பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88
75-ஆண்டு கால ஆலமரமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை அணியாக 46-ஆம் ஆண்டில்
அடியெடுத்து வைத்திருக்கிறது நம் @dmk_youthwing. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தமான நம் இளைஞர் அணி, மாவட்டம்-மாநகரம்-ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர் வரை பரந்து விரிந்து வளர்ந்துள்ளது.
இந்தக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கழகத்தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் தற்போது ஒன்றியத்துக்குட்பட்ட கிளைகளிலும் நகர-பகுதி-பேரூர் வட்டங்களிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இதன் முதற்கட்டமாக சென்னை மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட 43-வட்டங்களிலும், 712-பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில்
கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் கழகக் கொள்கைகளை மனதிலேந்தி மக்கள் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@nchitrarasu@Joel_Dmk@Prakashbalara01
தேநீர்க் கடைகளிலும் சிகை அலங்கார நிலையங்களிலும் நாம் பேசிய அரசியல் உரையாடல்கள், இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகின்றன. சாமானியருக்கும் அரசியலைக் கொண்டு சேர்த்த உடன்பிறப்புகள், இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் களமாட வேண்டியதன் அவசியத்தைக் கழக இளம் பேச்சாளர்களிடையே எடுத்துரைத்து, கழகச் செய்தித் தொடர்புக் குழுத் துணைச் செயலாளர் சகோதரர் @SuriyaKML அவர்கள் ஆற்றிய உரை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில்…
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
சுயமரியாதைக்கும், திராவிட தத்துவத்திற்குமான நீண்ட நெடிய தொடர்பையும் அவற்றை சாமானிய மக்களுக்குக் கொண்டு சேர்த்த நம் தலைவர்கள் குறித்தும் வரலாற்று சான்றுகளோடு கழக இளம் பேச்சாளர்களுக்கு, திராவிடர் கழக கொள்கை பரப்புச் செயலாளர் - அக்கா @ArulmozhiSalem அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
‘சாதி என்னும் தாழ்ந்த 'படி' நமக்கெல்லாம் தள்ளுபடி! நூலைப்படி’, என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதையை மேற்கோள் காட்டி, இளம் பேச்சாளர்களிடையே வாசிப்பின் அவசியத்தையும், வரலாற்றின் முக்கியத்துவத்தையும், எடுத்துரைத்து அண்ணன் @Suba_Vee அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பை, இன்று மாலை 6.30 மணிக்கு, நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழக இளம் பேச்சாளர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் உலக வரலாற்றையும் கழக வரலாற்றையும் உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்து, அண்ணன் @dindigulleoni அவர்கள் ஆற்றிய உரையின் காணொலித் தொகுப்பு, இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில்…
#கழக_இளைஞர்_அணி@uyirinummelana
ஆண்டாண்டுகாலமாய் நம் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை முறியடித்து, கழகம் மீண்டு வந்த வரலாற்றை விளக்கி, கழக இளம் பேச்சாளர்களுக்கான இரண்டுநாள் பயிற்சி முகாமில், கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் @dmk_raja எம்.பி அவர்கள் ஆற்றிய உரையின் காணொலி தொகுப்பை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்!
#கழக_இளைஞர்_அணி @uyirinummelana
கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு @UdhayStalin அவர்களின் முன்னெடுப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு @dmk_youthwing சார்பில், நடத்தப்பட்ட @uyirinummelana பேச்சுப்போட்டியில், தி.மு.க இளம் பேச்சாளர்கள் கழக மேடைகளில் கிடைத்த அனுபவங்களை மண்டலத்திற்கு ஒருவரென பகிர்ந்துகொண்ட, ‘களம் புதிது’ அனுபவப் பகிர்வு நிகழ்வின் சிறப்புத் தொகுப்பை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
@uyirinummelana #கழக_இளைஞர்_அணி
திசைகள் எங்கும் திராவிடத்தை எடுத்துச் செல்லும் தி.மு.க இளம் பேச்சாளர்களைப் பல தளங்களிலும் பட்டை தீட்டிய இரண்டு நாள் பயிற்சி முகாமில் கழக இளைஞர் அணிச் செயலாளர் -மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் அறிமுகவுரையை இன்று மாலை 6.30 மணிக்கு நம் @Kalaignarnews தொலைக்காட்சியில் காணலாம்.
@uyirinummelana #கழக #கழக_இளைஞர்_அணி
1958ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அறிஞர் அண்ணா தலைமையில் சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 29.01.1956ல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழுவில் ‘ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
#உங்களுக்குத்_தெரியுமா #Anna #KalaignarForever