உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
What an honour to sit between the two legends and take up responsibility 🔥 and how sweet superstar to make me sit in between ❤️! Offcourse there is lot of pressure but that’s where the fun begins🕺
@rajinikanth@ikamalhaasan @rkfioffl @turmericmedia#dharman
Blockbusters. Entertainment. Celebration.
That's the Nelson signature! 🔥
Wishing our beloved Director @Nelsondilpkumar a very Happy Birthday! 🎂🎉
May the coming years bring even greater success and cinematic magic! ✨
#KHxRK#HBDNelson
Happy Birthday to the blockbuster director who continues to entertain us with his unique filmmaking style and unconventional storytelling! @Nelsondilpkumar#HappyBirthdayNelson#HBDNelson
https://t.co/E0We6QosLw
திருமதி ரஜினியின் அன்பான அழைப்புடன் நேற்று காலை சாரை சந்தித்தேன்.
10 மணிக்கு சந்திப்பு
10 நிடங்களுக்கு முன்பே வரவேற்பறையில் நான். (நேரம் தவறாமை மட்டுமல்ல, 10 நிமிடமாவது முன் செல்வது என் பழக்கம்)
கு’டீ’ கேட்கப்பட்டது ,நீர் போதுமென்றேன்.( டீக்கு டிமிக்கி)”நீங்க ரெடின்னா சார் வரலாமா? எனக் கேட்டார்” -கேட்டார் பணியாளர். (புதிய பண்பு)
உண்மைக்கு நெருக்கமான நட்புக்கு இலக்கணமானவருடன் சுவாரஸ்யமான உரையாடல் என்ன என்பது அந்த என்பது நிமிட முள்ளும் மலரும் படியாக இனிமையாக இருந்தது.
“உங்கக் கண்ணைப் பாத்து நீங்க ஹீரோவா வருவீங்கன்னு எப்பவோ கணிச்சேன்” ஆரம்பித்தார்.
yes! என் புதிய பாதைக்கு முன்பாகவே ஹேம்நாக் பாபுஜி என்பவரிடம் என்னை வைத்து படமெடுக்க சிபாரிசித்தார்.
“Solo act single shot மாதிரி யாரும் பண்ணாத்தை எல்லாம் பண்ணி அசத்துறீங்க” பாராட்டினார்.
அடுத்து முழுக்கக் கமர்ஷியல் வெற்றியே goal என்றேன். அதற்கும் சில யோசனை தந்தார்.
CM சந்திப்பு உட்பட்ட , திரித்து பேசப்பட்ட சில சர்ச்சைகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்து கணித்து கருத்துக் கூறினார்.
மனம் விட்டு நிறைய பேசினோம்.
ஒரு அழகான writing pad-ல் சில வெற்றுத் தாள்களை வைத்து அதில் என்ன எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று கடைசி பக்கத்தில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து “ உங்க creativity spl தான் , உங்களுக்கான spl நேரம் விரைவில் வரும்” வாழ்த்தினார். வழக்கம் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார். வந்த பின்னும் வராமல் அங்கேயே அவரின் அன்பை ,எளிமையை அசைப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்….
கோவையில் பிரபலமான சைவ உணவகங்களில் ஒன்று ஸ்ரீ ஆனந்தாஸ். அவர்களுக்குக் கோவை நகரில் பல இடங்களில் கிளைகள் உள்ளன. அதே போல Shree Anandhaas Sweets & Snacks என்ற பெயரிலும் இனிப்பு, கார வகைகள், chat items விற்பனையும் செய்கின்றனர்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் குமுதம், புதிய தலைமுறை, மல்லிகை மகள் உள்ளிட்ட பல வார இதழ்களில் தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த சமயம். லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள இவர்கள் உணவகத்தில் ஒருவர் சாப்பிட்ட போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாக ஒரு நாள் செய்தி பரவலாகப் பகிரப்பட்டது. சமூக வலைத்தளங்கள் வளர்ந்து கொண்டிருந்த நேரமது. மிகப் பரப்பரப்பாகி விட்டது. சமூக ஊடகங்களைத் தாண்டி தொலைக்காட்சிகளிலும் கூட அந்தச் செய்தி பகிரப்பட்டது. நான் அதற்கு முன்பு ஓரு சில சமயம் அவர்கள் உணவகத்திற்குச் சென்றிருக்கிறேன். சுத்தமாகப் பராமரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு உணவகத்தின் சுத்தத்தை அவர்களுடைய சமையலறையிலும், கழிவறையிலும் சென்று பார்த்தாலே தெரிந்து விடும். அந்த வகையில் சமையலறையில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும், கழிவறைகள் மிகச் சுத்தமாகப் பராமரித்துக் கொண்டிருந்தனர். எனவே எனக்கு என் ஆசான்கள் கற்றுக் கொடுத்த எல்லாத் தரப்பிலும் தீர விசாரிக்க வேண்டும் என்ற பால பாடத்தைஅடிப்படையாகக் கொண்டு, கரப்பான் பூச்சி விஷயம் உண்மைதானா என்று அவர்களிடமே தொடர்பு கொண்டுக் கேட்டேன்.
அவர்கள் உணவகத்துக்கு உடனே நேரில் வரச் சொன்னார்கள். சென்றேன். அவர்களுடைய சமையலறைக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு சமையல் செய்வதாகவும், அதில் கரப்பான் பூச்சி வருவதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை. அப்படியே வந்திருந்தாலும், அவர்கள் சமைக்கும் வெப்ப நிலையில் அது முழுதாக இருக்க வாய்ப்பே கிடையாது என்பதையும் விளக்கிச் சொன்னார்கள். “சமூக வலைத்தளங்களை விடுங்கள். ஆனால் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில் கூட எங்கள் தரப்பு விளக்கத்தை யாருமே கேட்கவில்லை. நீங்கள்தான் முதலில் அழைத்துக் கேட்டீர்கள்” என்றும் கூறினர்.
அப்படித்தானே ஒரு செய்தியை வெளியிட வேண்டும்? அதானே முறை!
சரி.. ப்ளாஷ் பேக் போதும். .இப்போதைய பஞ்சாயத்துக்கு வருவோம்.
கோவை ராமநாதபுரத்தில் முன்பு RHR உணவகம் இருந்த இடத்தில் புதுப்பித்து அங்கே உள்ள பெரிய கட்டடத்தில் முதல் மாடியிலும் சுவையகக் கிளை உள்ளதாம். நான் நேரில் சென்றதில்லை. உணவகங்களுக்குச் செல்வதோ, இணையம் வழியே உணவு வாங்குவதோ இப்போதெல்லாம் மிகக் குறைவுதான். நேற்றிரவு 8:15 மணிக்கு அப்படித்தான் சொமேட்டோ வழியாக அவர்கள் உணவகத்தில் பாவ் பாஜி, வடா பாவ், பருப்பு போலி, பானி பூரி ஆகியவற்றை ஆர்டர் செய்தேன். இணையம் வழியே தொகையும் செலுத்தி விட்டேன். இருநூற்று சொச்சம் ஆனது. ஆர்டர் கொடுத்த ஓரிரு நிமிடங்களில் ஆர்டர் கேன்சல் என்று குறுந்தகவல் வந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவும் அழைப்பில்லை.
பொதுவாக உணவகங்களில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் இல்லையென்றால் உடனே அந்தச் செயலியிலேயே அந்தத் தகவல் வரும். அதற்குப் பதிலாக அதே தொகைக்கு வேறு எதுவும் பொருள் வேண்டுமா என்று கேட்பார்கள். பல உணவகங்களில் நம்மைத் தொலைபேசியில் அழைத்தும் கேட்பார்கள்.
ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஒன்றே ஒன்று என்றாலும் பரவாயில்லை. முடிந்திருக்கும். அதனால் கேன்சல் செய்திருப்பார்கள் என்று நினைக்கலாம். நான்கு வெவ்வேறு உணவு வகைகள். அதில் எதாவது ஒன்று இல்லையென்றால் ஒட்டு மொத்த ஆர்டரையும் ஏன் கேன்சல் செய்ய வேண்டும்? அட.. குறைந்தபட்சம் அப்படிச் செய்வதற்கு முன்பு அழைத்தாவது கேட்கலாமல்லவா?
இது prepaid order என்பதால் அந்தத் தொகை நமக்கு மீண்டும் வர நான்கைந்து நாட்கள் ஆகும். வங்கித் தரப்பிலிருந்து எடுத்துக் கொள்ளும் காலக்கட்டம் இது. சரி.. தப்பித்தவறி என்னிடம் நேற்று அந்த இருநூற்று சொச்சம் மட்டுமே இருந்தது என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் கேன்சல் செய்த பிறகு மீண்டும் ஆர்டர் செய்ய தொகை இல்லாமல் பட்டினி கிடக்க வேண்டுமா? அட.. உணவகத் தரப்பில் நமக்கு உணவை அனுப்பி விட்டு நான்கைந்து நாட்களுக்குப் பிறகு நாம் தொகை அனுப்பினால் ஒத்துக் கொள்வார்களா? இதில் அடுத்த அரை மணி நேரத்துக்குப் பிறகும் அதே உணவு வகைகள் சொமேட்டோ, ஸ்விகி ஆகியவற்றில் அவர்களிடம் இருப்பதாகக் காட்டியது. இன்னும் யாரெல்லாம் அதை ஆர்டர் செய்து கேன்சல் ஆனதோ?!
இந்த உணவகக் கிளையில் இது முதல் முறையல்ல. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பும் இது போல எனக்கு நடந்திருக்கிறது. கூகுளில் சென்று பார்த்தால் அங்கே பின்னூட்டங்களில் பலரும் அந்த உணவக ஊழியர்கள் அலட்சியம் குறித்து வேதனை தெரிவித்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
ஆனந்தாஸின் இந்தக் கிளையில் மட்டுமே இப்படியா அல்லது எங்கும் அப்படித்தானா தெரியவில்லை!
அவர்கள் மின்னஞ்சலைத் தேடிப் பிடித்து இது குறித்து மின்னஞ்சல் அனுப்பினேன்.
இன்று காலையிலேயே பதில் வந்தது - மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்தான் கணக்காக!
”அதெல்லாம் நாலஞ்சு நாளெல்லாம் ஆவாது. 2, 3 நாளிலேயே உன் காசு திரும்ப வந்திடும்”
- அம்புட்டுத்தான்.
ஏன் அந்த ஆர்டர் கேன்சல் செய்தார்கள். ஏன் அழைத்துக் கூறவில்லை. அது குறித்து ஒரு சிறிய வருத்தம்.. ம்ஹும்.. அட.. மின்னஞ்சல் முடிக்கும் போது குறைந்தபட்சம் நன்றி தெரிவித்து விட்டாவது முடிக்க வேண்டுமல்லவா? அதானே சரியான நிர்வாகத்தின் etiquette? அது கூட இல்லை. “உன்னையெல்லாம் மதிச்சு பதில் அனுப்புறதே பெரிய விஷயம் பாணியில் பதில்”
சரிதான்.. வளர்ந்து விட்டார்கள் போல. இருக்கட்டும்!
எப்படியாவது இந்தப் பதிவு அந்த நிர்வாகத்தின் கண்களில் படும் என்று நம்புகிறேன். கடும் கண்டனங்கள்.
@swiggy@zomato போன்ற நிறுவனங்கள் நாம் ஆர்டர் கொடுத்து விட்டு கேன்சல் செய்தால் முழுத் தொகையையும் நமக்கு அபராதமாகப் பிடித்துக் கொள்கிறார்கள். அதே போல நாம் ஆர்டர் செய்து தொகை செலுத்திய பிறகு உணவகத் தரப்பில் கேன்சல் செய்தால் அவர்களிடம் அபராதம் பிடித்து நமக்குத் தர வேண்டும். அதானே நியாயம்?!
***
பின்குறிப்பு :
“இருநூறு ரூபாய் மட்டும் வெச்சுக்கிட்டு உனக்கு எதுக்கு ஆன்லைனிலே ஆர்டர்?”
“இதுக்குத்தான் வீட்டுலேயே சமைச்சு சாப்பிடணும் அப்படிங்குறது”
“ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லதில்லை”
“பாவ பாஜி எல்லாம் சாப்பிடக்கூடாது”
- என்பது போன்ற நடப்பிற்குதவாத அட்வைஸ்களைத் தவிர்க்கவும்.
எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..
இப்படிக்கு..
பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel