@news7tamil@KartiPC பாராளுமன்றம் சட்டமன்றம் உறுப்பினர் தேர்தல் நிற்பவர்களுக்கு தேர்வு எழுதி தேர்வு ஆன பிறகு தான் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் செய்வார்களா
"அரசுக்கு வரும் வருவாயை இலவசமாக மாற்றினால் எங்கு இருந்து அரசுக்கு வருமானம் வரும்" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman | #NTK | #CMVijay | #TVK | #TNGovt
இன்று 24-10-2026,ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இசை மதிவானன் மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட பொறுப்பாளர்களை கைது செய்த, ஆளும் தவெக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Seeman#NTK#TVKVijay
விசைப்படகில் ஓய்வு நேரத்தில் நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதி, கடிகை பகுதியை சேர்ந்த அண்ணன் அருள்ராஜ் அவர்கள் எழுதி பாடிய ஒரு விழிப்புணர்வு பாடல்.
#தலைவன் யாரடா...
அவர் தகுதிகள் என்னடா...♥️
சட்டப் போராட்டத்தில் வெற்றி!
பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!
தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகள், அன்புத் தம்பி கரூர் நன்மாறன் அவர்களுக்கும், அவருடன் களத்தில் இணைந்து நின்ற தம்பிகள் கோவை வழக்கறிஞர் சூர்யா, தாராபுரம் முகம்மது உசேன், ஈரோடு வழக்கறிஞர் கார்த்தி, அவினாசி வழக்கறிஞர் பகவத், தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம், கரூர் வழக்கறிஞர்கள் பார்த்திபன், இளமாறன், திண்டுக்கல் வழக்கறிஞர் மாதவன், திருப்பூர் வழக்கறிஞர்கள் சரவணன், சிராஜுதீன், நத்தம் சிவசங்கரன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டப் போராட்டத்தில் உடனிருந்து உறுதுணையாக நின்ற திருப்பூர் வழக்கறிஞரும் எனது அன்பு இளவலுமான தம்பி உமர்கயான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
இந்தப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தம்பி மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமையகச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான
உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும் !
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அண்ணன் சீமான் என்கிற தீர்க்கதரிசி கூறிய அனைத்தும் நடக்கிறது
மக்களுக்கு தேவையானது எது என்பதை காலம் அவர்களுக்கு சிறப்பாக உணர்த்தும், நாம் தமிழர் கட்சி ஒன்றே இங்கே மக்களுக்கானது, சிறந்த ஆட்சி செய்ய தகுதியானது🙏💯
@Seeman4TN@_ITWingNTK
கொட்டும் மழையிலும் கொள்கை மாறாத தமிழர் படை! 💪
நாம் தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கொட்டும் மழையிலும் கொள்கை உறுதியோடு களத்தில் இறங்கி முழங்கும் உறவுகள்!
மழை எங்களைத் தடுக்காது…
அடக்குமுறை எங்களை அச்சுறுத்தாது…
நீதிக்கான எங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது! 🔥
🚩 நாம் தமிழர் கட்சி — நீதிக்காக ஒன்றிணைவோம்!
திண்டுக்கல்
2016ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுகவின் சார்பாக நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு திமுகவின் தலைவர் ஸ்டாலின் நடத்திய வேட்பாளர் நேர்காணல் வரை சென்ற ஆர்.எஸ். முருகன் அங்கு வாய்ப்புக் கிடைக்காது, தவெகவின் பக்கம் சாய்ந்தார்.
திமுக எதிர்ப்பைத் தாங்கள்தான் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததாகக் காட்டிக்கொள்ளும் தவெக, திமுகவின் வேட்பாளர் நேர்காணல்வரை சென்றவருக்குத் தேர்தலில் வாய்ப்பு அளித்தது.
விளைவு, இப்போது நெல்லை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அந்த ஆர். எஸ். முருகன்தான்.
திமுகவிடம் சட்டமன்ற வேட்பாளர்களையும், அதிமுகவிடம் சட்டமன்ற உறுப்பினர்களையும் பிச்சை எடுத்த தவெக எந்தவகையில் தூய சக்தியாகும்?
இன்று 24-10-2026,ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இசை மதிவானன் மற்றும் 10க்கும் மேற்ப்பட்ட பொறுப்பாளர்களை கைது செய்த, ஆளும் தவெக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரமிகு நமது பாட்டனார்கள்
மருது சகோதரர்கள் திருநாள் மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாள்: ஐப்பசி 10, 27.10.2026 காலை 10 மணியளவில்
இடம்: காளையார்கோவில் (நினைவிடம்) சிவகங்கை மாவட்டம்