தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' திரு.பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அன்னாருக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டுடியோக்களுக்குள் முடங்கியிருந்த தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு ஏற்ப வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்ற பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களையே சாரும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு
Young Democrats State Youth Assembly rally in Thiruvananthapuram, Kerala. The focus must be a strong demand for #JusticeForNithinRaj. Keep it urgent, impactful, and include a call-to-action for people to share and raise awareness.
#justice4nithinraj#youngdemocrats
கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல்! - SDPI கட்சி கடும் கண்டனம்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்டச் சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆகக் காரணமாகின்றன. வெறும் சட்டப் புத்தகங்களால் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற புதிய அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள் (@TVKVijayHQ) நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் பதிலளித்தார். "பழைய திட்டங்கள் தொடரும்; ஆலோசனைகள் ஏற்கப்படும்" என்கிற அவரது நாகரிகமான அணுகுமுறை, தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலரும் நம்பினர்.
ஆனால், சட்டமன்றத்தில் அவர் காட்டிய அந்த கண்ணியம் சில மணிநேரங்களிலேயே மறைந்துவிட்டது. வீடு திரும்பியவுடன் அவர் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சியினரை "புளித்துப்போன வாதம்", "ஏகாம்பரம்" என ஏளனமான சொற்களால் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற விவாதங்களுக்கு அங்கேயே பதிலளித்து முற்றுப்புள்ளி வைக்காமல்,வீட்டுக்கு வந்து அறிக்கை வாயிலாகக் கோபத்தை வெளிப்படுத்துவது முதிர்ச்சியான நடவடிக்கை அல்ல. குறிப்பாக, கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு குறித்த முதல்வரின் அறிக்கை நயநாகரிகமான ஒன்றல்ல.
சபையில் ஒரு முகத்தையும், அறிக்கையில் வேறொரு முகத்தையும் காட்டுவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். பேரறிஞர் அண்ணாவின் கனிவைப் பின்பற்றுவதாகக் கூறும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்துப் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது இது போன்ற 'அறிக்கைப் போர்களை' அல்ல; மாறாக ஆக்கப்பூர்வமான பணிகளையே என்பதை உணர்ந்து, முதல்வர் அவர்கள் தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.
SDPI strongly condemns the repeated incitement to hatred against Muslims by Assam CM Himanta Biswa Sarma. The now-deleted BJP Assam video “Point Blank Shot” showing symbolic firing with captions like “No Mercy” and “Go to Pakistan” marks a dangerous new low in political discourse
As Advocate R. Hassan Faizy (Tamilnadu) has been elected as National Organising committee member of Young Democrats, he was felicitated at welcome meet conducted by SDPI trichy District Committee of tamilnadu.
#youngdemocrats#SDPI#YouthLeadership