தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையாலும், துள்ளல் மிகுந்த கானா பாடல்களாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களை வென்றவரும், ஏழை, எளிய மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய இசையை அமைத்து, ‘தேனிசைத் தென்றல்’ என அனைவராலும் போற்றப்பட்டவருமான பிரபல இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திரைப்பட இசையமைப்பாளராக மட்டுமல்லாது, தமிழ் இசை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்த கலைஞராகவும் திகழ்ந்த திரு. தேவா அவர்களை இ��ந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடிநிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1972ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியி��ுப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள் தான்,நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும் தான் இன்று வரை சந்தித்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது. இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும்தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும். பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இது நாள் வரை “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவி��் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.
“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம்,ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
கனவு காணுங்கள்; அந்தக் கனவை நனவாக்கக் கடுமையாக உழையுங்கள் என்ற உயரிய சிந்தனையை இளைஞர்களின் உள்ளங்களில் விதைத்தவரும், தனது அறிவாற்றல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் இந்தியா���ின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியில் மிகபெரிய பங்காற்றியவரும், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அறிவு, ஒழுக்கம், உழைப்பு, நேர்மை ஆகியவையே வெற்றிக்கான படிகள் என்பதைத் தனது வாழ்க்கையின் மூலம் உணர்த்தியதோடு, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்காகவும், இ��ைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் அதன் வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய போர்ப்படை தளபதிகளில் முதன்மையானவரும், அரசியல் பயணத்தில் தான் ஏற்றுக் கொண்ட தலைமைக்கு இறுதிவரை விஸ்வாசமாக இருந்தவருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு.வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று...
அரசியல் பயணத்தில் எத்தனையோ ஏற்ற, இறக்கங்களை கண்டாலும் தான் சார்ந��த இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பணியாற்றிய நண்பர் திரு.வெற்றிவேல். அவர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புமிக்க உழைப்பும், இயக்கத்தின் மீது கொண்டிருந்த விஸ்வாசமும், அரசியலில் அவர் பதித்த தடங்களும் என்றென்றும் நம் நினைவில் வாழும்
நிர்வாகத் திறனற்ற தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் - காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழ���்கிட வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியோடு தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் விவசாயப் பெருமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
காவிரியிலிருந்து பெற வேண்டிய நீரை பெற்றுத்தர முடியாத தவெக அரசை நம்பி இனியும் பயனில்லை என்பதை உணர்ந்து தங்களது சொந்த செலவில் பம்பு செட்டுகளை அமைத்து நிலத்தடி நீரின் மூலம் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்காமல் வஞ்சித்த அரசால் விதைத்தவர்களின் கண்��ுன்னே பயிர்கள் கருகும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது.
விவசாயிகளின் தோழன் என்றும், அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுவதாகவும் பிரச்சாரத்தின் போது வாய் முட்டப் புளுகிய தவெக தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தவெக அரசின் கையாலாகாத் தனத்தால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை இழந்து தவிக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
தவெ��� கொடுத்த வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியான பயிர் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை கூட முழுமையாக நிறைவேற்றாமல் மாநிலம் முழுவதும் விவசாயிகளை போராட வைக்கும் தவெக அரசும், அதன் முதலமைச்சரும் தான் விவசாயிகளின் தோழனா ? அடுத்த ஜென்மத்திலும் துரோகம் இழைப்பதற்காகத்தான் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறாரா ?என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, அரசின் நிர��வாகத் திறமையின்மையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் உடனடியாக தள்ளுபடி செய்திடுவதோடு, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்ய தமிழகஅரசு திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மின் தேவையை சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 7ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்ற���.தமிழக வரலாற்றில் இவ்வளவு விலைக்கு மின்சாரம் வாங்குவது இதுவே முதல்முறை.
இதுவரை அதிகபட்சமாக சுமார் ரூ.22முதல் ரூ.30வரை கடந்த செப்டம்பர் மாதத்தில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்தால் ��ின்வாரியத்துக்கு கூடுதல்செலவு ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் இன்றைக்கு எல்லா இடங்களிலும் 4முதல்5 மணிநேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதும், ஆங்காங்கே மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் தலைமை செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டு பணிகள் முடங்கிபோகின்ற அவலநிலை நிலவுகிறது.
தமிழ்நாடு 35ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கும் இதேகாலக்கட்டத்தில், ஆந்திரபிரதேசம் 16ரூபாய் முதல் 20ரூபாய் என்கிற விகிதத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தமிழக மின்சார வாரியம் அதன் நடவடிக்கைகளை சரிவர செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்���ேவையை சமாளிக்கவும், கடுமையாக நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்கவும், அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதால் ஏற்படக்கூடிய நிதிச்சுமை மற்றும் அதன் செலவின விவரங்களையும் பார்க்க வேண்டியிருப்பதால் இதில் மிகுந்தகவனமும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியமாகிறது. இம்மாத மின்தேவைகளை முன்கூட்டியே கணித்து ��தற்கேற்ப மின்சாரக் கொள்முதல் நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் இந்த அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது. மேலும், 2001-2006ஆம் ஆண்டு ஆட்சிகாலத்திலேயே வல்லூரில் 1,500மெகாவாட், தூத்துக்குடியில் 1,000மெகாவாட், வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600மெகாவாட், சிற���புனல் மின்திட்டங்கள் மூலம் 36மெகாவாட் என மொத்தம் 3,136மெகாவாட் அளவிற்கான மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால்,அதன்பிறகு அமைந்த திமுக அரசு தங்களது சுயநலத்துக்காக இத்திட்டங்களை விரைந்து முடிக்கவில்லை. அதிக விலையில் மின்சாரத்தை தனியாரிடமிருந்தும், மின்பரிமாற்றத்திலிருந்தும் வாங்குவதற்காகவே இத்திட்டங்கள் எல்லாம் தாமதப்படுத்தப்பட்டன. 2011ஆம்ஆண்டு மீண்டும் அம்மா ஆட்சி அமைந்தபின் சுமார் 3,600மெகாவாட் அளவிலான புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கியதோடு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் கொண்டு வரவேண்டும் என்றால், அதற்கான மின்வழித்தடம் வேண்டும். வடமாநிலங்களிலுள்ள மின்சாரத்தை இங்கே பெறுவதற்கு தேவையான மின்வழித்தடங்கள் அமைத்திட அன்றைய ��ம்மாஅரசு வலியுறுத்தியதன் காரணமாகவே மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூரிலிருந்து திருவலம் இடையேயும் மற்றும் நரேந்திரா-கோலாப்பூர் இடையே 765கிலோவோல்ட் திறன்கொண்ட மின்வழித்தடங்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாம் மின்சாரம் பெறமுடிகிறது.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின்இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சக்கட்ட மின்தேவையை நிறைவுசெய்யும் வகையில் சரியான மின் அழுத்தத்து��ன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட கூடுதல் துணை மின்நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக்கருத்தில் கொண்டு, 2016ஆம்ஆண்டு தமிழ்நாட்டில் ரூ.1,033 கோடியே 32லட்சத்து 44ஆயிரம் மதிப்பீட்டில் 35துணைமின்நிலையங்களை அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
2016ஆம்ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான் வீடுகளுக்கான மின்சாரம் 100யூனிட் இலவசம் எனும் திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தார். இதன்மூ��ம் தமிழகத்தில் அன்றைக்கு இருந்த 1கோடியே 91லட்சம் வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைந்தனர்.
எனவே, இன்றைய ஆட்சியாளர்கள் புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை நன்றாக அறிந்து கொண்டு செயல்படவேண்டும். அப்போதுதான் தமிழகம் வளர்ச்சியை நோக்கி மு��்னேறும். தமிழக மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
பணிநிரந்தரம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீறி போராட வந்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது -
மக்களின் குரலை கேட்பது தான் மக்களாட்சி அவர்களின் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி.
பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கல���்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராடவிருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுத்து அவர்களை ஆ��்காங்கே வீட்டுக் காவலில் அடைத்து வைத்ததோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைதுசெய்திருக்கும் காவல்துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான போராட்டத்தின் மூலமாக தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து அவர்க��ை வீட்டுக் காவலில் வைத்தும், கைது செய்திருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்சாரத்துறை பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் தங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பெருமை பேசிக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதிநிதிகளை வீட்டுக் காவலில் அடைப்பது, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என தவெக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்துமீறல்களும், அராஜகப் போக்குகளும் நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமோ அல்லது அடிமை நாட்டில் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டு��் என மருத்துவத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TNHealthDept @arunraajkg
ஒவ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சியாகவும், ஒட்டுமொத்த உலகின் எதிர்கால நம்பிக்கையாகவும் திகழும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் உலக பெண் குழந்���ைகள் ��ின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேற உறுதுணையாக இருக்கவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான ஏற்பாட்டுச் செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - திட்டத்திற்கான அனைத்து செலவு��ளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆதி��ிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.
பல ஆயிரக்கணக��கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் ���ாமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் மண்ணின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் தனது எழுத்தின் மூலம் உலகறியச் செய்த புரட்சியாளருமான மகாகவி ��ாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று.
தேசவிடுதலை, மொழிப்பற்று, மனிதநேயம், சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் என சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் மாற்றத்திற்கான விதைகளை விதைத்து, அழியாத வரலாற்றை உருவாக்கிய மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான திரு.சாலமன் பாப்பையா அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தமிழ் பேராசிரியர், எழுத்தாளர், ��ட்டிமன்ற பேச்சாளர், நடுவர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள். அனைவருக்கும் புரிந்திடும் வகையில், ஜனரஞ்சக முறையில், நகைச்சுவை உணர்வோடு ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, தனது தனித்துவமான முத்திரைகளை பதித்தவர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள். திருக்குறளுக்கு எளிய நடையில் விளக்க உரை எழுதிய பெருமைக்குரியவர். பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான திரு. சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் கலை உலகிற்கு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
தமிழறிஞர் திரு. சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ் இலக்கிய கலை உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்��ாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவரும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற அயராது பாடுபட்டவருமான திரு. இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினமான இன்று, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங���களை சிறப்பித்த திரு.சாலமன் பாப்பையா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்!
புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணி��்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.
நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அம��ப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்���து முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.
எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அம���ப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறு���்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று.
பொதுவாழ்வில் நேர்மை, மக்களிடம் எளிமை என விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், அவர்களின் உரிமைகளையும் பெற்றுத்தர அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது பாடுபட்ட திரு. மூக்கையாத் தேவர் அவர்கள��� ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து GSLV F-17 ராக்கெட்டின் மூலம் EOS-05 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
@isro
இந்திய விடுதலைப் ப��ராட்ட வீரரும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல், தாய்நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசபக்தருமான, ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு, தனது உணர்ச்சிமிக்க உரைகளின் மூலம��� மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டிய ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற��றி வணங்குவோம்.
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பசித்த மக்களுக்கு உணவளிக்க வேண்டும், ஏழை, எளிய மக்களிடம் கருணை காட்ட வேண்டும், எண்ணத்திலும் நடத்தையிலும் தூய்மையாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழ வேண்டும் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திய போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
அன்பு, அமைதி, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் வழியைப் பின்பற்றி, ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கிடுவோம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மிலாது ந���ி வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து, தவெக அரசு மீதான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது பத்தாவது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் ம���து மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடந்த 08.05.2026 அன்று குதிரை பேரம் தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தவறியமை ஆகியவற்றில், மேதகு ஆளுநர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.