ஆந்திர மாநில காவல்துறை மற்றும் மீன்வளத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தேர்தல் காலம் வரை தன்னை நீட் எதிர்ப்புப் போராளியாக வேடமிட்ட @CMOTamilNadu, இன்று நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குகிறார்!
இரண்டு மாதங்களாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மௌனம் காக்கும் முதல்வர், ஜனநாயக ரீதியாகப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது வாயைத் திறந்து பதில் சொல்வாரா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இன்றைய பொய்க்கால் குதிரை அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனைக்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
மடப்புரம் அஜித்குமார் மரணத்தின் போது “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று பதாகை பிடித்த இன்றைய முதலமைச்சர், தனது ஆட்சியில் நடக்கும் தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில், நீதி வைத்துள்ளார்?
அருணாச்சலம் மரணத்தின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு யார் இழைத்திருந்தாலும், எந்த பாரபட்சமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி,
திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
27.07.2026
திங்கள் கிழமை.
காலை 10 மணி.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பள்ளிகளில் அத்துமீறி நுழைந்து ரீல்ஸ் செய்யும் தரம் தாழ்ந்த அரசியலைத் தொடரும் தவெக நிர்வாகிகள், இன்று ஒருபடி மேலே சென்று அரசுப் பள்ளியைச் சினிமா தியேட்டராக மாற்றி, புதிதாக வெளியாகும் முதலமைச்சரின் திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டி கல்விக்கூடங்களை அவமதித்துள்ளனர்.
எதற்கெடுத்தாலும் கருத்து கந்தசாமியாக முந்திக்கொண்டு அறிக்கை விடும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இந்த அத்துமீறலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்,
நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
25.07.2026
சனிக்கிழமை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாக வசித்த மூதாட்டி நகைக்காகப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியர் அதே பாணியில் நகைக்காகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து நகைக்காகப் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியிலும் கடந்த மூன்று நாட்களில் இரண்டு படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இத்தகைய கொடூரத் குற்றங்களைத் தடுத்து முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய முதலமைச்சரோ, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலை பேசுவதில் மட்டுமே தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார்; நிர்வாகத் திறனற்ற நபர்கள் தலைமை பொறுப்பில் இருக்கும்போது, தமிழகத்தில் உள்ள எளிய மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் யார் பாதுகாப்பு அளிப்பார்கள்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க CM சார்!
விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.76 லஞ்சம் வாங்கும் அவலம்.
உங்க ஆட்சில தான் இது நடக்குது!
இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க
@CMOTamilnadu சார்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அன்னைத் தமிழுக்குத் தன் அழகுமிகுந்த உச்சரிப்பால் புகழ் சேர்த்த கலைத்தாயின் தலைமகன்; வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரங்களை நடிப்பால் கண்முன்னே நிறுத்தியவர்! புரட்சித்தலைவரின் நீண்டகால நண்பர், செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளான இன்று,
நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைத்து, அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு என்ற பெருமிதத்துடன்; திரையுலகின் ஈடுஇணையற்ற அந்த மாபெரும் கலைஞன் நிகழ்த்திய காலத்தால் அழியாத சாதனைகளை இந்நாளில் நினைவுகூர்கிறேன்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி தவெக ஒன்றிய துணைச் செயலாளர் ஜில்லா மணி, தனது கூட்டாளிகளுடன் இணைந்து வயதான முதியவரைக் காரில் கடத்திக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜில்லா மணி, "இது பழைய வீடியோ; யாரோ எனது சமூக வலைதளப் பக்கத்தை ஹேக் செய்துவிட்டு தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்" எனக் கூறுகிறார். குற்றம் எப்போது நடந்தாலும் குற்றம் குற்றம்தான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இவரெல்லாம் ஒரு கட்சியின் நிர்வாகியா?
கமிஷன் கேட்டு மிரட்டுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என ஒட்டுமொத்த சமூக விரோதிகளின் கூடாரமாகத்தான் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. இது 'தூய சக்தி' அல்ல, மாறாக 'துர்நாற்ற சக்தி' என்பது தமிழக மக்களுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரியவருகிறது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்தும்; நடுநிலையுடன் வழக்கை நடத்த CBI வசம் ஒப்படைக்க வலியுறுத்தியும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சி நிர்வாகிகள் ரவுடிக் கும்பலாக மாறி பொதுமக்களையும் வியாபாரிகளையும் மிரட்டுவதுதான் அன்றாட வேலையாகிவிட்டது!
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா நடைபெறும் இடத்தில், ஒரு புனிதமான சூழல் என்றும் பாராமல் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி, மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகிகளின் அராஜகத்திற்குப் பின்னால் இருப்பது யார்? இந்த ரவுடிப் படைகளுக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார்?
சொந்தக் கட்சியினரைக் கூடக் கட்டுப்படுத்தத் திராணியற்ற, நிர்வாகத் திறமையற்ற ஒருவர் முதலமைச்சராக இருப்பது தமிழகத்திற்குச் சாபக்கேடு!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial