பள்ளி மாணவர்களின் ID Card-இல் ஜாதிப் பெயர், பள்ளிகளில் தவெகவினரின் அத்துமீறல் என மொத்த கல்வி நிறுவனங்களையும் சீரழிக்கும் கோமாளித்தனமான ஆட்சி இது!
நன்றி : @Neerthiraitv#TVKFails#VijayFails
50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்!
மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப�� படுகொலைகள் அரங்கேறியுள்ளன!
ஆனால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய 'சோஃபா மாடல்' அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் "பேசாமல் சாதிக்கிறேன்" என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!
தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி சினிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு "அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..." என்று எப்போதோ புள���த்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது... இதுதான் மாற்று அரசியலா?
நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? "அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் - சுயமரியாதையும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்த��டு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.
சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் 'இன்ஸ்டா அரசன்' விஜய் அ��ர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று?
அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?
எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?
சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற��குச் சென்று கொண்டிருக்கிறது!
இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!
#TVKFails
இரவு, பகலென தன்னலம் கருதாமல், மக்களை காப்பாறிடும் மகத்தான மருத்துவ சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கும், மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
#NationalDoctorsDay
மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.��.ஸ்டாலின் அவர்கள் கழக சீரமைப்பு ஆலோசனை குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவில் எனக்கும், எனது சக உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது போல "முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்ற கூற்றின்படி குழுவின் அறிக்கைக்கு அயராது உழைப்போம்!
#DMK @mkstalin
ஜனநாயக நடைமுறைக்கு எதிரா, குழந்தைகளைப் பயன்படுத்தி பெரியவங்ககிட்ட வாக்கு கேட்டார் இன்று இருக்கக்கூடிய முதலமைச்சர். ஆனா, அவர் ஆட்சியில குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை, பெரியவங்களுக்கும் பாதுகாப்பு இல்லைங்கிற நிலைமை இன்னைக்கு நடந்துக்கிட்டு இருக்கு.
#TNAssembly
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத்திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனை உயர்த்த ��ோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சர் கேட்க வேண்டும்.
விவசாயியாக பிறக்க இன்னொரு ஜென்மம் தேவையில்லை.. எப்போது நினைத்தாலும் விவசாயி ஆகலாம்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
அரசுப் பள்ளிகளுக்குள் தவெக எம்எல்ஏ-க்கள் சென்று ஆய்வு என்கிற பெயரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆபாசப் பாடல்கள், தவறான பாடல்கள் எல்லாம் ஒலிபரப்புவதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய், அதன் புனிதமான நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்” என்ற கருத்து ஆளுநர் உரையில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த கருத்து அறநிலையத்துறைய��� இருக்கக்கூடாது என்ற பாஜகவின் மற்றொரு குரலாகதான் தவெக அரசும் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
📌தொடர் மின் வெட்டு
📌 சட்டம் ஒழுங்கு சீர்கேடு
📌 பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பெருகும் பாலியல் வன்முறைகள்
📌#TVK நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டங்கள்
தேர்தலுக்கு முன் “தூய சக்தி… தூய சக்தி” என்று கூவிய @TVKVijayHQ, தூய சக்தி அல்ல துயரசக்தி!
#வாயை_திறங்க_CM
கடந்த 30 நாட்களா உங்க ஆட்சியில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டு தலைப்புச் செய்தியாகிய, குழந்தைகள்-பெண்களின் கதறல் கேட்குதா CM @TVKVijayHQ ?
கேட்டா #வாயை_திறங்க_CM#TVK
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#வாயை_திறங்க_CM
கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்கள், இன்று (18.06.2026) பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
“பத்திரிகை நண்பர்களுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிதாக ஆட்சி அமைந்த பிறகு, முதன்முறையாக நம் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர் அவர்கள், இன்றைக்கு சட்டமன்றத்துக்கு வருகை தந்து, ஆளுநர் உரையினை வாசித்திருக்கிறார். பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளுநருடைய ஒரு தனிப்பட்ட உரை கிடையாது. அது அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய உரை, அரசின் `பாலிசி நோட்’ போன்ற ஒரு `ப்ளூ பிரிண்ட்’.
சுயதம்பட்டம் - சுயபுராணம்
இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, என்னென்ன வாக்குறுதிகள் கொட��த்தார்கள், அதையெல்லாம் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு எல்லாம் எப்படிச் செய்யப்போகிறார்கள் என்பதை, முன்கூட்டியே சொல்லக்கூடிய ஒரு பாலிசி நோட்டாகத்தான் எப்பொழுதுமே ஆளுநர் உரை இருக்கும்.
ஆனால், இன்றைக்கு ஆளுநர் உரையை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அதில் இருக்கக்கூடியவை ஆளுங்கட்சியினர் `ரீல்ஸ்’ போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக இந்த ஆளுநர் ��ரை அமைந்திருக்கிறது. அந்த அளவுக்கு முதலமைச்ச��் அவர்கள் தன்னைப் பற்றியும், தன் கட்சியைப் பற்றியும் ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளக்கூடிய, ஒரு சுயபுராணம் பாடிக்கொள்ளக்கூடிய ஒரு உரையாகத்தான் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.
இன்னும் குறிப்பாகப் பார்த்தால், கடந்த ஐந்து வருடங்களாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும்போது, எங்களுடைய முதலமைச்சர், எங்களுடைய அரசு தயாரித்துக் கொடுக்கக்கூடிய எந்த உரையையும் ஆளுநர் முழும���யாகப் படித்ததே கிடையாது. அதில் பல திருத்தங்களை ஆளுநர் செய்வார். ஆனால், இந்த முறை ஆளுநர் அவர்கள் இந்த அரசு என்ன தயாரித்துக் கொடுத்திருக்கிறதோ, அதை அப்படியே ஒரு வரி மாற்றாமல், ஒரு எழுத்து மாற்றாமல் அப்படியே வாசித்திருக்கிறார். இதிலிருந்தே இந்த அரசுக்கும், ஒன்றிய ஆளுங்கட்சியான பா.ஜ.க.விற்கும் ஒரு இணக்கமான ஒரு சூழ்நிலை, ஒரு கனெக்சன் ஏற்பட்டுவிட்டதோ என்கிற எண்ணம் அனைவருக்குமே ஏற்���ட்டிருக்கிறது.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள்-சாதனைகள்
அவர்களுடைய சொந்த சுய புராணத்தை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தீர்கள் என்றால், `ஒலிம்பிக் மையங்கள்’, `திறன் பயிற்சி மையங்கள்’ `69 சதவிகித இட ஒதுக்கீடு’, `இருமொழிக் கொள்கை’, `தேசிய கல்விக் கொள்கை- 2020 எதிர்ப்பு’, `நில��வையில் இருக்கக்கூடிய கல்வி நிதி கேட்டுக் கோரிக்கை’, `வறுமையில்லா தமிழ்நாடு’, `உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி’, `சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை’, `கீழடி உள்ளிட்ட அகழாய்வுகள்’, `இந்தியாவிலேயே அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு’ இப்படி எங்கள் அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளைத்தான் மீண்டும் இவர்கள் படித்திருக்கிறார்கள்.
இப்படி கடந்த திராவிட மாடல் அரசின் திட��டங்கள் மேல் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, இவர்கள் ஆட்சியின் தோல்விக்கான பழியைத் தூக்கி மீண்டும் திராவிட மாடல் அரசின் மீது, தி.மு.க அரசின் மீதே இவர்கள் போட்டிருக்கிறார்கள். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் நம் பெருமை
இரண்டு, மூன்று இடங்களில் ஆளுநர் உரையில் `சென்ற அரசினுடைய நிர்வாகம் சரியில்லை’ என்று குறிப்பிட்டுக் காட்டியிரு��்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்படி ஆட்சி நிர்வாகம் சரியில்லாமல் இருந்திருந்தால், எப்படி இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிற மாதிரி பல திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றிக் காட்டியிருக்கும்?
உதாரணத்துக்கு, சென்ற வாரம் நம் முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்குப்போய் நிதி ஆயோக் கூட்டத்தில் நம் தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு திட்டங்களைச் செய்திருக்கிறோம், எவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறோம், இன்றைக்கு இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசியிருக்கிறார். அதெல்லாம் அவருடைய ஒரு மாத ஆட்சியினுடைய சாதனைகளா? கிடையாது.
காப்பி பேஸ்ட் அரசு!
முன்னாள் முதலமைச்சர், எங்களுடைய தலை��ர், எங்களுடைய திராவிட மாடல் அரசினுடைய சாதனைகளைத்தான் போய் டெல்லியில் நம் முதலமைச்சர் அவர்கள் வாசித்துவிட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், மொத்த முரண்பாடுகளுடைய உருவமாகத்தான் இன்றைக்கு இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறது. இந்த அரசு அமைந்து 38 நாட்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கென்று சொல்வதற்குச் சாதனைகள் எதுவுமே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே எங்களுடைய திராவிட மாடல் அர���ின் திட்டங்கள்தான், அதனுடைய நீட்சிதான். இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு திட்டங்களை இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் திட்டங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்று ஒரு ப்ளூ பிரிண்ட்டாக, ஒரு முன்னோட்டமாக, ஒரு ட்ரைலராகத்தான் இன்றைக்கு இந��த உரை இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். மக்களும் அதை எதிர்பார்த்தார்கள்.
இவர்களுடைய அறிவிப்புகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்று இந்த ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டும் ��ன்று நாங்கள் எல்லாம் நினைத்தோம், ஆனால் ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ஒரு வெற்று அறிக்கை
சொன்ன வாக்குறுதிகளில் இருந்து எப்படி எல்லாம், என்ன காரணம் எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் என்பதற்காக நேற்று முன்தினம் அதற்கு ஒரு முன்னோட்டமாக ‘வெள்ளை அறிக்கை’ என்று சொல்லி ஒரு வெற்று அறிக்கையை நேற்று முன் தினம் வெளியிட்டார்கள். அதைப்பற்றி நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்ப���னர், முன்னாள் நிதி அமைச்சர், அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார். அதற்கு கேள்விகளும் கேட்டிருக்கிறார், அதற்கு எந்த பதிலும் இதுவரைக்கும் இல்லை.
இப்படி மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், இது எல்லாத்துக்கும் மேல் சட்டம் ஒழுங்கு இன்றைக்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நாளும் தொலைக்��ாட்சிகளில் நீங்களே ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு சின்ன புள்ளிவிவரத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்படியெல்லாம் டயலாக் பேசினார், வீர வசனம் பேசினார் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள், நீங்கள் அத்தனை பேரும் பார்த்திருப்பீர்கள்.
என்ன சொன்னார்? ‘பச்சை பிள்ளைகள், படிக்கிற பிள்ளைகள், சின்ன பொண்ணுங்க, வீட்டில் இருக்கிற பொண்ணுங்க, வேலைக்குப் போகிற பொண்ணுங்க, இவர்கள் எல்லாருக்கும் நடக்கிற கொடுமையைச் சொல்ல முடியவில்லையே சிஎம் சார்’ என்று எங்கள் தலைவரைப் பார்த்து, அப்போது இருக்கக்கூடிய மு���லமைச்சரைப் பார்த்து, இன்றைய முதலமைச்சர் அவர்கள் வீர வசனம் பேசினார். இன்றைக்கு அவர்களுடைய ஆட்சியில் தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த கொடுமைகள் எல்லாம், குற்றங்கள் எல்லாம் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தில் வரும் அல்லவா, ‘சார், கண்ணாடியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் சார்’ என்கிறஅந்த நிலைமையை இன்றைக்கு முதலமைச்சர் ஏற்படுத்தி இருக்கிறார். அதுவும் வேலியே பயிரை மே��்ந்த கதையாக இன்றைக்கு நடக்கக்கூடிய அனைத்து குற்றங்களிலும் யார் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், அவர்களின் கட்சியினரே அந்த குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு?
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் ஆளுநர் உரையில் எந்தவிதமான ஒரு குறிப்பும் கிடையாது. அதேபோல, ஏற்��னவே நன்றாக இருக்கக்கூடிய திட்டங்களைக் கெடுப���பதை, எதிர்க்கட்சிகள் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நேற்று கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், எங்கள் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த ஒரு திட்டம், அரசின் முத்திரை திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கி இருக்கிறார்கள், பெயரை மாற்றி இருக்கிறார்கள். அது எங்களின் தலைவர் பெயரில் இருக்கக்கூடிய திட்டமும் கிடையாது, டாக்டர் கலைஞருடைய பெயரில் இருக்கக்கூடிய ஒரு திட்டமும் கிடையாது, ஒரு நல்ல திட்டம். ஏன் நீக்கி இருக்கிறார்கள் என்றால், ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே, ‘முதல்வன்’ என்று சொன்னாலே மக்களுக்கு எங்கள் தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பெயர்தான் மக்களுக்கு ஞாபகம் வரும் என்று, அப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தோடு அந்த திட்டத்தின் பெயரையே நீக்கி இருக்கிறார்கள். அந்த திட்டத்தின் அச்சீவ்மென்ட்ஸ் வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகள். ஆனால் எத்தனை பிரச்சனை நடந்து கொண்டு இருந்தாலும், ‘இன்றைக்கு முதலமைச்சர் கோட் சூட் போட்டு இருக்கிறார்’, ‘இன்றைக்கு முதலமைச்சர் வேட்டி சட்டை கட்டி இருக்கிறார்’, ‘இன்றைக்கு முதலமைச்சர் டிபன் பாக்ஸில் லஞ்ச் எடுத்துக்கொண்டு வந்து சாப்பிடுகிறார், கோட்டையிலேயே சாப்பிடுகிறார், அவர் வாயில் அவரே வைத்துச் சாப்பிடுகிறார்’ என்று அவர்கள் கட்சியின் விர்ச்ச��வல் அபியூசர்ஸ் (Virtual abusers) எல்லாம் இப்படிப்பட்ட கண்டன்ட்களை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி என்றைக்கு நம் முதலமைச்சர் வாயைத் திறப்பார் என்று கேட்பதற்காகத்தான், இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ‘தயவு செய்து வாயைத் திறங்கள் சிஎம் சார், பதில் சொல்லுங்கள் சிஎம் சார்’ என்பதற���காகத்தான் இன்றைக்கு இந்த பேட்ஜை நாங்கள் அணிந்து கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் எதிர்ப்பை, எங்களின் எண்ணங்களைத் தெரிவித்து இருக்கிறோம்.
அதுவும் எப்போதாவது பேசுகிற முதலமைச்சர் பார்த்தீர்கள் என்றால், அப்பொழுதும் தான் முதலமைச்சர் என்பதை மறந்து, இன்னும் பிரச்சார மோடிலேயே பேசிக் கொண்டிருக்கிறார். சிஎம் தான் அப்படி இருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால், அவர்களின் ஒவ்வொர��� அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் முழுக்க முழுக்க ரீல்ஸ் வெறியிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே அவர்களுக்குக் கன்டென்ட். எல்லாமே ரீல்ஸ்தான். இதையெல்லாம் பற்றி முதலமைச்சர் கவலைப்படுகிற மாதிரி துளியும் தெரியவில்லை. அவரின் ஒரே சிந்தனை இந்த ஆட்சியை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்கிற அந்த கவலையில்தான் அவர் இருக்கிறார்.
பீரோ புல்லிங் என்று சொல���வார்கள். அது மாதிரி இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் எம்.எல்.ஏ புல்லிங் செய்துக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘பேனிக் பையிங்’ (Panic Buying) என்று ஒரு வார்த்தை இருக்கிறது. திடீரென்று ஒரு பேரிடர் காலமோ, இல்லை ஒரு கடையடைப்போ நடக்கும் போது, மக்கள் எல்லாம் அவசர அவசரமாக சென்று வீட்டிற்குத் தேவையான சாப்பாடு பொருட்கள், வண்டிக்குத் தேவையான பெட்ரோல், டீசல் எல்லாம் போட்டு வைத்துக் கொள்வார்கள். அதற்குப் பெயர் பேனிக் பையிங் என்பார்கள். ஒரு ஆர்டிபிஷியல் டிமாண்ட் கிரியேட் செய்வது. அது மாதிரி இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம், ஆட்சி அமைந்த நாளில் இருந்து இன்றைக்கு வரைக்கும் தன் ஆட்சியைப் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் பேனிக் பையிங் செய்துகொண்டிருக்கிறார்.
மாற்றம் மாற்றம் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு இந்த ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்றைக்குப் பொதுமக்கள் என்னவென்று சொல்கிறார்கள்? இது மாற்றம் இல்லை. மாட்டிக்கொண்டோம் நாம் எல்லாம் சேர்ந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டோம் என்று புலம்ப வைத்திருக்கிறது இன்றைக்கு அமைந்திருக்கக்கூடிய இந்த அரசு. எனவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் என்று யாருடைய பாதுகாப்புக்கும், எந்த ஒரு வலிமையான திட்டங்களும் ப��திய ஆளுநர் உரையில் நிச்சயம் இல்லை. அதனால் கடந்த ஆட்சியின் மேல், காழ்ப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்துகின்ற இந்த ஆளுநர் உரையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கேள்வி: ஆளுநர் உரையை முழுமையாக வாசித்துவிட்டுப் போயிருக்கிறார். தி.மு.க ஆட்சியின்போது ஆளுநர் பாதியிலேயே கிளம்பிப் போய்விடுவார். இந்த நிகழ்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ஏற்கனவே சொன்ன மாதிரிதான். கடந்த ஐ���்து வருடத்தில் ஒரு முறை கூட ஆளுநர் அவர்கள் தி.மு.க அரசு கொடுத்திருக்கக்கூடிய உரையை முழுமையாகப் படித்ததே கிடையாது. மாற்றம் செய்வார். ஆனால் மாற்றம் செய்யும்போது அப்பொழுது இருந்த எங்கள் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் இந்த முறை பார்த்தீர்கள் என்றால், ரொம்ப அபூர்வமாக முழு உரையும் ஒரு வார்த்தை, ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட எடுக்காமல் வாசிக்கும் போதே, உங்களுக்���ுத் தெரியும். நம் ஆட்சியாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தாருக்கும், பா.ஜ.க-விற்கும் ஒரு பெரிய அண்டர்ஸ்டாண்டிங் வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது.
கேள்வி: சட்டப்பேரவையில் மரபு மாற்றப்பட்டு, இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : மிகப்பெரிய ஆச்சரியங்கள், அதி��யங்கள் இப்போது இங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. மரபு மீறப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் எப்போதுமே தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் வாசிக்கப்படும். முடியும் போது ஆளுநர் கிளம்புவதற்கு முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பப்படும். ஆனால் இந்த முறை இரண்டு முறை தேசிய கீதத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள் என்றால், மீண்டும் சொல்கிறேன், பா.ஜ.க-வும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும், ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கிற்கு வந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
நன்றி, வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
#TNAssembly #வாயை_திறங்க_CM
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
புதிய அரசு ஆட்சியமைத்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட போதிலும், இந்த அரைகுறை வெற்றி மமதையில் இருந்து இன்னும் வெளியே வராமல், influencer-களை வைத்து, ‘6 மாதங்கள் கூட கேள்வி கேட்காமல் இருக்க முடியாதா?’ என்று மக்களை மிரட்டுவதும், கேள்வி கேட்கும் மக்களை தெரு நாய்களோடு ஒப்பிடுவதும் என அருவருக்கத்தக்க பேச்சுக்களை அரங்கேற்றி வருகிறார்கள்.
கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும்?
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் அவகாசம் எடுத்துக்கொள்ள���ங்கள், ஆனால் ‘பெண்கள் பாதுகாப்பு’ என்று வாய் கிழிய பேசியதை எப்படி கேள்வி கேட்காமல் இருப்பார்கள்? திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலையில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில் முட்புதரில் இருந்து மீட்கப்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது.
பூவிருந்தவல்லி அருகே காட்டு���்பாக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று, ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததுள்ளார். தாம்பரத்தை அடுத்த படப்பையில், வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி தாளமுத்து நகரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத போதகர் அருள்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூரில் 7-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் எத்தனை எத்தனை கொடுமைகள்? அரசு நிர்வாகம் கடுகளவேனும் வேலை செய்கிறதா? பெண் குழந்தைகள் சுதந்திரமாக வீட்டை விட்டே வெளியே வரக்கூட முடியாத நிலையில் தமிழ்நாட்டை தள்ளிக்கொண்டிருக்கிறது இந்த தறிகெட்ட அரசு. சீர்கெட்டுக் கிடக்கும் இந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சரிசெய்ய முயற்சிகள் நடக்கிறதா?
சொந்த கட்சியினரின் குற்றச்செயல்கள்களைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு பொம்மை முதல்வராக இ��ுக்கிறார் என மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
ஆனால் Influencer-களை வைத்து 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என்று கூச்சமில்லாமல் கேட்கிறது இந்த #Sofa_model அரசு. அ.தி.மு.க.வை உடைத்து ஆள் பிடிக்க 6 மாதங்கள் தேவைப்படவில்லை, திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் ஸ்டிக்கர் ஒட்ட 6 மாதங்கள் தேவைப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, சட்டம் - ஒழுங்கை சரிசெய்ய மட்டும�� அவகாசம் வேண்டுமா? நீங்கள் அவகாசம் எடுத்து பாதுகாப்பு கொடுக்கும் வரை குற்றச்செயல்களை, இழைக்கப்படும் அநீதிகளை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமா?
என்னங்க சார் உங்க மாற்றம்?
#TVKFails
“மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு, தனது ஒரு மாத கால ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது..
6 மணி நேரம், 12 மணி நேரம் ��ின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில், நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை, மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும், இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுட��் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார்.. மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை..
பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்..
தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல், தினமும் திசை திருப்���ும் வேலையை மட்டும் செய்கிறார்..
“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர்.. பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையை தீர்ப��பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார்.
அ��ுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்?
மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார்.. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார���..
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட கரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் “மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிக���் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!
ஆனால் எத��ால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை!
இதுவும் தவெக ஆட்சியில் நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை.. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பது தான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது..
புள்ளி விவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல�� 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்..
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக் குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை.. அது மட்டுமா?
இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்..
(1/2)