சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார் அவர்கள்.
சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!
பத்து ரூபாய் அதிகமாக வாங்கியது மட்டும் இல்லாமல் திமிராக பேசிய இந்த விற்பனையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த கடையின் சேல்ஸ்மேன்ஸ் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @VigneshTvkCbe அவர்கள் 👏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (05.09.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்கள், சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டுப்பற்றின் அடையாளமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கிற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவர்களின் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.அருள் பிரகாசம் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப. அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு.மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.