ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தமிழ்நாட்டின் நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என்றார் திமுக அரசின் வேளாண் துறை அமைச்சர் கொடுத்தார்களா
To celebrate the oneness of Kashi & TN under the Ek Bharat Shreshtha Bharat initiative of our Hon PM Thiru @narendramodi avl, the 3rd edition of Kashi Tamil Sangamam was inaugurated today by our Hon Education Minister Thiru @dpradhanbjp avl, Hon Chief Minister of UP Thiru @myogiadityanath avl & Hon MoS Thiru @Murugan_MoS avl.
The teaching of Saint Agasthya will be highlighted in this year's KTS, and the participating delegates from TN will also visit the Ayodhya Ram mandir & take the holy dip as part of the Maha Kumbh Mela.
#VanakkamKashi
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உயரிய நோக்கத்தின் பகுதியாக, காசி மற்றும் தமிழகத்தின் கலாச்சாரத் தொடர்பினைக் கொண்டாடும் வகையில், மூன்றாவது ஆண்டு காசி தமிழ் சங்கமத்தை, இன்று நமது மாண்புமிகு மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள், உத்திரப் பிரதேச மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு @myogiadityanath அவர்கள் மற்றும் மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில், அகத்தியரின் போதனைகள் சிறப்பிக்கப்படும். மேலும், தமிழகத்திலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகள், அயோத்தி ஶ்ரீராமர் கோவிலுக்குச் செல்வதோடு, மகா கும்பமேளாவில் புனித நீராடுவார்கள்.
Kashi Tamil Sangamam begins…
A celebration of the timeless civilizational bonds between Kashi and Tamil Nadu, this forum brings together the spiritual, cultural and historical connections that have flourished for centuries. It also highlights the spirit of ‘Ek Bharat, Shrestha Bharat.’
I do urge all of you to be a part of Kashi Tamil Sangamam 2025!
@KTSangamam
In Chennai today, it was a mesmerising journey into our rich cultural heritage as we listened to the verses of Kamba Ramayanam beautifully presented by our renowned Carnatic singer Thiru Sikkil Gurucharan avl & the essence of the verses explained by Dr Priya Ramachandran avl & Dr Mohammed Rela in an event organised by Hamsadhwani.
Their profound insights and captivating presentation made the evening truly memorable.
முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் திரு. @mkstalin?
தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா?
அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்?
உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?
திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இனியும் காலதாமதமாக்காமல், உடனடியாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்.
பாரதத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவரான, பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவதரித்த தினம் இன்று.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்டவர். இறைவன் ஒருவனே. அவனை அடைவதற்கான பல வழிகளே, வழிபாட்டு முறைகள் என்பதை, மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர். வீரத் துறவி விவேகானந்தருக்கு, ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்து ஞானம் வழங்கியவர்.
அனைத்து மதங்களும் இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை உணர்ந்து, ஒற்றுமையை வலியுறுத்திய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போற்றி வணங்குகிறோம்.