நான் வைத்த கோரிக்கையை ஏற்று திருச்சி-ஹைதராபாத்(சார்லபள்ளி) இடையிலான சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர இரயில் சேவையாக மாற்றிய
ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் மற்றம் இரயில்வே துறை அதிகாரிகளுக்கும் எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்கள் சார்பாக கோடான கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
#duraivaiko #trichy #srirangam #cmvijay #tvk
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் @CMOTamilnadu தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் @TVKHQITWingOffl , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் @mdmkparty இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#tvk #mdmk #vaiko #vijay
மேலநீலிதநல்லூர் மதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்பு சகோதரர் சிங்கப்புலி சசிகுமார் அவர்கள் தலைவர் வைகோ அவர்களை 01.07.26 அன்று நேரில் சந்தித்து மீண்டும் கழகத்தில் இணைந்தார்....
#vaiko#mdmk#duraivaiko#mdmkitwing@Vaikooffl@duraivaikooffl
நம் கழகத்தை விட்டு விலகி சென்ற முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பு அவர்கள் மீண்டும் தங்களை இயக்க தந்தை மாமனிதர் ஐயா @Vaikooffl முன்னிலையில் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
#mdmk#vaiko#duraivaiko#mdmkitwing
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகர் மாவட்டத்தில் (2026–2027) ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) திட்டப் பணிகளுக்கான கோரிக்கைகள் தொடர்பாக நேற்று (30.06.2026) மாலை பல்வேறு இடங்களில் களஆய்வு மேற்கொண்டேன்.
முதலில், பாப்பாக்குறிச்சி காட்டூர் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். அப்போது, தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் நல்ல நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இயலுமா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
அப்போது, அங்கிருந்து தனியார் நிலங்களை பெற்று அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு பகுதிக்கு செல்வதற்கு சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தனர். இதனை உரிய முறையில் தனியார் மற்றும் அதிகாரிகளிடம் பேசி நிலங்களை பெற்று தரும் பட்சத்தில் உரிய திட்டத்தில் நிதி பெறப்பட்டு சாலை அமைத்து தர முயற்சிப்பேன் என உறுதியளித்தேன்.
மேலும், அப்பகுதிக்கு நெடுஞ்சாலையிலிருந்து புதிய சாலை இணைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் சக்திவேல் அவர்கள் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக, எனது அலுவலகத்தினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து நேரில் களஆய்வு மேற்கொண்டு, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
அதனைத் தொடர்ந்து, எல்லக்குடி பிள்ளையார் கோவில் தெரு (வார்டு எண் 39) பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை நேரில் ஆய்வு செய்தேன்.
பின்னர், பொன்மலைப்பட்டியில் உள்ள Sacred Heart மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேஜை, நாற்காலிகள் வழங்குவதற்கான தேவைகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினேன்.
அதன்பின், மொரைஸ் சிட்டி முகாம்பிகை நகரில் (வார்டு எண் 44) பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மின்மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் நீர்த் தொட்டி அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அருகில் உள்ள குடிநீர் குழாய் திட்டத்தில் இணைப்பு பெறுவதில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண உறுதியளித்தேன்.
தொடர்ந்து, கொட்டப்பட்டு கருப்பு கோவில் பகுதியில் (வார்டு எண் 61) பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதி ஏற்படுத்துவதற்கான இடத்தை பார்வையிட்டு, அதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, அவர்கள் பலநூறு வருட பாரம்பரியமாக தாங்கள் வருடத்தில் ஒரு முறை திருவிழாவில் நீர் கொண்டு செல்ல விமான நிலைய பகுதியில் சிறப்பு அனுமதிப்பெற்று தர கோரிக்கை விடுத்தனர். அதற்கு முயற்சி மேற்கொள்வதாக கூறினேன்.
அதனைத் தொடர்ந்து, பாரதி தெரு (வார்டு எண் 61), குளாம்பட்டு (வார்டு எண் 65), கே. சாந்தனூர் (வார்டு எண் 63), செந்தண்ணீர்புரம் (வார்டு எண் 35) மற்றும் பெரிய கம்மாளத்தெரு (வார்டு எண் 20) ஆகிய பகுதிகளில் புதிய நியாய விலைக் கடை கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகளை நேரில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்தேன்.
திருச்சி மாநகர் பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தேவையான வளர்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த தொடர்ந்து களத்தில் செயல்படுவேன்.
அன்புடன்
துரை வைகோ
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
01.07.2026
#DuraiVaiko #trichy #pudukottai #cmotamilnadu #mdmk
1980 முதல் 2024 வரையிலான கடையநல்லூர் இசுலாமிய மக்களின் வாழ்வியலையும், நெசவாளர்களின் வாழ்க்கையையும், தூய்மையான காதலையும் பேசும் #ஹபீபி திரைப்படம் என்னை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டது.
கஸ்தூரிராஜா அவர்களின் தறி நெசவாளர் மரணக் காட்சியும், நாயகன் @esha_actor ஈசா மற்றும் நாயகி மாளவிகா மனோஜின் நடிப்பும் நெஞ்சைப் பிளந்தது. பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் ஆகியோரின் பொன்மொழிகளோடு, விரசமில்லாத ஒரு தூய காதலைத் தந்த இயக்குனர் @meerafilmdr மீரா கதிரவனுக்கும் படக்குழுவினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
இது ஆஸ்கர் விருதை விட உயர்ந்த அங்கீகாரத்திற்குத் தகுதியான ஒரு அமர காவியம்!
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
#vaiko #mdmk #habeebi #kasthooriraja
மறுமலர்ச்சி திமுகவின் 32வது பொதுக்குழுக் கூட்டத்தில், மக்கள் நலன், தமிழர் உரிமைகள், விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை வலியுறுத்தும் 23 முக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டன.
#MDMK#vaiko#duraivaiko#32வது_பொதுக்குழு
கொள்கை வழியில் உறுதியாக...
மக்கள் நலப் பாதையில் தொடர்ந்து...
மறுமலர்ச்சி தி.மு.க.வின் 32வது பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வருகிறது.
#mdmk#vaiko#duraivaiko#mdmkitwing
தமிழகத்தின் அரசியல் எதிர்காலப் பயணத்தை முன்னெடுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க.வின் 32வது பொதுக்குழு இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெறுகிறது. தலைவர் @Vaikooffl வைகோ, முதன்மைச் செயலாளர்@duraivaikooffl துரை வைகோ உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
#mdmk#vaiko#duraivaiko
மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது இந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த எங்கள் தொழிற்சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. 1/2