"தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" எனும் அருள்மொழியை வழங்கி சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த தினம் இன்று.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ��ொடர்ந்து போராடிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம். #AyyaVaikundar
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த செல்வி.காவியா பக்கிரிசாமி அவர்கள், துருக்கி நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து போட்டிக்கான இந்திய மகளிர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்ச���யளிக்கிறது.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்ததன் மூலம் இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் செல்வி. காவியா பக்கிரிசாமி அவர்களின் வெற்றிப் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைக்கும் மக்களின் உயிர் நாடியாய் இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதோடு, மே முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடிய தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தாய்மொழி மற்றும் சுயமரியாதை சமதர்ம கொள்கையில் தளராத உறுதி கொண்டவராக திகழ்ந்த சிங்காரவேலர் அவர்களின் சிந்தனையான மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்ற���ப்புள்ளி வைக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆர்.கே.நகர் தொகுதியில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று நடந்த கழக செயல்வீரர்கள் கூட்டம் பற்றிய செய்தி மாலை மலர் @maalaimalar மற்று���் மாலை முரசு @MalaimurasuTv செய்தித்தாள்களில்...
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
#aiadmk #aiadmk_chn #ADMK_CHN #royapurammano
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும�� செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அதே விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் பூரண உடல்நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஆலை உரிமையாளர்களாலும், பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரும் விபத்துக்களை அலட்சியமாக எதிர்கொள்ளும் அரசு நிர்வாகத்தாலும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இனியாவது ஆபத்து நிறைந்த பட்டாசு தொழிலில் உரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு அத்தொழிலை மட்டுமே வாழ்வாத���ரமாக கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
உதகை அருகே கட்டுமான பணியின் போது ���டுப்பு சுவர் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அதே விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு ��ிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். @actorvijay@tvkvijayoffl
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த��� ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று ஓராண்டைக் கடந்த நிலையிலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu
வழக்கறிஞர் சேவையில் 50 ஆண்டு பொன் விழா காணும் என்னுடைய தந்தையும், அமமுகவின் தலைவரும், என்னுடைய அரசியல் குருவுமான
திரு.சி.கோபால்https://t.co/eLv7hLv5wt.,B.L.,.Ex.M.P.,Ex.M.L.A.,
அவர்களை வாழ்த��த வயதில்லை வணங்குகிறேன்.
#Cgopal
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrict
#HbdTTVDhinakaran தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகள் இல்லாத நிச்சயமற்ற சூழலில், எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை விதைப்பதில் டிடிவி தினகரனுக்கு முக்கிய பங்குண்டு... #TTVDhinakaran#AMMK
#HbdTTVDhinakaran தன்னை சுற்றி கட்டமைக்கப்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர், அரசியல் களத்தில் தனக்கான இடத்தை, தானே ��ெதுக்கி கொண்டவர். வாழ்த்துக்கள் அண்ணா …#TTVDhinakaran #AMMK