@niranjan2428 வெளுத்தெல்லாம் வாங்கவில்லை. திமுகவிற்கு செய்த துரோகத்துக்கு மனதில் ஏதோ ஒரு மூலையில், குற்ற உணர்ச்சி அமர்ந்து இருக்கும். அது பல நாள் சென்று தீடிர்னு, இடம், பொருள், நேரம் பாராமல் வெளிப்படும். அது தான் திருமாவிடம் நடந்தது. இதற்கு ஆங்கிலத்தில் Delusional guilt என்று பெயர்.
முதல் வாரம்
மின்தடை வதந்திங்க
2வது வாரம்
திமுக ஆட்கள் பன்றாங்க
3வது வாரம்
Hard Disk திருடிட்டாங்க
4வது வாரம்
பியூஸ் கேரர் எடுத்து போய்டுறாங்க
அருமையான மாற்றம் 👌👌
கடைசி வரை Current கிடையாது முடிஞ்சதை பண்ணிக்கோ என்பதே சுத்தி சுத்தி சொல்றாங்க
இந்த லாட்டரி கிங் மார்ட்டின் குடும்பத்தில் மீதுள்ள வழக்குகளை இணையத்தில் தேடி படிக்கையில் திக்கென்று இருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்தவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு எல்லாமே அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு செய்ததாக தான் இருந்தது. மாற்றம் என்ற பெயரில் ஒரு professional criminal syndicate கையில் ஆட்சியை கொடுத்து வைத்து தொலைத்திருக்கிறார்கள் தமிழர்கள். ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் இருக்கிற வழக்குகள் ஒரு வரியில் கீழே. இதில் மற்றவை கூட பண மோசடி, fraud வழக்குகள் தான். இறுதியாக இருக்கிற குற்றம் மிகவும் அபாயகரமானது.
சாண்டியாகோ மார்ட்டின் (Santiago Martin): சிக்கிம் அரசுக்கு ₹4,500 கோடி இழப்பு ஏற்படுத்திய லாட்டரி மோசடி மற்றும் அதன் மூலம் ஈட்டிய ₹910 கோடி சட்டவிரோத லாபத்திற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் வழக்குப் பதியப்பட்டு, ₹1,100 கோடிக்கும் மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
லீமா ரோஸ் மார்ட்டின் (Leema Rose Martin): 2012-ஆம் ஆண்டு சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ₹7.20 கோடி கணக்கில் வராத பணத்தை நியாயப்படுத்துவதற்காக போலி சொத்து ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, மீண்டும் அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கை எதிர்கொள்கிறார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (Jose Charles Martin): ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இவர் மீது பணமோசடி (PMLA), ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன; மேலும் இவரது நிறுவனத் தொடர்புடைய வழக்கில் ₹457 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
ஜோஸ் டைசன் / டேசன் மார்ட்டின் (Jose Tyson / Dayson Martin): சமீபத்தில் இவரது கட்டுமான நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனைகளில் ₹12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் விசாரிக்கப்படுகிறார்.
ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna): சட்டவிரோத ஆற்று மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளிலும், மாமனார் மார்ட்டினின் தொடர்புடைய இடங்களில் ₹12.41 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி மோசடி சோதனைகளின் கீழும் அமலாக்கத்துறையின் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
டெய்ஸி மார்ட்டின் (Daisy Martin): ஃபியூச்சர் கேமிங் மற்றும் பல்வேறு மார்ட்டின் குழும நிறுவனங்களில் இயக்குனராக உள்ள இவர் மீது, அக்டோபர் 2023-ல் லாட்டரி மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை (IT) வழக்குகள் பதியப்பட்டு, அந்த விசாரணையை கொல்கத்தாவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி. ஜான் பிரிட்டோ (P. John Britto): லீமா ரோஸ் மார்ட்டின் சகோதரர். இலங்கைக்கு கடல்வழியாக ₹108 கோடி மதிப்பிலான ஹாஷிஷ் (99 கிலோ) மற்றும் ₹150 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் (37.6 கிலோ) என மொத்தம் ₹258 கோடி போதைப்பொருள் கடத்திய சர்வதேச கடத்தல் வலைப்பின்னலின் முக்கிய மூளையாக செயல்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்பட்டு வருகிறார்; மேலும் இதற்கு முன்பாக 2011-ல் ₹2.45 கோடி நிலத்தகராறில் பெங்களூருவில் ஒரு வழக்கறிஞரை கடத்தி தாக்கிய வழக்கிலும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
சரக்கைவிட இந்த மேட்டர் அதிகமா தலை சுத்த வைக்குது..
"மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு பெட்டிக்கு கட்சி நிதி என மாதம் 100 கோடி வீதம் வருடத்திற்கு 1200 கோடி வாங்கினார்கள்"
விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் இந்த தொகையை கேட்க மாட்டோம்" என்று 'சொன்னதாக' ஒரு முன்னணி தொலைக்காட்சியே செய்தி வெளியிடுகிறது.
பெட்டிக்கு லஞ்சம் என்கிற விஷயத்தில், அது நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம். தொகை வேண்டுமானால் வேறுபடலாம்.
இதுவரை ஓக்கே.
ஆனால் "இந்த மாதாந்திர லஞ்சத் தொகையை அரசாங்கத்தில் சேர்ப்போம். இதன் மூலம் வருடத்திற்கு 1200 கோடி ரூபாய் கிடைக்கும்" என்று திரும்பத் திரும்ப அலைமோத வைக்கும் செய்திகள் தான் சினிமா உதார்தன பாணியை காட்டுகின்றன.
முந்தைய ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்கி இருந்தால் அது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்புறம் லஞ்ச தொகை அரசு கஜனாவில் சேர்க்கப்படும் என்றால், அதுதான் எப்படி என்று புரியவில்லை.
லஞ்சம்னு எழுதி அரசாங்க கணக்கில் வரவு வெச்சி கவர்மெண்ட்டே லஞ்சம் வாங்குனதா புதுப்பாதை போடுவாங்களா?
அப்புறம் கம்பெனிகாரங்களும் அரசாங்கத்துக்கு லஞ்சம்னு நேரடியா கணக்கு எழுதுவாங்களா?
C2C ஏழுமலை venkatesan
தேர்தலுக்கு முன்னாடி வரை இஷ்டத்துக்கும் Fake news பரப்பிட்டு இருந்தோம் ஜாலியா
இப்போ என்னடா சின்ன விசயத்தை கூட உடனே Fakeனு அம்பலபடுத்துறீங்க
கட்சியை நடத்துரதா வேணாமாடா ?? //
தற்குறிகள் பொலம்பல்
Every Post praising TVK govt has community notes with proofs that it was already in place or the news is fake !
என்னடா இது க்யூட் முதல்வர் நிர்வாக திறமைக்கு வந்த சோதனை!
சினிமாவுல இருக்கும் போது பத்திரிக்கைக்கு காசு குடுத்து செய்தி எழுத வைக்கற டெக்னிக் இங்க வேலைக்கு ஆகலை போலயே
இதுக்கும்... இந்த விசிக @VanniTamizhVCK டோக்கன் பயலுக்கும் எந்த சமந்தமும் இல்ல ...
ஆதாரம் இதோ 👇 👇...
போன வருஷம் இட்டரை, தடசலட்டி, பிடாரிசேரி புத்தூர் கிராமங்களுக்கு ஊர் உருவான காலத்துலருந்து முதல்முறையா பஸ் வசதி கொண்டு வரப்பட்டது
தார், சல்லி இருந்தா போதும் ரோடு போடுறதுகுன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க தற்குறிங்க
வனத்துறை அனுமதி, இயற்கை சவால்கள், நிர்வாக சிக்கல்ன்னு நிறைய இருக்கு
2024 MP நிதில கொட்டகுடில பேருந்து நிலையம் கட்டுனாங்க.
கொட்டகுடி சந்திப்புலருந்து கொட்டக்குடிக்கு தார் சாலை இருக்கு, சாலை குறுகலா இருக்கறதுனால பஸ் போக முடில.
கலெக்டர் இதுக்கு மினி பஸ் விட்டு ட்ரயல் பாத்து இப்ப பஸ் விட்டுருக்காங்க..
#ஷோபாவளவன்
தற்குறி ஜோசப் விஜய் அவர்களின் களவாணித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா நடிக்கிறப்ப தான் அடுத்த ஹீரோ படத்தை பார்த்து டப்பிங் பண்ணி நடித்து இந்த தற்குறி எல்லாம் ஏமாத்துனாரு இந்த தற்குறி ஆதரவுல இப்ப முதலமைச்சர் ஆகி அதே டப்பிங் போட்டு நடிக்கிறார் முதலமைச்சரா
20 நாள்ல
*சட்டம் ஒழுங்கை சரி பண்ண முடியாது
*கொ*லை, பாலியல் வன்கொடுமைகள் எதையும் தடுக்க முடியாது
*மின்வெட்டை சரி செய்ய முடியாது
*பாட்டிலுக்கு 10 ரூ வாங்கறத உடனே நிறுத்த முடியாது
*முதலீடுகள் ஆந்திராவுற்கு செல்வதை தடுக்க முடியாது
ஆனால் அதே 20 நாளில்
*ஏற்கெனவே திருக்குறளை அச்சிட்ட பள்ளி பைகளில் மறுபடியும் அச்சடிக்க முடியும்
*ஏற்கெனவே உருவாக்கிய புதிய சிலபஸை மீண்டும் உருவாக்கி பிரிண்ட் போட முடியும்
*புத்தகங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தை திடீர்னு சேர்க்க முடியும்
*டாஸ்மாக்ல வருவாய் அதிகரிக்க 1200 கோடி ஊழல்னு உருட்ட முடியும்
*அரசாணை இல்லாம 717 டாஸ்மாக் கடைகளை மூட முடியும், ஏற்கெனவே மூடிய கல்குவாரிகளை மூட முடியும்
*ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் இல்லாம மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் பயணிக்க முடியும், * ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு பேருந்துகளை இயக்க முடியும்
*ஏற்கெனவே அறிவித்த ஆளில்லா பத்திப்பதிவை புதுசா அறிவிக்க முடியும்.
*ஏக்கெனவே வந்த முதலீடுகளை உரிமை கொண்டாட முடியும்
*ஏற்கெனவே அறிவித்த மின்சார ஊழியர்கள் பதவி உயர்வை சொந்தம் கொண்டாட முடியும்
20 நாள்ல எத்தனை பொய்கள், பித்தலாட்டங்கள்?
எப்பா டேய் அடுத்த தேர்தல் எப்படா வரும், டைம் மெஷின் இருந்தா அங்க கொண்டுபோய் நிப்பாட்டுங்கடா.
என்னடா நடக்குது நாட்டுல ?
ஒரு அமைச்சரோட உறவினர் #மெத்தபெட்டமைன் கடத்தல் செய்யராரு 😱
அவங்க கட்சில கூட்டணி இருக்கும் கட்சி ஆபீஸ்ல #குட்கா பிடிபடுது ,
அதுவும் 2 கிலோ😱
மீண்டும் மீண்டும் பொய்யை பரப்பும் ஊடகங்களும்... ரூட் கும்பலும்...
-----------
G.O.(Ms.) No.30, Home, Prohibition and Excise Department, தேதி: 05.06.2026
தமிழ்நாட்டில் IMFS (மது), பீர் மற்றும் வைன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் (Additional Fee) உயர்த்தப்பட்டுள்ளது.
IMFS (இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம்)
ஒவ்வொரு Standard Case-க்கும் கூடுதலாக ₹90 கட்டணம் வசூலிக்கப்படும்.
Beer (பீர்)
ஒவ்வொரு Standard Case-க்கும் கூடுதலாக ₹40 கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆணையில் தெளிவாக:
"State Revenue (அரசு வருவாய்) அதிகரிப்பதற்காக Additional Fees சேர்க்கப்படுகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தில்:
❌ "கட்சி நிதி" (Party Fund) என்ற வார்த்தை இல்லை.
✅ அரசு விதிகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலித்து மாநில வருவாயை உயர்த்துவது பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது.
#TVKFails #SofaModel
அன்பின் @arivalayam@DMKITwing@dmk_youthwing@TRBRajaa கவனத்துக்கு
🔹பத்திரப்பதிவு துறையில் முழுக்க ஆன்லைன் முறை
🔹தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் செலுத்தும் ₹3 லட்சம் நீக்கம்
போன்றவை திமுக அரசில் அரசாணையாக வெளியிடப்பட்டது
புதிய அரசின் புதிய திட்டம் என பரப்பப்படும் இது போன்ற பொய்களுக்கு என்ன மாதிரியான எதிர்வினை விளக்கம் பதில்கள் கொடுக்கப்போகிறீ ர் ர்கள்.. எப்போது கொடுப்பீர்கள்..
என்றெல்லாம் அறிய எல்லோரையும் போல நானும் ஆர்வமாகவே உள்ளேன்.
மறுக்கப்படாத பொய்களுக்கு உண்மை என்கிற முலாம் எளிதாக பூசப்பட்டுவிடும். பின்னர் சாவகாசமாக அதை நீக்குவது என்பது இயலாத காரியம்
நன்றி 🙏🙏
@tn2point0@arivalayam@DMKLegalWing
இந்த செய்தியை வெளியிட்ட தினத்தந்தி மீது திமுக கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும். இப்போது இது ஆதவ் கட்டுப்பாட்டில் இருப்பதால், நிறைய பழிகளை சுமத்துவார்கள்.
மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.
ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.
கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல.
கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு,
அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?
ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?
இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி.