“லஞ்சம் கொடுக்காதே
நான் இருக்கிறேன்.”
எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது மாண்புமிகு முதல்வரின் இந்த வாக்கு.
ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான்.
ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும்.
லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான்.
இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும்.
ஒளி பிறக்கட்டும்.
#ஊழலற்றதமிழ்நாடு
இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட எமது மக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலி, வேதனை, இழப்பு, போராட்டம் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன்.
அரசின் இந்த எளிய ஆதரவு என்பது எமது மக்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்றாலும் அவர்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்கள் இழந்த உறவுகளை எந்த உதவியாலும் திரும்பக் கொண்டு வர முடியாது. அவர்கள் இதயத்தில் கனக்கும் துயரை இந்த தருணம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அவர்களை எப்படி மீண்டும் எதிர்கொள்வது என்ற தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தேன்.
நினைத்ததுபோலவே எமது மக்களில் பலர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெரும்போதே கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர். அந்த இடத்தில் நாமும் அழுதுவிடாமல் உணர்சிகளை கட்டுக்குள் வைப்பதற்கு போராட வேண்டியிருந்தது.
ஒருகட்டத்தில் முதலமைச்சரே கலங்கி கண்ணீர்விடக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. அதிகாரத்தின் திரையை அகற்றி, ஒரு சக மனிதனின் துயரை உணர்ந்த சக மனிதராக அவர் அழுதுகொண்டிருந்தார். நிகழ்ச்சி சில மணித்துளிகள் நின்று மீண்டும் துவங்கியது.
தனியாக பேச வேண்டும் என்று கேட்ட குடும்ப உறுப்பினர்களை அழைத்துவரச் சொல்லி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி ஆறுதல் கூறினார்.
உணர்வுகளை எல்லாம் தாண்டி வாழ்வின் கொடிய எதார்த்தம் எமது மக்களை தினமும் சுட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த ஆதரவு எமது மக்களுக்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக "நான் உங்களுடன் இருக்கிறேன், எப்போதும் துணையாக இருப்பேன்" என்ற நம்பிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எமது மக்களுக்கு அளித்த தருணமாகவும் அது அமைந்தது.
இதற்காக எமது மக்களின் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் எப்போதும் உறுதியாக நிற்போம். குறிப்பாக பெற்றோரை இழந்து எதிர்காலத்தை எதிர்நோக்கும் குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களுக்கு துணையாக இருப்பது நமது பொறுப்பும் கடமையும் என்பதை உணர்ந்துள்ளோம். காலம் அவர்கள் காயங்களை ஆற்றற்றும்.
@TVKVijayHQ
கரூரில் பறிபோனது உயிர்கள் அல்ல…
தமிழக வெற்றிக் கழகத்தின் வேர்கள்.
தளபதியின் நெஞ்சில் கோவில் கொண்டு வாழும் தெய்வங்கள் அவர்கள்.
மீண்டது தமிழகம்…
மீட்டது தமிழக வெற்றிக் கழகம்.
#தமிழகவெற்றிக்கழகம்#TVK@CMOTamilnadu@TVKVijayHQ
“யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்… நான் உங்கள் கூட இருக்கிறேன்.”
ஒரு மாநிலத்தின் முதல்வர் மக்களுக்கு தரக்கூடிய மிகப் பெரிய சொத்து பணமல்ல… தைரியம்.
“நான் இருக்கிறேன்” என்ற ஒரு வாக்கியம், நேர்மையாக வாழ விரும்பும் ஆயிரக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
மக்களை அதிகாரிகளிடம் தலைகுனியச் சொல்லாமல், தலைநிமிரச் சொல்லும் ஆட்சிதான் நல்லாட்சி.
இந்த நம்பிக்கையை அளித்ததற்காக நடுத்தர வர்க்கம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
தமிழ்நாடு இந்த ஆட்சியில் நேர்மையிலும், வளர்ச்சியிலும், செழிப்பிலும் முன்னேறட்டும்.
நன்றி முதல்வரே @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
நம் தமிழக மக்களின் இதயங்களை வென்ற தளபதி...
நம் தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைத்து,
மக்களின் பேராதரவோடு கோட்டையில் அமர்ந்திருக்கும் நமது அன்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர்,
திரு. @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்தேன்.
அதிகாரத் திமிரோ, தலைக்கனமோ துளியுமின்றி, நம் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே தன் இதயத்தில் சுமந்து நிற்கும் ஒரு தலைவனைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.மாற்றத்தை விரும்பி இந்தத் தலைவனின் கைகளில் தமிழகத்தை ஒப்படைத்த மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை அவரின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் உணர்கிறேன். ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #MRV #Karur
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்