வடசேரி, கிருஷ்ணன்கோவில், தெலுங்கு செட்டித் தெருவில் உள்ள 24 மனை தெலுங்கு செட்டி சமுதாயத்திற்குச் சொந்தமான ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் இன்று கலந்துகொண்டேன்.
பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற இந்த புண்ணிய நிகழ்வில் பங்கேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. இறைவனின் அருளால் ஊர் நலமாகவும், மக்கள் வளமாகவும் வாழ வேண்டிக்கொண்டேன்.
இன்று நாகர்கோவில் 29-வது வார்டு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினேன். முன்னாள் எம்.எல்.ஏ திரு. எம். ஆர். காந்தி அவர்களின் முன்னிலையில், வார்டு வளர்ச்சி மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அகில இந்திய ஒற்றுமைக்காகத் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பாடுபட்ட டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
“ஒரே நாடு – ஒரே அரசியலமைப்பு” என்ற அவரது உயர்ந்த தேசியக் கொள்கையையும், அவர் தேசத்திற்காக ஆற்றிய ஒப்பற்ற தியாகங்களையும் இந்நாளில் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்ந்தோம்.
தேசத்தின் நலனே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த அந்த மாபெரும் தலைவரின் வழியில் பயணிப்போம்!
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் த.வெ.க. அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன்.
மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு சக்தியையும் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாகர்கோவில் கிழக்கு மாநகர பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யோகா பயிற்சியில் என்னையும் இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் யோகா ஒரு சிறந்த வழி.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு, கட்சிப் பணிகள் மற்றும் களப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
இன்று மதுரை அருள்மிகு பழமுதிர்ச்சோலை முருகன் ஆலயம் மற்றும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் தாமரைச் செந்தங்களுடன் இணைந்து இறைவனைத் தரிசனம் செய்ததில் மிகுந்த மனநிறைவு அடைந்தேன்.
மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது, இன்று கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இரண்டு நாள் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று மதுரை கிழக்கு மாவட்டம், பரசுராம்பட்டி பாஜக மண்டலத் தலைவர் திரு. பாண்டியராஜன் அவர்களின் இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மதிய உணவு அருந்தினேன்.
உடன் மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ராஜசிம்மன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. பார்த்தசாரதி அவர்கள் உடனிருந்தனர்.
தமிழக பாஜக இளைஞர் அணி மாநிலத் தலைவர் தம்பி @SuryahSG அவர்களின் அன்பிற்குரிய தாயார் திருமதி காஞ்சனா அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். தாயை இழந்த வாடும் சூர்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில், மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அணி நிர்வாகிகளின் சிறப்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது!
இன்று மாலை, நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது, வல்லன்குமாரவிளை பகுதியில் அமைந்துள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
"அம்ருத் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் இரணியல் ரயில் நிலையப் பணிகளை, பாஜக தேசிய துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. அருணா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்."
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டுகால சாதனை விளக்கக் கருத்தரங்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத் தலைவர் திருமதி. அருணா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மோடி அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துச் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்!
திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
ஒரு மரத்தின் பழங்களைப் பார்த்து நாம் பாராட்டுகிறோம்; ஆனால் அதை வளர்த்த வேர்களை மறந்துவிடக் கூடாது.
அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். அதே நேரத்தில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, இல. கணேசன் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் போட்ட அடித்தளத்தின் மேல் தான் இன்று தாமரை உயர்ந்து நிற்கிறது.
1996-ல் பாஜக அரசு வெறும் 13 நாட்களிலேயே முடிந்தது. அப்போது பலர் “பாஜக முடிந்துவிட்டது” என்றார்கள். ஆனால் தொண்டர்களின் உழைப்பு, கொள்கையின் வலிமை, மக்கள் நம்பிக்கை ஆகியவற்றால் பாஜக மீண்டும் எழுந்து இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக உயர்ந்து நிற்கிறது.
அதனால் அரசியலில் எந்த சவாலும் நிரந்தரம் இல்லை. தனிநபர்களை விட கொள்கையும் தொண்டர்களுமே ஒரு இயக்கத்தின் உண்மையான பலம்.
நான் ஒரு நபருக்காக பாஜகவில் இல்லை; ஒரு சித்தாந்தத்திற்காக பாஜகவில் இருக்கிறேன்.
நேற்றும் பாஜக… இன்றும் பாஜக… என்றும் பாஜக…
@narendramodi@NitinNabin@BJP4India