வாழ்க்கையில் மிகக் கொடுமை“ என்ன பாத்துக்க யாருமே இல்லையே “” என்ற புலம்பல்தான். உங்களை எதற்கு “ஒருவர் ‘ பார்த்துக் கொள்ள வேண்டும் ? அது மருத்துவமனையில் நோயாளியாய் இருப்பது போல.! உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அது கடவுளே உங்களை பார்த்துக் கொள்வது போல். !
ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்.
முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடங்கலாய் இருப்பது “ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் “ என்ற நினைப்புதான். சிறிதோ பெரிதோ எந்த காரியத்தையும் உடனே முடித்து விடுங்கள். மனம் முழுக்க ஒரு நிம்மதி பரவி முன்னேற்றத்தை கண் முன்னால் காண்பீர்கள்.
மனித இனத்திற்கு நிரந்தர கலாச்சாரம் மதம் என்று எதுவும் கிடையாது. முன்னோர் வழிதான் பின்பற்ற வேண்டும் என்றால், ஆதிமனிதன் போல் அம்மனமாகத்தான் திறிய வேண்டும். அறிவு வளரவளர நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மாறியே தீரும். மாற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை என பொருள்
#மாற்றம்ஒன்றேமாறாதது
என் கடைக்குட்டி லெனி பிறந்தநாள் இன்று. புரட்சியாளர் லெனின் நினைவாக லெனி என்று பெயரிட்டோம். என் தாய், அக்கா, மனைவி, சிவீன் ஆகியோர்க்கு பிறகு என் வாழ்க்கையை அழகாக்கும் அர்த்தமுள்ளதாக்கும் ஐந்தாவது பெண் இவள். #Leni turns 4 today
#HBDLeni