From the campaign days till today, I’ve had the opportunity to witness the hard work and dedication that brought you here. Proud of your journey and growth brother , and grateful to be a small part of your mission to serve the people of Maduravoyal. #RCPforMaduravoyal#tvk
🎬 A new chapter begins!
Proud to introduce the newest member of the Rohini Silver Screens family - C3 Cinemas by Rohini, now at Chengalpattu.
Built with the same passion for cinema, cutting-edge technology, and unforgettable movie experiences that define #FansFortRohini.
Chengalpattu, get ready... the show is about to begin! 🍿✨
மதுரவாயல் தொகுதி அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தேன்.
மக்கள் முன்வைத்த ஒவ்வொரு பிரச்சினையும் சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவான தீர்வு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களின் நம்பிக்கைக்கு என்றும் துணையாக இருந்து, மதுரவாயலின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்படுவோம்.
————————
Listening to the people of Maduravoyal and addressing their concerns remains my foremost responsibility.
I met residents at my constituency office, heard their grievances, and took up each issue with the respective departments for prompt action.
One concern at a time. One solution at a time. Together, we will build a better Maduravoyal.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Happy Birthday to our Hon'ble General Secretary and Hon'ble Minister for Rural Development & Water Resources, Thiru N. Anand Sir.
May your vision, dedication, and unwavering commitment to public welfare continue to touch countless lives sir @BussyAnand
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு மரியாதை செலுத்தி, மாணவர்களுடன் அவரது எளிமை, நேர்மை, கல்விக்கான அர்ப்பணிப்பு மற்றும் மக்களுக்கான சேவை குறித்து பகிர்ந்து கொண்டேன்.
பெருந்தலைவரின் உயர்ந்த சிந்தனைகளும், மக்கள் நலப் பணிகளும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
——————
On the birth anniversary of Perunthalaivar K. Kamarajar, I paid my respects to the great leader at the Government Boys’ Higher Secondary School, Porur, and had the opportunity to interact with the students about his extraordinary life, selfless leadership, and invaluable contribution to education and nation-building.
May his ideals continue to inspire generations to serve society with honesty, simplicity, and dedication.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மதுரவாயல் தொகுதியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தேன்.
மக்கள் முன்வைத்த ஒவ்வொரு கோரிக்கையும் சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவான தீர்வு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களின் ஒவ்வொரு குரலும் முக்கியமானது. அவர்களின் பிரச்சினைகள் முழுமையாக தீரும் வரை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்.
--------
Met with residents from across Maduravoyal, listened to their grievances firsthand, and took up each issue with the concerned departments for immediate attention.
Every concern matters. We will continue to follow up until solutions reach the people.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
அடையாலம்பட்டு ஊராட்சியில் சாலை சேதம், கிணற்று நீர் தொடர்பான பிரச்சினை, விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.
பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். சம்பந்தப்பட்ட துறையினருக்கு உடனடி ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து நிரந்தர தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் குறைகளை தீர்ப்பதே எங்கள் முன்னுரிமை.
——————
Visited Adayalampattu Ooratchi following complaints from residents regarding damaged roads, well water issues, inadequate playground facilities, and the need to relocate the garbage disposal ground.
Inspected all the locations in person, interacted with the public, and heard their concerns directly. The relevant departments have been instructed to examine the issues, and necessary steps will be taken to ensure appropriate and lasting solutions.
People’s concerns remain our top priority.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மின்கசிவு காரணமாக வார்டு 144-ல் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளியின் சேமிப்பு அறையில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் விரைவான நடவடிக்கையால் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பள்ளியின் இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்கவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
——————-
A minor fire incident caused by an electrical short circuit occurred in the storeroom of Chennai Primary School, Ward 144.
The fire was swiftly brought under control by the Fire & Rescue Services. Thankfully, there were no injuries.
Officials have been instructed to restore normalcy at the earliest and ensure that students’ education is not affected.
@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
ஜூலை 7ஆம் தேதி, அயப்பாக்கம் பகுதியில் தனியார் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன்.
உடனடி தற்காலிக நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அயப்பாக்கத்தின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்து, அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நிலையான நிரந்தரத் தீர்வை நோக்கி தொடர்ந்து செயல்படுவோம்.
————————
On 7th July, I met with the residents of Ayyapakkam to discuss their concerns regarding the excessive extraction of groundwater through private borewells, which has been contributing to water scarcity in the area.
As an immediate measure, the operation of these borewells has been temporarily stopped. We will continue working with the concerned authorities and residents towards a sustainable and permanent solution to protect Ayyapakkam’s groundwater resources and ensure equitable access to water for all.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Happy Birthday, @rhevanth95 Bro! ❤️
It’s been a privilege working alongside you and witnessing your commitment to the people every day. Wishing you good health, happiness, and continued success in everything you do.
Here’s to many more milestones ahead! 🎉
Truly humbled and immensely honoured to have received the blessings of the Hon'ble Chief Minister of Tamil Nadu, my beloved Anna, on my special day.
You have always been more than a leader to me . You are my inspiration, my elder brother, and the person I have always looked up to.
Your love, blessings, and words of wisdom will forever be my greatest strength.
Tamil Nadu is truly blessed to have your visionary leadership, and I pray that you continue to guide our beloved state for many more years to come.
Love you always, my dearest Anna. Forever grateful. ❤️
இன்று, வார்டு 144-இல் உள்ள கந்தசாமி நகர் பகுதியில், மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே நேரில் சந்தித்து, பட்டா தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தோம். அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கி, விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியையும் வழங்கினோம்.
----------------
Today, I visited Kandhasami Nagar, Ward 144, and met the residents on the ground in their own neighbourhood to discuss the long-pending patta issue. I listened to their concerns firsthand, explained the possible solutions, and assured them of my committed efforts to secure a fair and timely resolution.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Started the week working closely with our MLA @rhevanth95 on public grievances, field feedback, and follow-ups with officials and cadres.
Behind every resolved issue, there are countless conversations and constant effort.
The work continues.
#tvk#maduravoyal#publicservice
மதுரவாயல் வேல் நகர் பகுதி மக்களிடமிருந்து, நீண்ட காலமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. இந்த பிரச்சினை என் கவனத்திற்கு வந்த உடனே சம்பந்தப்பட்ட துறையினருடன் ஒருங்கிணைந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பும், அவர்களின் குறைகளுக்கு உடனடி தீர்வும் எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும்.
----------------------
Received a complaint from the residents of Vel Nagar, Maduravoyal, regarding a damaged and deteriorated electricity pole that had remained unattended for a long time. As soon as the issue was brought to my notice, immediate action was initiated in coordination with the concerned department, and the old pole has now been replaced with a new one, ensuring the safety of residents.
People's concerns will continue to receive prompt attention and swift action.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
கொளுத்தும் வெயில் நிலவும் தமிழ்நாட்டில், குளிர்சாதன வசதி கொண்ட பொதுப் போக்குவரத்து ஒரு ஆடம்பரம் அல்ல; அது மக்களின் அடிப்படைத் தேவையும் மரியாதையும் ஆகும்.
இனிமேல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
மக்கள் வியர்வையில் பயணிக்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது! ஒவ்வொரு தமிழனும் கண்ணியத்துடனும் வசதியுடனும் பயணிக்க உரிமையுடையவர்!
“எளிய மக்களுக்கும் உலகத் தர வசதிகள்” – அதுவே புதிய தமிழ்நாட்டின் அடையாளம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்காக, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, போரூர் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாணவர்களின் பார்வை குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களின் உடல் நலத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் இந்த சிறப்பான முயற்சி பாராட்டுக்குரியது.
இந்த அர்த்தமுள்ள முயற்சியை முன்னெடுத்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
-------------------
Honoured to attend the Eye Screening Camp organized for the students of Government Girls Higher Secondary School, Porur, as the Chief Guest.
This meaningful initiative, conducted in association with Dr. Agarwal Eye Hospital, Porur, will help in the early detection of vision issues and ensure better eye health for our young students.
My sincere appreciation to Dr. Agarwal Eye Hospital and everyone involved in making this initiative possible. Together, let us continue working towards a healthier future for our children.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@imrajmohan@dragarwals_eye
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
தமிழக மக்களின் நம்பிக்கையாகவும், புதிய அரசியலின் அடையாளமாகவும் திகழும் அவரின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டிக் கொண்டிருக்கிறது.
மக்களுக்காக தன்னலமின்றி உழைத்து வரும் அன்புத் தலைவர் அவர்களுக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், அளவற்ற மகிழ்ச்சி மற்றும் மக்கள் சேவையில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------
It was a privilege and a moment of great happiness to personally meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay avl., and convey my heartfelt birthday wishes to him.
A leader who has emerged as the voice of hope for millions and a symbol of a new political era, he continues to guide Tamil Nadu towards greater progress, development, and people-centric governance.
I extend my warmest wishes for his good health, long life, happiness, and many more years of successful service to the people of Tamil Nadu.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
#HBDCMJosephVijay
📲 Follow Rhevanth Charan Connect
X: https://t.co/OFVWb5rBoH
Instagram: https://t.co/MsBr1U6v4l
Facebook: https://t.co/WDAgh5mLzl
📢 மதுரவாயல் மக்களே, உங்கள் குரல் - எங்கள் செயல்!
மதுரவாயல் தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்சினைகளை எங்கள் அலுவலகத்திடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் Rhevanth Charan Connect என்ற புதிய சமூக வலைதள பக்கங்களை தொடங்கியுள்ளோம்.
இனி உங்கள் புகார்கள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை இந்த பக்கங்கள் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம். மேலும், பெறப்படும் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் பகிரப்படும்.
இதன் மூலம் மக்களுக்கும் எங்கள் அலுவலகத்திற்கும் இடையிலான தொடர்பு மேலும் எளிமையாகவும், வெளிப்படையாகவும் அமையும்.
ஒன்றிணைந்து, சுத்தமான, பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த மதுரவாயலை உருவாக்குவோம். 🤝
--------------------
To make it easier for residents of Maduravoyal Constituency to connect with our office, we have launched Rhevanth Charan Connect - a dedicated platform where you can directly submit your grievances, concerns, suggestions, and civic issues.
More importantly, we will regularly update these pages with details of grievances received and the actions taken on them, ensuring greater transparency, accountability, and faster communication between the public and our office.
Together, let us build a more responsive administration and work towards making Maduravoyal a better, cleaner, and more liveable constituency for everyone.
@TVKVijayHQ@BussyAnand
One month into this journey, grateful to work alongside our MLA, @rhevanth95 , as his Secretary. Every day brings new lessons in public service. Looking forward to contributing towards his vision for Maduravoyal as a model constituency for the state .
Just the beginning.