தம் இனிய குரலால்
பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பின்னணி பாடகி, இசையரசி அம்மா ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இசையமைக்கும் வல்லமையும் பெற்ற அம்மா ஜானகி அவர்கள்,
ஏறத்தாழ 17 மொழிகளில் பல்லாயிரம்
பாடல்கள் பாடி, சிறந்த பாடகிக்கான இந்திய அரசின் விருதை 4 முறையும், நந்தி விருதினை 10 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதை 33 முறையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.
தாமதமாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்த அம்மா ஜானகி அவர்களின் போர்க்குணம் போற்றத்தக்கது.
காற்றில் மிதந்து காதுகளில் நிறைந்து
காலத்தை வென்ற இசையரசியின் மறைவு, ஈடு செய்யவியலாத பேரிழப்பாகும்.
அம்மா ஜானகி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அவருடைய இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
இனிய குரலால் இதயங்களை வென்ற இசையரசி அம்மா ஜானகி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தவெகவினருக்குத் துப்பு இல்லை என்பதால், அந்த அவையில் நான் எழுப்பிய எந்தக் கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் மறுப்போ, விளக்கமோ, பதிலோ அளிக்கவில்லை.
தெரிந்தால்தானே அளிப்பார்கள். அதுசரி! வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாங்க?
முழுக்காணொளி: https://t.co/8E6ybffqxY
இன்று 11.07.2026 வீரப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மலர் வணக்கம் மற்றும் வீர வணக்க நிகழ்வு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குமரியை நாசமாக்கும் IREL ஆலையின் அணுக்கனிம சுரங்க பரப்பை விரிவாக்குவதற்காக 1,144.06 ஹெக்டேர் நில ஒதுக்கீட்டை இன்னும் ஒரு வருடத்திற்கு காலநீட்டிப்பு செய்ய அனுமதி வழங்கியிருக்கும் தமிழ்நாடு த.வெ.க அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கட்சி உறவுகள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த முதல்கட்ட போராட்டம் மூலம் அரசிற்கு எங்கள் நிலைப்பாட்டினை உறுதியாக உணர்த்தியுள்ளோம். காலநீட்டிப்பு அனுமதிக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவிக்கும்வரை எங்கள் போராட்டங்களும் செயல்பாடுகளும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருபவர் போவரெல்லாம் சுரண்டிச்செல்ல எங்கள் நிலம் ஒன்றும் ஊரான்வீட்டு நெய் அல்ல
@NaamTamilarOrg
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..!
அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில்
இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..!
விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!