நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, கா��்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலை��ம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் ��ழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழ���்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் ��னது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்��� இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களின் அந்த நேர்மையும், துணிவும் தான் அசைக்க முடியாத அணிகலன்கள்..
அதனால் தான் அந்த தன்மானம் உள்ள தலைவனின் பின்னால் நிற்கிறேன்..
#Annamalai
மக்கள் தலைவர், வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய #WeTheLeaders இயக்கத்தின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் வகையில், இன்று மத்திய சென்னை அண்ணாநகர் அண்ணா வளைவு அருகே பொதுமக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து இனிப்புகள்
#Annamalai#WeTheLeaders#AnnaNagar#CentralChennai
தமிழர் தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் தோன்றிய வீரன் தீரன் சின்னமலை போல்
தேசிய தெய்வீக செயல்வீரராக திகழும் எங்கள் நாயகன் அண்ணாமலைக்கு
இந்து மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்!
அன்புடன்,
அர்ஜுன் சம்பத்
தென்னிந்தியாவின் ஆற்றல்மிகு ஆளுமைக்கு 👑 தன்னிகரில்லா தலைவருக்கு💥இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
சாமானிய மக்கள் கொண்டாடும் ஒரே தலைவர் அண்ணாமலை அண்ணா 🔥
#HBDAnnamalai#SinghamAnnamalai#Annamalai
இவர் டூப்புப் போட்டு அரிதாரம் பூசி திரையில் நடித்த சினிமா நடிகன் அல்ல...
மக்களின் அன்பைப் பெற்ற ஆளுமை நிறைந்த தமிழகத்தின் நாள���ய நம்பிக்கை...💯🔥
#Annamalai
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி��ை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு எங்களது நன்றி. மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பான செயல்பாட்டி��்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
கள்ளச்சாரம், கஞ்சா என போதைப்பொருள்களின் புகழிடமாக தமிழ்நாட்டை மாற்றிய திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம்..! மாற்றத்திற்கான வழிகாட்டி NDA கூட்டணியை ஆதரிப்போம்..!
Time to oust the DMK–Congress alliance that has turned Tamil Nadu into a haven for narcotics and illicit liquor.
Let us rally behind the NDA alliance for real change and progress!