பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பு அழைப்பாளராக யார் அழைக்கப்படுகிறார்கள்?
அதை கேள்வி கேட்காத நாம் ஒரு நடிகர் முதலமைச்சர் என்று பேசுகிறோம்.
இன்றைக்கு நிறைய பிள்ளைகளின் மனநிலை- நாம் உயர வேண்டுமெனில் படிக்க வேண்டியதில்லை...பட்டம் பெற வேண்டியதில்லை
சாதிக்க வேண்டியதில்லை
ரீல்ஸ் போட்டால் போதும்... நிறைய பாலோவர்ஸ் இருந்தால் போதும் என்பதுதான்.
தனக்கு பிடித்த இன்ஸ்டா பிரபலம் ப்ரோமொட் செய்யும் பொருட்களை ஆராயாமல் வாங்கும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம்.
குறை சொல்வதை விட நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதும், கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராக சாதித்தவர்களை அழைக்கும் கல்லூரியில் மட்டும் சேர்ப்பதும், அனைத்து மக்களையும் கேலி செய்யாமல் , கோவப்படாமல் அரசியல் கற்பித்து அவர்களை ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க வைப்பதும் தான், இப்பொழுது கவலைப்படுகிற ஒவ்வொரு தனிமனிதனும் செய்ய வேண்டிய வேலை
இதை நான் சொல்வதற்காக, தோற்ற நீங்கள் எல்லாம் பேசலாமா? என கேட்கும் அன்பு நண்பர்களுக்கு,
தேர்தலில் தோற்ற நல்லக்கண்ணு மக்கள் விரும்பாதவரும் அல்ல...
இதுவரை வென்றவர்கள் அனைவருமே தியாகிகளும் அல்ல...
மக்கள் எல்லாரும் விரும்பும் கார்ப்பரேட் குளிர்பானங்கள் எல்லாம் உடலுக்கு ஆரோக்கியமானதுமல்ல..
மக்களில் குறைவானோர் விரும்பும் இளநீர் உடலுக்கு கெடுதியானதும் அல்ல...
பிற வேட்பாளர்கள் எல்லாம் வந்தால் செய்வோம் எனச் சொல்ல, நாங்கள் வருமுன்னே செய்ததையும் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொல்லி ஓட்டு கேட்டும், மற்ற மூன்று வேட்பாளர்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வழக்குகள் வாங்கியும், குளச்சல் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக அதிக வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்தும், அதிக நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தும், 6.26% மக்களின் நம்பிக்கையைத் தான் பெற முடிந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட தூர பயணம் என்பது தெரிந்து தான் களத்தில் நிற்கிறோம். அதனால் குளச்சல் தொகுதி உறவுகளே தளர்ந்து விட வேண்டாம், மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம், அரசுக்கு எதிராக நாம் தொடுத்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவோம், அரசு நம் மீது போட்ட வழக்குகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு ஏறி இறங்குவோம், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்காகவும், நீதிமன்ற செலவுகளுக்காகவும் செலவு செய்ய அவரவர் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவோம். உடல் நலனிலும் அக்கறை கொள்வோம், நாம் தமிழ் தேசியத்திற்காக உழைத்த உழைப்பு வீண் போகாது, இப்போது அறுவடை செய்ய முடியாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தோடு முன்னர் உழைத்ததை விட கடினமாக உழைப்போம். மக்களை தொடர்ந்து சந்திப்போம், மக்களோடு நிற்போம்.தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். அதை நிச்சயம் நம் மக்கள் உணர்வார்கள் எனும் நம்பிக்கையோடு, என்றும் மக்கள் பணியில், தமிழ் தேசிய பாதையில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
பேரூராட்சி மன்ற உறுப்பினர் - கப்பியறை
நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
நாங்கள்
"மற்றவைகள்.."
⚫
நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது.
மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை.
கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம்.
தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம்.
ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி.
அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது.
எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல.
117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.
மக்களுக்காக போராடுகின்ற போராளிகள்.
எங்களைப் போல மற்ற யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்".
🔸
எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர்.
கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர்.
தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர்.
அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..?
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்."
🔹
60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை.
இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால்
சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம்.
ஆனாலும் சாதித்தார்.
கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ?
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்".
🔹
மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம்.
எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்".
🔹
நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை.
உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை.
ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன.
அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள்.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள்."
🔹
நம்பிக்கையோடு நாளை
விடியலில் நாங்கள் விழித்திருப்போம்.
விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும்.
🔹
ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் "மற்றவைகளாக" இருந்து விட்டுப் போகிறோம்.
ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை.
மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை.
பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை.
ஆனாலும் நாங்கள் "மற்றவைகள் தான்"
எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும்.
ஆனால்.
இறுதியாக ஒன்று.
இந்த "மற்றவைகள்" தான்
உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில்
அவர்களுக்காகவும் போராட இருக்கும்
இறுதியான மனிதர்கள்.
🔹
மணி செந்தில்.
காடுகளை உருவாக்கியதும், அவற்றுக்கு உயிர் கொடுத்ததும் யானைகள் தான். யானைகள் இல்லை என்றால் காடுகள் இல்லை, காடுகள் இல்லை என்றால் நமக்கு நீர் இல்லை.
Voice of SeeMan - AI series - 32
#VoiceofSeeman#Seeman4TN
காடுகளில் உயிர் சமநிலைக்கு காரணியாக இருந்து, நீர் பெருக்கத்தை அதிகரித்து மக்கள் வாழ வழி செய்யும் புலிகள்.
Voice of SeeMan - AI series - 31
#VoiceofSeeman#Seeman4TN
இந்த மண்ணில் திமுகவிற்கு மாற்று என்றால் அது நாம் தமிழர் 🔥மட்டும் தான்👌
மற்றவை எல்லாம் ஏமாற்று தான்👏
மக்களின் நலன் ,
மாநிலத்தின் வளர்ச்சி ,
இந்த பார்வையில் பேசியுள்ளார் ✅
கடைசி லைன் 👌
https://t.co/KUhXlddc7o
தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடு - சென்னை உயர் நீதிமன்றம்
#TVK#Vijay#Chennaihighcourt#News18Taminadu | https://t.co/3v5L32pLWJ
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை.. அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்...
@_ITWingNTK@Seeman4TN@idumbaikarthi
விஜய் அவர்களின் அன்பு ரசிகர்களுக்கு... நானும் விஜயை ரசித்தவந்தான்... அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான்... ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது.. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல... மக்களின் வாழ்க்கை... அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்பட போவது நாம்தான் ... நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது.. இதை படிக்கும் பொது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும்... நல்ல விசயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான்.. நீங்க பேசுங்க தம்பிகளா... நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான்... கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்.
புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல... மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்....
மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்...
@actorvijay