ஈழத்தமிழர் அனோஜனுக்கு சவுதி அரசு மரண தண்டனை விதித்திருக்கிறது. காரணம் என்னவென்றால், சமூகவளைதளத்தில் செய்த ஒரு பதிவிற்காக அவருக்கு மரணதண்டனை என தீர்பை வழங்கியுள்ளது.
இசுலாமிய வழிபாட்டை இழிவு செய்ததாக சவுதி அரசு குற்றம்சாட்டி தண்டனை விதித்துள்ளது. கடவுளை பற்றியும், மதத்தை பற்றியும் சண்டை போட்டு சாமானிய மக்களை வதைக்கும் செயல்தானே தவிர, சவுதி அரசுக்கு உண்மையில் இசுலாமிய மதத்தின் மீதான நம்பிக்கையென ஏதும் உள்ளதா என தெரியாது. பாலஸ்தீனத்தில் பலநூறு மசூதிகள் குண்டுபோடப்பட்டு அழிக்கப்பட்டன. இசுலாமியரின் புனிதத்தலமான அல்-அக்சா மசூதியின் மீதும் இசுரேல் தாக்குதல் நடத்தியது, வழிபாடு செய்பவர்களையும் தாக்கி அவமானபப்டுத்தியது. அச்சமயத்திலெல்லாம் அமைதி காத்தது சவுதி அரசு. இன்றளவும் பாலஸ்தீனத்தில் இசுலாமியர்கள் இனபப்டுகொலைக்கு உள்ளாகிறார்கள். ஆயினும் இசுரேலுடன் உறவை வலுவாக வைத்திருக்கிறது சவுதி அரசு. இந்நிலையில் சாமானியர் ஒருவரின் முகநூல்பதிவவு எப்படினொரு மதத்தையோ, நம்பிக்கையையோ இழிவு செய்துவிட முடியும்? இசுரேலுக்கு எதிராக வாய் திறக்காத சவுதி, அனோஜனுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கிறது.
மதத்தை வைத்து அரசியல் செய்யும் எந்த ஒரு ஆட்சியாளர்களும் இதுபோன்று சாமானிய மனிதர்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். ஏழை எளிய மக்களை மதத்தை காரணமாக வைத்து வதைக்கிறார்கள், தண்டிக்கிறார்கள்.
தமிழர்களை காப்பதாக சொல்லிக்கொள்ளும் இலங்கையின் அனுரா அரசு வாய் திறந்து நெருக்கடியை தர முன்வரவில்லை. இந்துக்களை காக்கிறோம் என ஒப்பாறி வைக்கும் மோடி அரசு, சவுதி அரசிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி காக்கவும் முன்வரவில்லை.
இசுலாமிய மதத்தை விமர்சித்தார் என்பதற்காக மட்டுமே இந்துத்துவ அமைப்புகள் முட்டுச்சந்தில் அனோஜனுக்கு ஆதரவாக கூப்பாடு போடுகின்றன.. அவர்களுக்கு ஈழத்தமிழன் மீதும் அக்கறையில்லை, மாறாக, சவுதியின் மீதானவெறுப்பின் காரணமாகவே இதை பேசுகின்றனர். இதே ஈழத்தில் இலங்கை அரசு நூற்றுக்கணக்கான தமிழர் கோவில்களை இடிக்கின்றன, வழிபாட்டு தளங்களை ஆக்கிரமிக்கின்றது. ஆனால் இலங்கை அரசை எதிர்த்து போராட இந்துத்துவ கும்பல்களுக்கு துணிவிருக்காது. மோடி அரசுக்கும், இலங்கை எனும் சுண்டைக்காய் அரசை தட்டிக்கேட்க துணிவிருக்காது. கோவில்களை இடிக்கும் இலங்கையை கண்டு பம்மி பதுங்கும் இந்துத்துவ கும்பல்கள் சவுதி அரசு என்றதும் கூப்பாடு போடுகின்றன..
உலகத்தமிழர்கள் இந்த கும்பல்களின் நாடகங்களுக்கு பலியாகாமல், ஒன்றுபட்டு நின்று மதவெறி கொண்ட சவுதி அரசின் கொலைவெறி தண்டனையை தடுக்க ஒன்றுகூட வேண்டும். இலங்கையில் இருக்கும் சோ-கால்டு சனநாயக இசுலாமியர்கள், ஈழத்தமிழர் அனோஜனை பாதுகாக்க, தனது பங்காளியான சவுதி அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். அனுரா அரசு கைகட்டி வேடிக்கை பாராமல் சவுதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனோஜனை மீட்டிட முன்வர வேண்டும்.
அனைத்து சனநாயக அமைப்புகளின் ஆதரவை திரட்டி மே17 இயக்கம் இந்திய-சவுதி அரசுக்கு அழுத்தம் தர முயற்சிகளை முன்னெடுக்கும்
அனோஜன் எனும் சாமானிய தமிழனை தண்டித்து தனது மதத்தை காக்க இயலாது, மாறாக கொல்லப்படும் பாலஸ்தீனர்களை பாதுகாப்பதன் மூலமாகவே தனது கடமையை சவுதியால் நிறைவேற்ற இயலும்.
#GobackModi - கருப்புக் கொடி போராட்டம்!
சென்னை தி.நகர் பெரியார் சிலை அருகே, பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மே 17 இயக்கம் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினர்.
#GobackModi #PMModi #ChennaiMetro #May17Movement #ThirumuruganGandhi #KalaignarSeithigal
Do you want to know why North Indian journalists are as Dumb as their Sangis?
Check this one out. This guy is a leading journalist in Godi-Media. He is saying UN didn't condemn Germany's oppressive acts on activists. But the reality is different. UN statements, condemning western nation's oppressive actions against activists, never covered in media including Indian media who are lap dog of western /indian capitalists..
UNHRC issued many warnings and statements against EU countries including Germany. No wonder Indian Media never do a fact check before they broadcast news items. You are a Shame to Media world.
Do you want more news items on UN? You want a weblink to the statements,/since you don't know how to google.
Idiotic Indian Journalists
ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களையெல்லாம் 'ட்ரோல்' செய்தால் தன்னை எதிர்க்க யாருக்கும் துணிவிருக்காது என நினைத்த மோடிக்கு வீதியில் பதில் சொல்லி இருக்கிறார்கள் இளைஞர்கள்.
இந்த பாடம் மோடிக்கு மட்டுமல்ல, 'ட்ரோல்' ஆர்மி வைத்திருப்பதாக நினைத்துக்கொள்ளும் அனைத்து சோளக்கொல்லை பொம்மை கட்சிகளுக்கும் சொல்லப்பட்ட செய்தி.
நாளை- (ஞாயிறு) காலை 10 மணிக்கு, கருப்பு கொடியுடன் வாருங்கள். தி.நகர் பஸ் டெப்போ அருகில் இருக்கும் பெரியார் சிலையில் சந்திப்போம், மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்!
'மோடிக்கு கருப்பு கொடி'
தேர்தல் முறைகேடு, நீட் தேர்வு-இந்தி திணிப்பு, மதுரை-கோவை மெட்ரோ மறுப்பு ஆகியவற்றை கண்டித்து, ஆர்ப்பாட்டம்.
அக்-11.
காலை 10:00.
பெரியார் சிலை,
தி.நகர், சென்னை.
#GoBackModi
'டோரதி' திரைப்படம் தமிழ் சினிமாவில் கவனத்திற்குரிய படைப்பாக அமைந்திருக்கிறது. சாதியவாத சமூகம் இயல்பில் ஆணாதிக்கம் மிக்கதாக அமைந்திருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தார்போல் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆணவக்கொலை செய்வதை இயல்பானதாக அணுகும் ஆணாதிக்க சாதியவாத சூழல் பெண்களுக்கு எதிராக எவ்வாறு இயங்குகிறது என்பதை மிக நுணுக்கமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குனார் கார்த்திக் சுப்புராஜ்.. 'இறைவி' முதலாக அவரது கதை சொல்லல் தனித்துவமான கட்டமைப்பை கொண்டதாகவே அமைந்திருக்கிறது.
ஆணாதிக்க சாதிய மனநிலை என்பது எவ்வாறு வெறுப்பு, வன்முறை, நியாயமற்ற மனநிலை, கொடூரம் நிறைந்தது என்பதை ஒரு பகுதியிலும், பெண்களின் உலகம் எவ்வாறு இதற்கு நேரெதிராக அன்பினாலும், சகிப்புத்தன்மையாலும், அரவணைப்பினாலும் சூழ்ந்ததாக அமைகிறது என மறுபகுதியிலும் நம்மிடம் பேசுகிறார்.
உடுமலை சங்கரையும், திருநெல்வேலி கவினையும், திருச்செங்கோடு கோகுல்ராஜையும் கொ**லை செய்ய முனைந்த மனதின் விகாரத்தையும், மனிதத்தன்மையற்ற உளவியலையும் இதைவிட சிறப்பாக காட்சிப்படுத்த இயலுமா என தெரியவில்லை.
இந்த சாதிய-ஆணாதிக்க வன்முறை சூழலுக்குள்ளாக இவற்றை எதிர்க்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டவன் எவ்வாறாக தனக்கான உலகை படைத்துக்கொள்கிறான் என்பதை 'டோரதி' விவாதிக்கிறது. ஒரு பெண்ணாக, சகோதரியாக, தாயாக, சகபயணியாக அரவணைப்பையும், அன்பையும் வெளிபப்டுத்தும் ஒரு சமூகத்தின் மீதான நேசத்தோடு படத்தை இறுதி செய்கிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வினாலும், அவர் கையாளும் சமூக-அரசியல் மீதான வெறுப்பினாலும் அவரது படைப்புகள் அவதூறுகளுக்குள்ளாகின்றன. அவரின் படைப்பு காத்திரமான விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. அந்த விவாதத்தை உருவாக்கிய வகையில் அவர் வெற்றியடைந்திருக்கிறார். அவரது 'டோரதி' திரைப்படத்தை நீங்கள் விரும்பலாம், வெறுக்கலாம் ஆனால் அதன் மீதான விவாதத்தை தவிர்க்க இயலாது. வெறுப்புகளற்று விவாதியுங்கள். விவாதங்களே பேருண்மைகளை கைக்குள் கொண்டு வருகின்றன. கவின், சங்கர், கோகுல்ராஜ் என நீளும் பட்டியல் குறித்த அக்கறையும், கவலையும் கொள்ளும் பட்சத்தில் இப்படம் உங்களுக்கு அணுக்கமாக அமையும்.
இளையராஜா எனும் நதி நம்முள் நுழைந்து பேரருவியாய் கரைகிறது.
புதுமுக நடிகர்களாக தெரியாத வண்ணம், நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காட்சிப்படுத்தல், கதை சொல்லல், ஆக்கம் ஆகியவை புதிய எல்லையையும், திரை அனுபவத்தையும் நமக்களிக்கிறது. திரைபப்டத்தை அவசியம் காணுங்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்ஜுக்கு வாழ்த்துகள் .
@karthiksubbaraj
இந்திய அரசின் அன்றய பிரதமர் ராஜீவ்காந்தியின் அதிகார பெருமிதத்தையும், அண்டைநாடுகள் மீதான இராணுவ நடவடிக்கையையும் முடக்கிப் போடும் போர் முழக்கத்தை செய்தவர் லெப்டினன்ட் கேணல் திலீபன்.
இந்திய அரசும், அதன் இராணுவமும் அண்டைநாடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் தலையிட்டு தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளலாம் எனும் அதிகார போதையை ராஜீவ்காந்தி தலையில் ஏற்றி வைத்தார்கள் பார்ப்பன அதிகாரிகள். இந்திரா காந்தியை போல தாமும் புகழ்பெற வேண்டுமென கனவு கண்டார் ராஜீவ்காந்தி. இந்திரா காந்தியின் நிலைப்பாடுகளை பிரதிபலித்த அதிகாரிகளை விட்டுவிட்டு, தமக்கு சாதகமான ஜால்ரா அதிகாரிகளைக் கொண்டு வெளியுறவு கொள்கையை கையிலெடுத்தார்.
இச்சமயத்தில் சிங்களப் படைகளை முற்றிலும் அழித்துவிடும் நிலையை ஈழத்தமிழ் போராளிகள் அமைப்புகள் பெற்றிருந்தன. வி...புலிகளின் இராணுவ யுக்திகளும், கெரில்லா தாக்குதல்களும், சமரசமற்ற ஈகமும் சிங்களப்படைகளை பின்வாங்க வைத்திருந்தன. தமிழர் போராளி குழுக்களின் எண்ணிக்கை, சிங்களப்படைகளை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது எனும் நிலையில் தமிழர் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. திம்பு பேச்சுவார்த்தையில் ஒற்றுமையாக இயங்கிய போராளிக்குழுக்கள் சிங்களத்திடம் பேரம்பேசும் நிலையை அடைந்திருந்தன.
தமிழர்களின் இராணுவ வல்லாண்மை சிங்களத்தை மட்டுமல்ல, தமிழ்நாட்டு பார்ப்பனர்களை அச்சுறுத்தியது. இலங்கை அரசியல் தமது கைகளை விட்டு நழுவுகிறது என்பதை உணர்ந்தார்கள். இச்சமயத்தில்தான் ராஜிவ்காந்தி போன்ற ஒரு 'ராஜாவீட்டு கன்றுக்குட்டி' போல அனுபவமற்ற, மேலாதிக்க உணர்வு கொண்டவர் இந்தியாவின் பிரதமராகிறார். இந்திரா காந்தியின் மகன் என்பதைத் தவிர வேறு தகுதிகள் அவருக்குக் கிடையாது. இவரை தமது கைகளுக்குள் கொண்டு வந்தார்கள் தென்னிந்திய பார்ப்பனர்கள்.
யாழ்ப்பாணம் வி.புலிகளின் கைகளுக்குள்ளாக வந்தது. சிங்களப்படையின் இராணுவ நகர்வுகள் உடைக்கப்பட்டன. சிங்களப்படைகளை விட அதிகபட்ச ராணுவ நுணுக்கம் வாய்ந்தவர்களாக புலிகள் இருந்தனர். அவர்கள் சிங்களத்தை வீழ்த்தி முன்னேறிக்கொண்டிருந்தனர். இந்த சூழலில் பார்ப்பன அதிகாரிகள் தமது சூழ்ச்சி வலையை உருவாக்கினர். இந்திய அதிகாரிகள் இலங்கையின் கொடுங்கொன்மை அதிபரும் சிங்கள வெறியருமான ஜெயவர்த்தனாவுடன் கூட்டு அமைத்தனர். இந்திய பார்ப்பன அதிகாரிகளுக்கு ஏராளமான நிதி, நகைகளை கொட்டிக்கொடுத்தார் ஜெயவர்த்தன. குறிப்பாக ருமேஷ்பண்டாரி, தீக்சித் போன்ற இலங்கைக்கான இந்திய அதிகாரிகள் விலைபோயினர். இவர்கள் பார்ப்பனர்கள்.
இந்த அதிகாரிகள் ராஜீவ்காந்தியின் குழந்தைத்தனத்தை பயன்படுத்தி முதலில் மாலத்தீவினை காக்கும் வகையிலான படை நகர்வை செய்தார்கள். மறுபுறத்தில் தமிழர் குழுவில் ஒரு குழுவான ப்ளாட் அமைப்பை மாலத்தீவு மீது தாக்குதல்.நடத்த வைத்து, அந்த தாக்குதலை இந்திய ராணுவத்தை கொண்டு அடக்கி ராஜீவ்காந்திக்கு புகழ் கிடைக்க வழிவகை செய்தார்கள். இந்திய பார்ப்பனர் சூழ்ச்சியில் சிக்கிய ப்ளாட் இயக்கம் நெருக்கடிக்குள்ளானது. இதேபோல டெலோ அமைப்பை கொண்டு சக அமைப்புகள் மீது தாகுதல் நடத்தினார்கள். போராளிகளுக்குள்ளாக சண்டையை மூட்டிவிடும் காலங்காலமாக செய்துவரும் பார்ப்பன சாணக்கியத்தனத்தை செய்தார்கள் அதிகாரிகள். இவ்வாறான குழப்பத்திற்கு ப்ளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டிபி ஆகிய அமைப்புகள் பலியாகின. புலிகள் மட்டுமே தொடர் தாக்குதலை சிங்களத்தின் மீது நடத்தி வந்தார்கள். இதுபோன்ற பிற அமைப்புகளை புலிகளை நோக்கி ஏவினார்கள். இவ்வாறான குழப்ப சூழலை வெகுவிரைவில் உருவாக்கினார்கள் இந்திய பார்ப்பன அதிகாரிகள்.
இந்நிலையில் யாழ்பாண முற்றுகைக்குள்ளாக இருக்கும் தமிழர்களை காக்கிறோம் எனும் பெயரில் இந்திய ராணுவத்தைக் கொண்டு தலையீடு செய்தார்கள் பார்ப்பன அதிகாரிகள். பின்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்குவதாகவும் அதில் தமிழர் சிக்கலை தீர்ப்பதாகவும் போலியாக நாடகம் நடத்தினர். இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க இந்திய-இலங்கைக்கான இராணுவ-பொருளாதார ஒபப்ந்தம். இதில் தமிழர் நலனோ, விடுதலையோ இடம்பெறவில்லை. இந்த ஒபப்ந்தத்தை இந்திய பார்ப்பன அதிகாரிகள், இந்திய தேசிய கட்சிகளான காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகளின் அழுத்தத்தில் புலிகளை தவிர பிற போராளிகள் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஒருகட்டத்தில் பலவேறு கோரிக்கைகள், வாக்குறுதிகள் அடிப்படையில் புலிகள் சமாதான நிலைக்கு வந்தார்கள், ஆயுதங்களை ஒபப்டைத்தார்கள். இதனையடுத்து இந்திய ராணுவத்தை தரையிரக்கினார் ராஜீவ்காந்தி. இந்தியாவின் முன்னாள் அதிகாரிகள் எ.பி.வெங்கடேஸ்வரன், ஜி.ஜி.பார்த்தசாரதி போன்ற இந்திரா காந்தியின் ஆலோசகர்கள் இந்த நகர்வை கடுமையாக எதிர்த்த போதும், ராஜீவ்காந்தியால் நியமனம் செய்யப்பட்ட பார்ப்பனர்கள் ராணுவ நகர்வை சாத்தியப்படுத்தினார்கள். தமிழ்நாட்டின் பெரும் பார்ப்பன கும்பல் ..(தொடர்ச்சி)
தமிழீழத்திலிருந்து தமிழர்களின் துயரங்களையும், தமிழருக்கான நீதிகளை வென்றெடுக்க தமிழ்நாட்டின் பங்களிப்பையும் கோரி 'பெண்கள் அமைப்பினர்' நேரில் வந்து சந்தித்தனர். தமிழினப்படுகொ*லைக்கான சர்வதேச விசாரணைக்காகவும், தமிழர்களின் அரசியல் கோரிக்கையான 'பொதுவாக்கெடுப்பை' வலியுறுத்தியும் தமிழ்நாடு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனும் கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழ்*ழத்தின் பலவேறு மாகாணங்களான வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதியிலிருந்து பெண் ஆளுமைகள் வருகை தந்திருந்தனர்.
இங்கிலாந்து நாட்டிலிருந்து விடுதலை பெற ஸ்காட்லாந்து நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு வழிமுறையைக் கொண்டு பொதுவாக்கெடுப்பை வலியுறுத்தவும் தமிழ்நாடு கடந்தகாலத்தில் செயல்பட்டதைப் போன்று ஒற்றுமையுடனும், வலிமையுடனும் தமிழ்*ழ்ஃ மக்களோடு தோளோடுதோள் நிற்குமளவு ஆதரவு அரசியலை வலுப்படுத்தி, இந்திய அளவில் மாற்றத்தைக் கொண்டுவர வலியுறுத்தினர். இது தொடர்பில் தமிழ்நாட்டின் தலைவர்களை சந்தித்தும் வருகின்றனர். இவ்வகையில் மே17 இயக்கத் தோழர்களையும் சந்தித்தனர்.
தமிழ்*ழ விடுதலைக் கோரிக்கையில் உறுதிப்பாடோடு இயங்கும் மே17 இயக்கம் எப்போதும்போல தமது வலிமையான மக்கள்திரள் நடவடிக்கைகளையும், சனநாயக போராட்டங்களையும் முன்னெடுக்குமென வாக்குறுதியளித்தோம்.
மொழிப்போர் ஈகியர் தோழர் சிவா திலீபன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நடைபெறூ வருகிறது. தோழர் சிவா திலீபனின் இணையர் தோழர் இசைமொழி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து வருகிறார். சிவாவின் உற்றநண்பர்கள், உறவினர்கள் அவரின் நினைவுகளை பகிர்ந்து, தாமும் அரசியல்பணி மேற்கொள்வோமென உறுதி கூறிவருகின்றனர். இருந்தும் அரசியல்படுத்தினார், தனது மறைவிலும் தோழமைகளை அரசியல்படுத்தி வருகிறார். எனக்கு இது நெகிழ்வான நாள் இன்று.
தோழா சிவா திலீபனே சென்று வா, உமது இலட்சியங்களை நெஞ்சிலேந்தி பயணிக்கிறோம்.
இன்று எம் தோழனின் பிறந்தநாள். எங்கள் அனைவருக்கும் பிறந்தநாளை முதல்நபராய் சொல்லிக்கொண்டிருந்த தோழன் எங்களுடன் இல்லை. ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அன்பும், நேசமும் பாராட்டும் குணம்.அவ்வளவு எளிதாய் யாருக்கும் வாய்த்திடாது. ஆனால் அது சிவாவுக்கு எளிதாய் கைவந்தது. துணிந்து செயல்படுபவருக்கு, இத்தனை இனிமையான குணமிருக்குமென எவராலும் கணிக்க இயலாதவாறு தோள்மீது கைபோட்டு பழகும் எளிமையின் தோழன். எடுத்தபணியை முடிக்காமல் விடாப்பிடியாக இயங்குபவர். அளவிலா பற்று தமிழ் மீதும், இடையரா போராடும் குணம் தமிழருக்குமாய் என வாழ்ந்த மனிதன் அவர். ஒவ்வொரு நாளும் அவரது நினைவுகளுடன் கடந்து செல்கின்றன. இன்று பிறந்தநாள் காணும், வயதில் எங்களில் மூத்தவர், சுறுசுறுப்பில் எங்களில் இளையோன், இளம் தோழர்களின் தோழன் சிவா திலீபன் என்றென்றும் எம்முடன்.
மொழிப்போரில் புதிய அத்தியாயத்தை எழுதிச் சென்றிருக்கிறார். எவரது அங்கீகாரத்திற்கும் ஆட்படாத பெருநெருப்பாய் வீசிச்சென்றிருக்கிறாய். செயல்வீரனாய் பூத்து, விண்மீனாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறாய். சமகால அரசியல் தளத்தில் இருந்த தேங்கிப்போன மொழியுரிமைப் போருக்கு உரமூட்டிருக்கிறாய் எம் தோழனே. என்றென்றும் உன் புகழ் நிலைத்திருக்கும். உன் நினைவையேந்தி மொழிப்போரை தொடருவோம்.
நாட்டை தூய்மைப்படுத்தி நோயிலிருந்து பாதுகாக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்ய கஜனாவில் பணமில்லை என்கிறீர்கள், ஆனால் இந்த ஏழை தொழிலாளர்களுக்கு உதவாத தலைமைச் செயலகத்திற்கு ரூ1200 கோடியில் புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்குகிறீர்கள். புதிய கட்டிடத்திற்கு ஒதுக்கும் நிதியில் கிள்ளிக்கொடுத்தால் தூய்மைபப்ணியாளர்கள் வாழ்வு சிறக்கும். அதிமுக, திமுக அரசுகளின் வழியில் தவெக.
நாளை -சனிக்கிழமை 05-09-2026,/நடக்க இருக்கும் மிகவும் அவசியமாக நாம் பங்கேற்கவேண்டிய கருத்தரங்கு. தமிழ்நாடு கல்வித்துறை எதிர்கொள்ள இருக்கும் மிக மோசமான நெருக்கடி குறித்த அரங்கு. இதில் மாநில -ஒன்றிய அரசின் உறவுகள் - மாநில உரிமை/சுயாட்சி குறித்த ஆய்வுசெய்துவரும் வல்லுனர் குழுவின் பொறுப்பாளரும், வரலாற்று அறிஞர் பேராசிரியர் கருணானந்தன் அவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
இடம் : அண்ணா நூலகம், சென்னை
நேரம் : காலை 10:30 முதல்
இன்று மாலை தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வு பெரியார்திடலில் நடக்கிறது... தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தும் ஓஜி-தமிழாவின் 40ம் நாள் போராட்டம் தாயகத்தில். தோழமைகளை ஆதரிப்போம்!