#கொடைக்கானல்...
#KULIR_KODAI_INN_திறப்பு_விழா!
#மஜக_தலைவர்_மு_தமிமுன்_அன்சாரி_பங்கேற்பு!
பிரபல கோடை சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் KULIR KODAI INN என்ற புதிய தங்குமிடத்தின் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
மஜக-வின் கருத்தியல் ஆதரவாளரும், அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவரும், சமூக சேவகருமான திரு.சிவக்குமார் அவர்களின், இந்த தங்குமிடத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன் அவர்களும் திறந்து வைத்தனர்.
தேர்தல் முடிந்த பிறகு தலைவர் மு.தமிமுன் அன்சாரி வந்துதான் இதனை திறந்து வைக்க வேண்டும் என இதன் உரிமையாளர் திரு. சிவக்குமார் அவர்கள் காத்திருந்து அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர். மதுரை முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(குறிப்பு: கொடைக்கானல் நாயுடுபுரத்தில் அமைந்துள்ள இந்த தங்கும் இடத்தில் நியாயமான கட்டணத்தில் கொடைக்கானலை கண்டு ரசிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் :
KULIR KODAI INN
For booking ; 04542-240083, 9566446328
புரட்சியாளர் #அம்பேத்கர் அவர்கள், இந்திய வரலாற்றின் பெருமை மிகு குடிமகன்.
எளிய மக்களை எழ வைத்தவர்.
அழுத மக்களின் கண்ணீரை துடைத்தவர்.
நலிந்த பிரிவு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர்.
மாபெரும் அறிவாளி.
புரட்சிகர சிந்தனையாளர்.
இட ஒதுக்கீடு பெற காரணமாக இருந்த மனிதநேயர்.
அவர் புகழ் ஒங்குக!
#BabaSahebAmbedkar #DrAbedkar #Ambedkar
#இந்தி_ஆதிக்க_எதிர்ப்பு_போராளி_சிவா_திலிபன்_தியாகியானார்!
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!
சமீபத்தில் மே 17 இயக்கம் முன்னெடுத்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் தீரத்துடன் களமாடிய தோழர். #சிவா_திலீபன் சற்று முன்பு மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனோம்.
மே 17 இயக்கம் உருவாக்கிய படை கருவிகளில் ஒருவராக திகழ்ந்த தோழர் சிவா திலீபன் அவர்கள், நிலைகுலையாத போராட்டங்களுக்கு சொந்தக்காரர்.
அன்று சென்னை பூங்கா நகர் ரயில் நிலையம் அருகில் இந்தி எழுத்துக்களை அழித்துக் கொண்டிருந்தபோது, அப்போது வந்த ரயில் முன் பாய்ந்ததால் படுகாயம் அடைந்தார்.
தங்களது போராட்டம் எவராலும் உற்றுநோக்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தில்; தன்னையே படுகாயப்படுத்தி அதன் வழியாக தங்கள் போராட்ட செய்தியை உலகறிய செய்த அவரது தியாகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'வாழ்ந்து போராட வேண்டும் ' என்ற அவரது கோட்பாட்டை அவரே தகர்த்தெறிந்து விட்டு, படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ; முதல்வர் உள்ளிட்ட பலரும் பதட்டத்துடன் விரைந்து சென்று அவர் நலம் பெற வேண்டுமென விழைந்தனர்.
நானும் மருத்துவமனைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளோடு சென்று பார்த்த போது, தோழர். திருமுருகன் காந்தி இடமும், அவரது இயக்க நிர்வாகிகளிடமும் மட்டும் இன்றி, தோழர் சிவா திலீபனுடைய மனைவி மற்றும் மகள்களிடமும் ஆறுதலை பகிர்ந்து கொண்டோம்.
எப்படியும் மீண்டு வருவார்; மீண்டும் களம் புகுவார்; என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், சற்று முன்பு தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தொடர்பு கொண்டு அவருடைய மரண செய்தி அறிவித்த போது உண்மையில் கலங்கி போய் விட்டோம்.
தாய் தமிழ்நாட்டின் உரிமைக்காக ; இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக; தன்னையே மாய்த்துக்கொண்ட மொழிப்போர் தியாகி என்ற உயர் தகுதியை அவர் அடைந்திருக்கிறார்.
அவர் செய்த செயலில் நமக்கு துளியும் உடன்பாடு இல்லை.
துயரமிக்க இந்த சூழலில் அதைப் பற்றி பேசுவதும் நியாயமில்லை.
இனமானம் காக்க; தமிழ் மொழிக்காக தன்னையே இழந்த ஒரு தியாகியாக செயல் தமிழ்நாட்டை அதிரச் செய்திருக்கிறது.
இந்நேரத்தில் முழு தமிழகமும் அவருக்காக உணர்வு பூர்வமாக எழுந்து நிற்கிறது.
மே 17 இயக்கத் தோழர்களுக்கும், மொழிப்போர் உணர்வாளர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த ஆறுதலை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது தியாகங்கள்
வீண் போகாது!
இந்தி ஆதிக்கும்
என்றும் வெல்லாது!
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
18.03.26
பாகிஸ்தானுக்கு கண்டனம்
..........................
அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் மீது, புனித ரமலானில் பாகிஸ்தான் படைகள் நடத்திய கொடூர தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் வேதனை அளிக்கிறது.
மருத்துவமனைகளின் மீதெல்லாம் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஈரான் மீது புனித ரமலானில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாத படைகள் நடத்தும் தாக்குதலுக்கும், தற்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் மீது நடத்தி இருக்கும் தாக்குதலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
மருத்துவமனைகளில் குண்டு வீசும் அராஜகங்கள் மனிதாபிமானத்திற்கு விடப்பட்டிருக்கும் புதிய சவால்களாகும்.
.................................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயாக கட்சி
17.03.26
#PakistanAfghanWar
#தடம்மாறாத_பயணத்தில்_தடுமாறாதவர்!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைத் தலைவர் அண்ணன் மன்னை செல்லச்சாமி அவர்களின் மறைவு!!
நீங்கா நினைவுகளுடன்....
மாநில தகவல் தொழில் நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
எரிவாயு தட்டுப்பாடும், தவறான வெளியுறவு கொள்கையும்!
▪️ ▪️ ▪️
அரபுவளைகுடா நாடுகளில் இருந்துதான் அதிகமான எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வளங்கள் நமக்கு கிடைக்கிறது.
ஒரு நாளைக்கு சுமார் 25 பில்லியன் பீப்பாய்கள் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்மோஸ் நீரினை வழியாகவே உலகிற்கு செல்கிறது.
இந்தியாவிற்கான 80% செய்த எரிவாயு இப்பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது.
ஹோர்மோஸ் நீரிணை என்பது நமது கடல் போக்குவரத்து வணிகத்திற்கு பெரும் பங்காற்றுகிறது.
இந்த ஹார்மோஸ் நீரிணையை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை ஈரான், சீனாவுக்கு மட்டும் கொடுத்திருக்கிறது.
காரணம் இந்த போரில் சீனா எடுத்த அரசியல் நிலைப்பாடுதான்.
ஆனால் இஸ்ரேலை எங்களுடைய 'தந்தை நாடு' என்று புகழ்ந்துரைத்து, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் மோடி உள்ளார்.
இந்தப் போரிலும் நீதியான நிலைபாடு எடுக்காத காரணத்தினால், இப்போது நாம் பாதித்துள்ளோம்.
இன்று எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதும், உணவகங்கள் மூடப்படும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதும் அடுத்தடுத்து வேறு பல பாதிப்புகள் ஏற்படப் போவதும் யாரால், எதனால் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஒன்றிய மோடி அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைக்காக இன்று நம்முடைய நாடு ஒரு நெருக்கடியை சந்திக்கிறது.
...............................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
இன்று
ஒரு இந்திரா காந்தி இல்லையே....
.................... ................ ..............
நமது அழைப்பை ஏற்று நல்லெண்ண கூட்டு கடற்பயிற்சியில் ஈடுபட்ட பிறகு, நாடு திரும்பிய ஈரானிய போர்க்கப்பலை இலங்கை அருகே அமெரிக்கா தாக்கி அழித்து 85க்கும் அதிகமானாரை படுகொலை செய்துள்ளது.
நமது விருந்தினர்களாக வந்தவர்களை; நமது இந்திய பெருங்கடலில்; போருக்கு தொடர்பு இல்லாத பகுதியில்; தாக்கி அழித்திருப்பது அறமற்ற செயலாகும்.
'இஸ்ரேல் எங்களின் தந்தை நாடு' என செயற்கையாக சிரித்து தனது ஃபாசிச பேரன்பை வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இவ்விஷயத்தில் மௌனம் காட்டுவது இந்தியாவின் சர்வதேச ஆளுமைக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
பங்களாதேஷ் விடுதலை போரின்போது, பாகிஸ்தானுக்கு துணை நின்ற அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி, பாகிஸ்தானின் போர் கப்பலை சிதறடித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் துணிச்சலை எண்ணிப் பார்க்கிறோம்.
தற்போது ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு கூட, அமெரிக்காவிடம் அனுமதி பெறக்கூடிய நிலையில் இருக்கும் இன்றைய பிரதமரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்!
நரேந்திர மோடியா? சரண்டர் மோடியா?
என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்!
................................
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
07.03.26