நாட்டில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பிற்கு ஆர்பிஐ (RBI)செலவு செய்த பணம் 13000 கோடி. ஆனால் முடிவில் 99.3 சதவீதம் பணம் வங்கிகளுக்கே திரும்பி விட்டது. இந்தப் படுதோல்வி முன்னெடுப்பால் இந்தியாவின் மொத்த உற்பத்தி 1.5 சதவீதம் ஆக குறைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு வரிசையில், மருத்துவத்திற்கு செலவிடவும் முடியாமல் உயிர் இழந்தனர். தினசரி கூலியை நம்பி இருந்த கோடிக்கணக்கான நடுத்தர/ஏழை மக்கள் பல வாரங்களுக்கு மேலாக தங்கள் ஊதியங்களை பெற முடியாமல் நடுத்தெருவில் திண்டாடினார்கள்.
எது எப்படி இருந்தாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முலம் பெரும் நிறுவனங்களின் நன்கொடையை பெற்று இந்தியாவின் முதல் பண��்கார கட்சியாக மாறியதற்கும்(சொத்து மதிப்பு-6046.81 கோடி), கருப்பு பணத்தை ஒழித்து சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்களுக்கு லட்ச லட்சமாக கொடுத்தற்கும் மோடி அவர்களுக்கு இந்த வாக்குறுதிக்கான பத்தாம் ஆண்டு நினைவு நாள் வாழ்த்துக்கள். #BJPFailsIndia #GoBackModi #BlackMoney #IndiaFightsCorruption
நீங்கள் துவங்கிய ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் 95 சதவிகிதம் தோல்வியில் முடிந்து விட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் பேட்டி அளித்திருக்கிறார். இது உண்மையா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் அவர்கள் இந்த அவையிலே சொல்ல வேண்டும்.
அதேபோல முன்னோர்கள் சேர்த்து வைத்தச் சொத்தை எல்லாம் ஊதாரிப் பிள்ளை தொலைப்பதைப் போல, பிஎஸ்என்எல் 4G சேவையை தராமல் சாகடித்தது யார்? ஏர் இந்தியாவை தனியாருக்குத் தூக்கிக் கொடுத்தது யார்? எல்ஐசி வங்கி உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவங்களையும் தனியாருக்குத் தூக்கிக் கொடுக்கச் சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
மனித உரிமையைப் பற்றி, மாநில உரிமையைப் பற்���ி, மாநிலங்களுக்கானப் பங்கீடு பற்றி இந்த வெள்ளை அறிக்கை மிக மௌனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கசக்கிப் பிழைக்கிற ஒரு கொள்கையை நீங்கள் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என்று பேசினால் பிரதமரே சொல்கிறார், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலே பிரிவினையை உருவாக்குகிறீர்கள் என்று. நாங்கள் பிரிவினையை உருவாக்கவில்லை. குஜராத் முதல்வராக இருந்த பொழுது நீங்கள் ��ன்ன பேசினீர்கள் என்ற அந்தக் காணொளியை இன்னொருமுறை பார்த்து விட்டுப் பேசுங்கள்.
இந்தியாவினுடையக் கூட்டாட்சியை சிதைக்கிற உங்களுடைய ஆயுதத்திற்காக இந்த நாட்டின் ஒற்றுமையை சிதைக்க முயலாதீர்கள். நீங்கள் கைவிட்ட நிறுவனங்களைக் கேரள அரசு மீண்டும் எடுத்து நடத்துகிறது. இது ஒன்றிய அரசுக்கு அவமானமாகத் தெரியவில்லையா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்
#ParliamentElection2024 #Election2024 #WhitePaper
சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள். அதேபோலத்தான் சில கட்சிகளும்...
தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் ��ல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மை பற்றி, வறுமையைப் பற்றி பேசினால் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள்.
நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள்,
நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள்.
கடந்த காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை. 2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால் இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்பொழுது பத்து ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டிருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளம்.
#ParliamentElection2024 #WhitePaper
பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசி உள்ளீர்கள்... நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையிலே இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வரைபடத்தை நீங்கள் ஏன் தவறவிட்டீர்கள்? சமையல் கியாஸ் விலை உயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா?
10 ஆண்டுகள���ல் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திருக்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? யமுனையின் கரையிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் இதற்கும் காரணமா?
நீங்கள் யோசித்துப் பாருங்கள், கார்ப்பரேட்டுகளின் வரி 2016 ஆவது ஆண்டு 33 சதவீதம் இருந்தது. உங்கள் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் வரி 22% மட்டுமே. 11% கார்ப்பரேட்டுகளுக்கு குற��த்து இருக்கிறீர்கள். 1% கார்ப்பரேட் வரி 50,000 கோடி எனில் 11% என்றால் எத்தனை ஆயிரம் கோடி என்று நிதி அமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா?
மக்களுக்குக் கொடுத்தால் அது சலுகை, மக்களுக்கு கொடுத்தால் அது இலவசம். கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத்தொகை. உங்கள���ு அகராதியை இந்த நாடு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
#Parliament #Elections2024 #WhitePaper