திமுகவை நாங்கள் ஆதரிப்பது பணத்துக்காகவோ பதவிக்காகவோ அல்ல... அது ஒரு நன்றிக்கடன்....
திமுகவால் தான் படித்தோம்...
முன்னேறினோம்... நிமிர்ந்தோம்...
சமதர்மம் அடைந்தோம்... வாழ்ந்தோம்... வாழ்வோம்...
🙏🖤❤️
#DMK_BLOOD#Thalaivar_Prabakaran@mkstalin@Udhaystalin@muthamil38
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத��திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மைய���க இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் ��லைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன�� நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர்,மற்றும் சிவகாசி எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும���, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். மகளிர் உரிமைத் தொகையும், விவசாயிகளின் நலனுமே எங்களின் அடையாளம்; வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
"திராவிட மாடல்" என்பது வெறும் முழக்கமல்ல; அது ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் நிகழ்ந்திருக்கும் புரட்சிகரமான மாற்றம்!
ஈரோடு மற்றும் கோவையில் அலைமோதிய மக்கள் கூட்டமே இந்த நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ். இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் வளர்ச்சியின் சுடர் ஒளிவீசுகிறது.
இந்த வளர்ச்சிப் பயணம் தடைய��ன்றித் தொடர... வெற்றிகரமான 2.0 ஆட்சிக்காக...
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#VoteForDMK
2026 தேர்தல் டெல்லி vs தமிழ்நாடு தேர்தல்..!!
அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நான் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றேன், முத்தமிழறிஞர் கலைஞர் ��ிறந்த திருவாரூரில் கழகத் தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜக போட்டியிடும் மயிலாப்பூரில் ஆரம்பித்தார், இதில் இருந்தே தெரிகிறது எடப்பாடியின் கொள்கைத் தலைவர்கள் மோடியும், அமித்ஷாவும் தான் என்பது.
மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு சாதனைக���ைப் படைத்து தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருவாரூரில் தன் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்!
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு செழிக்கட்டும்!
#VoteForDMK
வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் த��்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலைநோக்கு இல்லை,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.
இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக ��ிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.
#ModijiWhereIsLPG #LPGCylinderCrisis
உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்க���ம் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin
மேற்கு மண்டலமே அதிரும் வகையில் கோவையில் திரண்டிருக்கிறது கொள்கைப் படை! The OG Dravidian Stock! பெரியார், அண்ணா, கலைஞரின் வழியில் களமிறங்கும் கருப்பு-சிவப்புப் படை.
இன்று கோவையில் சந்திப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
பெண்கள் வெறும் பயனாளிகள் அல்ல, அவர்கள் இந்த மாநிலத்தின் பங்குதாரர்கள் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படும் கழகத் தலைவர் திரு @mkstalin அ��ர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற புதியதோர் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எழும்பூர், வேடசந்த��ர், ஜெயங்கொண்டம், மதுரை தெற்கு, விக்கிரவாண்டி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தி.மு.கழகத்தின் பெருஞ்சேனை இன்று திருப்பத்தூரில் ஒன்று கூடுகிறது. வடக்கு மண்டல வாக்குச்���ாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்!
#Youth4DMK2026 @dmk_youthwing