் கால்களை டெக்ஸ்ட்டுகளை நிறுத்திக்கலாம்!
நீயென் வாழ்வில் இல்லையென சபதம் செய்யலாம்!
பிரியலாம் தூரம் செல்லலாம் எல்லா தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள���ாம்…
ஆனால்
எப்போதும் அனிச்சையாய் வரும் முகத்தையும் நினைவுகளையும் எங்ஙனம் நிறுத்துவது!!!
வந்தவங்க போறாங்க அது ஒரு எளிய நிகழ்வுதான் இருந்தும் அத்தனை…
கோபங்கள்
கெஞ்சல்கள்
புலம்பல்கள்
சண்டைகள்
மண்டியிடல்கள்
மெனக்கெடல்கள்
பிரார்த்தனைகள்
நியாயப்படுத்தல்கள்
தவிப்புகள்
விரக்திகள்
ஏக்கங்கள்
கண்ணீர் துளிகள்
எல்லாம் அந்த எளிய நிகழ்வை ஏற்க முடியாமல்தான்!!!
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து யோசித்து பின் ஒரு முடிவெடுத்து நம்புவதற்கு பெரும் அயற்சியாக உள்ளது அவ்வளவு காலமும் இல்லை…
ஆதால் இப்போதெல்லாம் எதிர் வரும்வற்றை எல்லாம் நம்பி தொலைத்துவிடுகிறேன்!
பெரியதாய் என்னாகிவிடப் போகிறது…
கொஞ்சம் ஏமாந்துப்போவேன்!
அது எனக்கு பழக்கப்பட��டதுதான்!!!