தலைமைச் செயலாளர் இந்த விஷயத்தை முதலமைச்சர் கிட்ட சொன்னாரா இல்லையா? சொல்லலனாலும் மிகப்பெரிய தவறு. அப்படி சொல்லியிருந்தார்னா, முதலமைச்சர் ஏன் 116 நாட்களா இன்னைக்கு வரைக்கும் வாயைத் திறக்காமல் இருக்காரு
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
இன்று 23/11/26 கும்பகோணம் சு.கல்யாணசுந்தரம் MP அவர்கள் அலுவலகத்தில் டாக்டர்கலைஞர் அவர்களின் மனசாட்சி அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளில் கழக அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் அனைத்து நிர்வாகிகள். கழக தோழர்கள் 🙏🙏🙏
மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
ஆட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளை வேண்டுமென்றே மீறுவது தவெகவின் வாடிக்கையாகிவிட்டது. தேனி மாவட்ட சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் திறந்துவிட்டுள்ளனர்.
எந்த அனுமதியும் இல்லாமல் அணையைத் திறந்து, அதை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அணையைத் திறந்ததினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு?
இதுதான் டம்மி விஜய் ஆட்சியின் லட்சணம் இன்னும் என்னென்ன கொடுமைகளைத் தமிழ்நாடு பார்க்கப் போகிறதோ!
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகத் திருவிளக்கு ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாள் இன்று!
சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும், ஆங்கிலேய அடக்குமுறைக்கும் மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிராகவும் அஞ்சாது போராடியவர். தியாகமும் தீரமும் நிறைந்த அவரது வாழ்வையும், விடுதலை வேட்கையையும் போற்றுவோம்.
த வெ க அரசால் தொடரப்பட்ட பொய் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் எம் பி அவர்கள் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த பொழுது கழக வழக்கறிஞர்கள் கழகத் தோழர்களுடன்