கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களு��் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ��ரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெ���் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத��து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்ச��த்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்ப��்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நி��்கும்!
அதிமுகவையும், பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் @AadhavArjuna மீது, @AIADMKOfficial சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆதிராஜாராம் அவர்கள் மூலம் சென்னை பெருநகர மூன்றாவது நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
��மைச்சர் மீதான கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளத் தேவையான Sanction தொடர்பாக, BNSS பிரிவு 218-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி @lokbhavan_tn அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கின் தொடர் விசாரணை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவித்து தற்போது 54ஆண்டுகளை நிறைவு செய்து, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடி மகிழும் கோடான கோடி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
1972ஆம் ஆண்டு பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களால் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் புரட்சித்தலைவர் அவர்கள். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது ��ெரிய கட்சியாக உருவாக்கினார்கள். இதில் எனது பங்கும் அடங்கியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. நான் நேசித்த நம் இருபெரும் தலைவர்கள் தான்,நான் இந்த இயக்கத்தை சுவாசிக்க காரணமாக அமைந்தவர்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் ப���்வேறு சறுக்கல்களையும், தோல்விகளையும் தான் இன்று வரை சந்தித்து கொண்டு இருக்கிறது. இதற்கு ஒரு சிலரின் சுயநலம் மற்றும் அவர்கள் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணமாக அமைந்துவிட்டது. இந்த இயக்கத்தின் பலனை அனுபவித்த ஒரு சிலர் மட்டும் ஏதாவது ஆதாயம் தேடி இயக்கத்தை விட்டு சென்று இருக்கலாம். ஆனால், அதே சமயம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தொண்டர்கள் இன்றைக்கும் நம்பிக்கையோடும், உறுதியோடும்தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் என்னவென்றால், இந்த இயக்கம் என்றைக்கு ஒன்றுபடும். பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள், ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணையும் காலம் எப்போது? என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, இது நாள் வரை “நடந்தவை ந���ந்தவையாகவே இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று சொன்ன அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை மனதில் வைத்து தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. இதற்கு மேலும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த இயக்கத்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும்.
“இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று எந்த நம்பிக்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்களோ, அந்த நம்பிக்கை என்றைக்கும் வீண் போய்விடக்கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். இந்த இயக்கம்,ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும் எனவும், மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில�� கொண்டு வர வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும் எனவும் இந்நாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.
கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்ப��� உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை ��தலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் அம்மாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் ப��ற்காலமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி.
ஆளுங்கட்சியின் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம் எனும் குற்றச்சாட்டு! - தேடப்படும் குற்றவாளியுடன் முதல்வரின் ரேக்ளா உலா - தேர்தல் பிரசாரத்தில் மாட்டு வண்டிப் பயணம் மூலம் விலங்குகளை பயன்படுத்தி தேர்தல் விதிமுறை மீறல் என அடுக்கடுக்காய் எழுந்த புகார், தாராபுரம் அதிமுக வேட்பாளரை முடக்க அவர் மீது FIR பதிவு - டிப���் பாக்ஸ் மூலம் பணப்பட்டுவாடா என வரிசை கட்டும் சர்ச்சைகள்!
இதற்கெல்லாம் மேலாக, இன்று மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11, 71, 133, 169 ஆகிய பூத்களின் EVM-கள் செயலிழந்ததாகவும், பல EVM-களில் சீல் இல்லை என்றும் எதிர்க்கட்சி முகவர்களின் குற்றச்சாட்டு - கேள்வி முகவர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல் - தட்டிக் கேட்டு போராடிய சுயேச்சை வேட்பாளர் டாக்டர் மூர்த்தி வலு கட்டாயமாக வெளியேற்றம் என தொடர���ம் இத்தனை தேர்தல் முறைகேடுகளையும் மீறி ஜனநாயகம் எப்படி வெல்லும்?
@AIADMKOfficial
#தாராபுரம் #மதுராந்தகம் #அதிமுக
அதிமுக மீதும், கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மீதும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் @TVKVijayHQ அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல்குமார் ஆகிய இருவரும் நீதிமன்ற படியேறி பதில் அளிக்க வேண்டிய நிலை விரைவில் வரும்!
@AIADMKOfficial
தனிப்பட்ட முறையிலும் சரி…
எங்கள் #Young_ADMK அணியாகவும் சரி…
இந்த இடைத்தேர்தலில் எங்கள் சக்திக்கு மீறியும், எங்கள் வயதிற்கு மீறியும் களத்திலும், ஆன்லைனிலும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம்.
வீடு வீடாக சென்று Door Canvassing,
பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம்,
நோட்டீஸ் விநியோகம்,
போஸ்டர் ஒட்டுதல்,
ஆன்லைனில் தொடர்ந்து வீடியோக்கள் என…
எங்களால் முடிந்த ஒவ்வொரு வழியிலும், எங்களுடைய உழைப்பை முழுமையாக கொடுத்திருக்கிறோம்.🙏🏻🌱
இது பதவிக்காக செய்த உழைப்பு அல்ல…
எங்கள் இயக்கத்தின் மீதும், எங்கள் தலைமை மீதும் கொண்ட நம்பிக்கையால் செய்த உழைப்பு.
எங்களுடைய வயதை விட பெரிய பொறுப்பை ஏற்று,
எங்களுடைய சக்தியை விட அதிகமாக உழைத்து,
எங்களுடைய மனசாட்சிக்கு திருப்தியாக களத்தில் நின்றிருக்கிறோம்.
இந்த உழைப்பிற்கான நல்ல தீர்ப்பை,
நாளை ஆண்டவனிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம்… 🙏🖤
நாம் செய்த உழைப்பு வீண் போகாது…
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
#Young_ADMK
“புரட்சித் தலைவர் MGR, பேரறிஞர் அண்ணா ஆகியோர் சொன்னதுபோல் தாராபுரம்/மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிளும் வெற்றி அதிமுகவுடையது.” 🖤
#young_admk#banumathi4dharapuram