கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூடிய மக்கள் வெள்ளத்திற்கு இடையே #வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
நான்கரை ஆண்டுகள் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்றைக்கு தான் ஞானோதயம் வந்ததுபோல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திரு. @mkstalin-ஐ தமிழக மக்கள் நம்பப் போகிறார்களா என்ன? வாய்ப்பே இல்லை.
இப்போது நீங்கள் போடும் நல்லவர் வேஷம், இத்தனை ஆண்டுகள் நீங்கள் நடத்திய கோர ஆட்சியை இல்லை என்று ஆக்கிவிடுமா? இல்லவே இல்லை.
தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
அதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நீங்கள் உணரப் போவது உறுதி!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் கனவு திட்டமான 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்த பின்னையூர் ஊராட்சியை சேர்ந்த மாணவி செ.பிரியதர்ஷினி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்
#neet#EPSfor2026#ADMK_TNJ#மா_சேகர்
திருவோணம் வடக்கு ஒன்றியம் கிளாமங்களம் ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் புரட்சித் தமிழர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்று இன்று எனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்
#EPSfor2026#ADMK_TNJ
தமிழ்நாட்டை உலுக்கிய பல்வேறு முக்கியமான பிரச்சனைகளில் நம்முடைய கேள்விகளே இந்த ஸ்டாலின் மாடல் அரசைத் துளைத்துள்ளன.
அந்த வகையில் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திலும் நாம் சில கேள்விகளைக் கேட்க விழைகிறோம்.
1. காவல்துறை அஜித்குமாரை முறைப்படி FIR பதிவு செய்து கைது செய்ததா? அப்படி எனில், கைதுக்கான ஆவணம் எங்கே?
2. மாவட்டக் கண்காணிப்பாளரிடம் நேரடியாக இயங்கும் தனிப்படை இதனை விசாரிக்கும் அளவிற்கு யாருடைய தலையீடு இருந்தது? சந்தேகத்தின் பெயரில் போடப்பட்ட திருட்டு வழக்கில் ஒரு மாவட்ட SP-யே நேரடியாக தலையிட வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு ஏதேனும் அழுத்தம் வந்ததா? அப்படி என்றால், யாரிடம் இருந்து வந்தது?
3. வேக வேகமாக அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவசரமாக உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? உடலில் உள்ள காயங்கள் உள்ளிட்ட குற்றத்திற்கான தடயங்களை அழிப்பதற்கான முயற்சியா இது? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
4. தானும் தன் அண்ணனும் காவல்துறையால் தாக்கப்பட்டதாக அஜித்குமாரின் தம்பி பேட்டி அளித்துள்ளார். கைது செய்யப்படாத அஜித்குமாரின் தம்பியை எதற்காக காவல்துறை தாக்க வேண்டும்? நீதிபதி வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அஜித்குமாரின் தம்பி மற்றும் இரு உறவினர்களை காவல்துறை, தங்கள் வாகனத்தில் ஏற்றாமல், திமுக ஒன்றிய கவுன்சிலர் சுப்பையாவின் திமுக கொடி கட்டிய காரில் கடத்த முனைந்ததை அஇஅதிமுக மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் திரு. PR செந்தில்நாதன் மற்றும் கழகத்தினர் தடுத்தனர். திமுக காரில் அஜித்குமாரின் தம்பியை கடத்த முற்பட்டது ஏன்?
5. அதுமட்டுமல்லாமல், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன், சனிக்கிழமை இரவு காவல் நிலைய வாசலில் வைத்து அஜித்குமார் குடும்பத்தார் மற்றும் சார்ந்தோரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக செய்திகள் வருகின்றனவே... எதற்காக திமுக இந்த சம்பவத்தில் இவ்வளவு முனைப்பு காட்ட வேண்டும்?
6. இந்த வழக்கை BNS SECTION 103-ல் பதிவு செய்ததா காவல்துறை? அல்லது பொம்மை முதல்வருக்கு அதை நினைவூட்ட வேண்டுமா?
7. ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இது 25-வது Documented Lockup Death. அதிலும், இவ்வழக்கில் மிளகாய்ப் பொடி, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவை கொண்டு அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அஜித்குமார் உடலில் 18 காயங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த 25 உயிர்களை துடிதுடிக்கக் கொன்றது யார்? இதற்கு யார் பொறுப்பு?
கேள்விகள் இங்கே. பதில்கள் வருமா @mkstalin@arivalayam?
ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் கேட்டு சொல்லவும்.
#JusticeForAjithkumar
#NationWithAjith
23.05.2025
களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றியை மட்டுமே பெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-ஆவது சதய விழாவை முன்னிட்டு ஒரத்தநாட்டில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#தஞ்சை_மத்திய_மாவட்டம்#ADMK_TNJ#மா_சேகர்#admk
கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
மே 12 2025 அன்று, அனைத்து கழக மாவட்டங்களிலும்,
@AIADMKITWINGOFL சார்பில்
"#இரத்தத்தின்_இரத்தமே"
மாபெரும் இரத்ததான முகாம்கள்!
தமிழ்நாட்டின் நலனுக்காக புரட்சித் தலைவரின் தொண்டர்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய இந்த இயக்கத்தை, புரட்சித்தலைவர் வழியில் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளை வழிநடத்திய புரட்சித் தலைவிக்குப் பிறகு, தன் இரத்தமும் இதயமுமாக இந்த இயக்கத்தையும் தமிழ்நாட்டையும் கொண்டு, ஒவ்வொரு அசைவையும் அதற்கென அர்ப்பணித்து நம்மை வழிநடத்தும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பெயரில் அதிகப்படியான இளம் இரத்தங்கள், தங்கள் இரத்தங்களை மக்கள் நலனுக்காக தானமாக அளிக்கும் மாபெரும் நிகழ்வு!
Once a blood donor, always a lifesaver!
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்றுள்ள புதிய பொறுப்பில் அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்.